சுவாமி ஓங்காராநந்தர்

இளைய பாரதத்தினாய் வா வா வா!

விழி எழு உழை
மனதின் அமைதியை அதிகம் கெடுக்கும் குணங்களில் 'லோபம்' என்பதும் ஒன்று. இது, மனிதப் பிறவியின் அடிப்படைக் குணம் என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.

அசுரர்களது பிறவிக் குணம்- குரோதம். தேவர்களது இயல்பு- இந்திரியக் கட்டுப்பாடு இல்லாமை. இதேபோல் மனிதர்களுக்கு லோபம் பிறவிக் குணமாகும்!

பெரும்பாலான குழந்தைகளைப் பார்த்தால் இந்தக் கருத்து, உண்மைதான் என்று தோன்றுகிறது. எந்தக் குழந்தையும் தனக்குக் கிடைத்ததை, மற்ற குழந்தைக்கு மனதாரக் கொடுப்பதில்லை. இந்த லோபத்தை, கஞ்சத் தனம் என்று நம் ஊரில் குறிப்பிடுவது வழக்கம்.

நம்மிடம் உள்ள அறிவுச் செல்வமோ அல்லது பொருட்செல்வமோ, அதை பிறருடன்

பகிர்ந்து கொள்ள மனமில்லாத நிலையே 'லோபம்' எனப்படும்.

இந்த லோபத்துக்கு வர்க்க பேதமெல்லாம் கிடையாது. சேரியில் வசிப்பவன், மாளிகை வீட்டு மனிதன்... என்று எல்லோ ரிடமும் இந்தக் குணம் வித்தியாசம் பாராட்டாமல் குடியேறி விடும்.

பல நாள் பழகிய நண்பர் வீட்டுக்கு வந்தாலும், 'காபி சாப்பிடுங்களேன்!' என்று சொல்ல இந்த லோபம் அனுமதிக்காது. 'வருகிறவனுக்கெல்லாம் டீ- காபி கொடுத்தால் என்னாவது? சர்க்கரை விற்கும் விலைக்கு பழைய காலம் மாதிரி உபசரிக்க முடியுமா?' என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்வான் லோபி!

தந்தை- மகனாக இருந்தாலும்... அஞ்சுக்கும் பத்துக்கும் மனம் கசங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

லோபிகள், உடன்பிறந்தவர்களின் விஷயத்திலும்கூட கொஞ்சமும் விட்டுக்கொடுத்துப் போக மாட்டார்கள். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் முக்கால் பங்கு இது தொடர்பானவையே!

லோபிகளுக்கு நிம்மதி என்பதே கிடையாது. இவர்களுக்கு நோய் வந்தாலும்கூட... நோயைக் காட்டிலும் 'செலவு வந்து விட்டதே' என்ற எண்ணம்தான் வதைக்கும்! உறவினர்கள் எவரேனும் வந்து விட்டால், இவர்களுக்கு பயம் வந்து விடும். 'ஏதாவது பணம் கேட்பார்களோ...' என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடும். அதனால், உறவினர்களிடம் சரியாக முகம் கொடுத்தும் பேச மாட்டார்கள். சிரித்துப் பேசினால் சில்லறைக்கு வேட்டு என்பது இவர்களது சித்தாந்தம்!

இந்த லோபிகள் சதா வதைபட்டுக் கொண்டே இருக்கும்படி, இயற்கை ஓர் ஏற்பாடு செய்திருக்கிறது. அதுதான் நிலையாமை!

பணம்- காசு வந்தால், அதற்குச் செலவும் வரத்தான் செய்யும். சேர்க்கும் செல்வம்... ஏதாவது ஒரு வழியில் சென்று விடும். எனவேதான் அதற்கு செல்வம் என்று பெயராம்! செல்வத்தின் இந்தத் தன்மையே லோபிகளை வதைக்கிறது.

பணத்தைப் பெரிதாக நினைத்து, இனத்தைப் பகைத்துக் கொள்ளும் இவர்களுக்கு அன்பின் ருசி தெரியாமல் போவது அடுத்த வேதனை. எவருடனும் பழக முடியாத இதய வறட்சி இவர்களைத் தகிக்கிறது.
பணம் கிடைக்கும் என்றால், நாயாக அலைந்து திரிந்து இவர்கள் கஷ்டப்படுவது ஒரு பக்கம். சேர்த்த பணத்தை வருமானவரித் துறையினருக்குத் தெரியாமல் மறைக்க இவர்கள் படும்பாடு... முழுப் பூசணியை முழுங்கியவனின் மூச்சுத் திணறல் போன்றது. இத்தகைய கஷ்டம் மறுபக்கம். இப்படி கஷ்டப்பட்டு தாங்கள் சேர்த்த பொருளுக்குச் செலவு வந்து விட்டால், இவர்கள் ரத்தக் கண்ணீர் விட்டுப் புலம்புவது இன்னொரு துக்கம்!

தானும் அனுபவிக்க மாட்டார்கள். பிறருக்கும் கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் செல்வம்- நடு ஊரில் நச்சு மரம் பழுத்திருக்கும் கதைதான் என்று கேலி செய்கிறார் வள்ளுவர். இவர்களை, 'வைத்திழக்கும் வண்கணாளர்' என்றே குறிப்பிடுகிறார். இவர்கள் சேர்த்த செல்வம், இவர்களது மரணத்துக்குப் பிறகு வேறு எவருக்கோ பயன்படும். எனவே இவர்களை, 'வைத்து இழக்கிறவர்கள்' என்கிறார் வள்ளுவர்.

இந்த லோபி

களுக்கு, கொடுப்ப தால் வரும் சுகம் என்னவென்று தெரியாது. ஆண்க ளுக்குப் பிரசவ வலி எப்படி என்று தெரியாது. அதுபோல லோபிகளுக்கு, கொடுக்கும் சுகம் என்னவென்றே தெரியாது.
'எவராவது தான- தர்மம் செய்தால், அவர்கள் சூழ்ச்சிக்காரர்களாக இருப்பார்கள்.

சிறுமீன் போட்டு பெருமீன் பிடிப்பார்கள். இல்லையேல் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள்!' என்பது இவர்களது திடமான அபிப்ராயம்.

இத்தகையவர்கள் அழிந்து போகிறார்கள். இந்த உலகத்திலும் தான் சேர்த்த பொருளை அனுபவிக்காமல், மறுமைக்கான தான- தர்மங்களும் பண்ணாத இவர்களது வாழ்க்கை வீண்தான்!

நம்மிடம் இந்த லோபம் இருந்தால், அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆழக்குழி தோண்டி புதைத்துவிட வேண்டும். அவ்வளவு மோசமான குணம் அது.

இந்தக் குணத்தைப் போக்கிக் கொள்ள நினைத்தால், வள்ளல்களைப் பற்றிய கதைகளைப