இளைஞர் சக்தி

சிந்தனை செய் மனமே!

அரசன் நிமியின் வம்சத்தில் உதித்தவர்கள், ஜனகரும் குசத் வஜனும். அயன் படைத்த தென்புலத்தாரின் தேவையை, அவர்களது சேவையை நிலைநாட்டிய நிமியின் குல விளக்கு ஜனகர். விதேஹ தேசத்தை ஆட்சி செய்ததால், இவருக்கு விதேஹன் எனும் பெயரும் உண்டு.

ஒருமுறை, கலப்பையால் நிலத்தை உழுதபோது, பூமியில் ஒரு குழந்தையைக் கண்டெடுத்தார். 'கலப்பை சென்ற வழிக்கு சீதை என்று பெயர்' என்கிறது அமரகோசம் (சீதாலாங்கலபத்ததி).

விதேஹனுக்கு வேதப் பொருள் கிடைத்தது. ஸ்ரீராமன் எனும் திருநாமத்துடன் அவதரித்த அறம், வேதப்பொருளுடன் இணைய வந்தது (ராமோவிக்ரஹவான்தர்ம). இந்தப் பிணைப்பை உறுதி செய்யும் திருமணத்தை, சீதா கல்யா ணத்தைச் சிறப்புற நடத்தினார் ஜனகர். 'சீதை எனக்குப் புதல்வி. நான் அவளின் பாதுகாவ லன். அறத்தை நடைமுறைப்படுத்த அவளின் துணை வேண்டும். அவளின் கைத்தலம் பற்றி, அவளை உன்னுடன் இணைத்துக் கொள்' என ஸ்ரீராமனை வேண்டினார் ஜனகர் (இயம் சீதா மமசுதா ஸஹதர்ம சரீதவ).

'அறத்தைச் செயல்படுத்தப் பயன்படும் கன்னிகை கொடையினால் தென்புலத்தாரும் மகிழ்வர்' என்கிறது தர்மசாஸ்திரம். தனக்குக் கிடைத்த சீதையை ஸ்ரீராமருக்கு அளித்து, தன் முன்னோரையும் திருப்திப்படுத்தி, ஒரே செயலில் இரண்டு அறங்களையும் நிறைவேற்றிக் கொண்டார் ஜனகர். அதுமட்டுமா?! சீதா கல்யாணத்துக்கு வந்திருந்த ஸ்ரீராமரின் மூன்று தம்பிகளுக்கும், தன் சகோதரனான குசத்வஜனின் மூன்று புதல்விகளையும் திருமணம் செய்து வைத்தார்.

அறத்தின் செயல்பாட்டில் தன்னிறைவு பெற்றவர் ஜனகர்; கர்மமே கண்ணாக இருந்தவர்; உலக இயக்கத்துக்குத் தர்மத்தின் செயல்பாடே உறுதுணை என உணர்ந்து செயல்பட்டவர். 'செயல்பாட்டுடன் இணைந்த அறநெறியால் பிறப்பின் குறிக் கோளை எட்டியவர் ஜனகர்' என்று கண்ணன் கூறுவான் (கர்மனவைஹி ஸம்ஸித்தம் ஆஸ்திகாஜனகாதய).

சுயம்வரத்தில்... 'சிவதனுசை ஏந்தி பாணம் தொடுப்பவனுக்கு, சீதை கிடைப்பாள்' என நிபந்தனை விதித்தார் ஜனகர். அரசகுமாரர்கள் பலரும் தோல்வியுற்றுத் திரும்பினர். இதனால் சோர்ந்துபோன ஜனகருக்கு, விஸ்வா மித்திரருடன் ஸ்ரீராம- லட்சுமணரின் வருகை நம்பிக்கை தந்தது. அதேநேரம், 'சீதைக்குப் பொருத்தமானவன் ஸ்ரீராமன். ஆனாலும் அழகும், மென்மையான குணமும் கொண்ட அவனால், ஆமை ஓடு போன்று கடினமாக இருக்கும் சிவ தனுசை எடுத்து, நாணேற்ற முடியுமா?' என்ற சிந்தனையும் அவருள் எழுந்தது. 'ஸ்ரீராமன் சாதித்துக்காட்ட வேண்டும்' என்று அவர் ஆசைப்பட்டார் (மதுர மூர்த்திரயம் ரகுநந்தன கடமபிருஷ்ட கடோரமிதம்தனு). 'இயலாத காரியங் களையும், ஒரு விளையாட்டாகக் கருதி செய்துமுடித்து விடுவான் இறைவன்' என்ற நம்பிக்கையும் அவர் மனதில் தோன்றியது (கர்தும் கர்த்தும் அன்யதாகர்த்தும் சக்த). உலகவியலில் பற்றற்ற ஜனகர், பேரறிவு பெற்றவர். உலக வழக்கத்தைச் செயல்படுத்துவதைக் கடமையெனக் கருதிச் செயல்பட்டவர். இவரின் எண்ணம், விஸ்வாமித்திரரின் மூலமாக ஸ்ரீராமனை செயல்பட வைத்தது.

'நம்மைப் போன்றவர்கள் கூறும் வார்த்தைகள், அர்த்தத்தையட்டிச் சொல்லப்படுபவை. ஆனால், மகான்களின் வார்த்தைகளில் அந்த அர்த்தமே தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்' என்கிறது சுபாஷிதம். ஸ்ரீராமருக்கு ஆணையிட்ட விஸ்வாமித்திரரின் வார்த்தையும் அப்படித்தான் இருந்தது. ஆக, ராமாயணத்தின் சிறப்பான திருப்புமுனைக்கு, ஜனகரின் பங்கு முக்கியமானது!

ஸ்ரீராமனைப் பிரியாத லட்சுமணன்; பிரிந்து இருந்தாலும் மனதால் அவருடன் இணைந்தே இருந்த பரதன்; தருணம் வாய்க்கும்போது செயல்படத் தயாராக- ஸ்ரீராமனின் நினைவில் இருந்த சத்ருக்னன்... என இவர்களின் படைப்புக்கு ஸ்ரீமந் நாராயணனே காரணம்.

படைப்புக்கான காரணத்தில் உள்ள சின்னச் சின்ன வேறுபாடுகளை உணர்ந்த ஜனகர், நால்வரது திருமணத்தையும் ஒன்றாக நடத்திப் பார்க்க விரும்பினார். சீதையோடு சேர்த்து ஐவரைப் பற்றிய உண்மையை உணர்ந்த ஜனகரின் உள்ளம், பற்றற்ற நிலையிலும் உலக வழக்கத்தை நடைமுறைப்படுத்த, அறத்தை வளர்க்க உதவியது.

ஜனகர் - செயலில் மன்னர்; மனதளவில் ரிஷி. அதனால்தான் அவரை ராஜரிஷி என்பார்கள். பிரம்ம ரிஷியும் ராஜரிஷியும் சேர்ந்து, ஐவரையும் இணைத்து அறத்துக்கு ஊக்கம் சேர்த்தனர்.

பூமியில் இருந்து உருவானவள் சீதை. கடமை முடிந் ததும் பூமியில் இணைந்தாள். பூமியை ஆள வந்தவர் ஸ்ரீராமர். 'ஆள்வதற்கு, பிரம்மமும் வேண்டும்; கர்மமும் தேவை' என்கிறது வேதம் (பிரம்மஷத்ரே ராஷ்ட்ரம் தாரயதம்). இந்தத் தகுதிகளைப் பெற்றிருந்த இரண்டு ரிஷிகளும், ராமராஜ்ஜியத்தின் மாட்சிமைக்கு தங்களது பங்கினை முன்னதாகவே அளித்துப் பெருமிதம் அடைந்தனர் என்று சொல்லலாம்.

'அரசகுலம், தனது யோக சக்தியால் பூதவுடலை விலக்கிக்கொள்ளும் தகுதிகொண்டது' என்கிறான் காளிதாசன். ஜனகரும், தாமரை இலைத் தண்ணீராகப் பற்றின்றி ஒட்டிக்கொண்டிருந்த உடலை, யோக சக்தியால் களைந்தார். உடலைக் களைந்ததும், விண்ணுலகில் இருந்து வந்த விமானத்தில் ஏறிய ஆத்மா, தனது பயணத்தைத் தொடங்கியது.

வழியில்... எமபுரியில் இறங்கிய ஜனகர், அங்கே தவறு செய்த வர்கள் தண்டிக்கப்படுவதைக் கண்டார். அவரது சூட்சும வடிவைத் தொட்டுச் சென்ற காற்றை, அவர்கள் சுவாசிக்க... அந்தக் காற்றே அவர்களது துயரத்துக்கு அருமருந்தாக அமைந்தது. நரகவேதனையில் ஆழ்ந்திருந்த அவர்கள் அனைவரும் ஓடி வந்து ஜனகரை வணங்கி, ''தங்களை ஸ்பரிசித்து வரும் காற்று, எங்கள் துயர்களையெல்லாம் அழித்துவிடுகிறது. எனவே, இங்கிருந்து செல்லாதீர்கள்'' என வேண்ட, ஜனகர் மனமிரங்கினார். 'இவர்களின் துன்பம் விலகு மெனில், இங்கேயே தங்கிவிடுகிறேன். சொர்க்கத்தைவிட இதுவே மேல்' எனத் தீர்மானித்தார். அப்போது அங்கு வந்த எமதர்மன், ''நீங்கள் இங்கு தங்க முடியாது'' என்று கூறி, சொர்க்கத்துக்குச் செல்லுமாறு ஜனகரைப் பணிந்து வேண்டினார்.

''இவர்களையும் இங்கிருந்து விடுவித்தால், நானும் கிளம்பிவிடுவேன்'' என்றார் ஜனகர். ''இவர்களை விடுவிக்க இயலாது. இவர்கள் செய்த தவறுகளுக்குரிய தண்டனை முடிந்ததும் தாமாகவே விடுதலை பெறுவார்கள்'' என்றான் எமன். ''சரி, என்ன செய்தால் இவர்கள் இப்போதே விடுதலை அடைவார்கள்..?'' என்று கேட்டார் ஜனகர். ''உங்களின் புண்ணியத்தில் ஒரு பங்கினை இவர்களுக்குத் தந்தால் போதும். உடனடியாக விடுதலை கொடுத்துவிடலாம்'' என்று எமன் பதிலளிக்க... அதன்படியே தனது புண்ணியத்தின் பங்கினை அளித்து, நரகத்தில் வாடியவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் ஜனகர்.

பிறகு, ''நரகத்துக்கு வந்து துயரப்படுபவரைக் கண்டு துயருற்றேனே..! இந்தத் துயரத்தைச் சந்திக்க நான் என்ன தவறு செய்தேன்?'' என்று எமதர்மனிடம் கேட்டார். ''ஒருமுறை, புல்லைத் தின்ன முற்பட்ட பசுவைத் தடுத்துவிட்டீர்கள். அதன் விளைவுதான் இந்தத் துயரம்!'' என்று எமன் விளக்க... அதன்பின், விண்ணுலகம் சென்றார் ஜனகர் என்கிறது பத்ம புராணம்.

வீட்டையும், நாட்டையும், செல்வத்தையும், உடைமைகளையும், அதிகாரத்தையும், பதவியையும் பகிர்ந்தளிப்பவர்கள் உண்டு. தான் சேமித்த புண்ணியத்தையே பங்கு போட்டுத் தந்த பாங்கு, ஜனகரின் போற்றத்தக்க அரிதான குணம்! 'உடலைத் துறந்ததும், ஒருவரது ஆன்மாவைப் பின்தொடர்ந்து வருவது, அவர் சேமித்த புண்ணியம் மட்டுமே' என்கிறது தர்மசாஸ்திரம். அந்தப் புண்ணியத்தையும் கொடையாகத் தந்தவர் ஜனகர்.

பிறருக்காக அர்ப்பணிக்கும் பண்பு மிக உயர்ந்தது என்கிறது சாஸ்திரம். தனியே வந்து நுழைந்த ஆத்மா, வெளியேறும்போதும் தனியாகச் செல்வதே சிறப்பு எனும் எண்ணத்தில், தன்னிடம் பற்றிக் கொண்டிருந்த புண்ணியத்தை, பிறரது துயர் துடைக்கப் பயன்படுத்திய ஜனகரின் உள்ளத்துக்கு நிகர் வேறு எதுவுமில்லை!

- (இன்னும் சிந்திப்போம்)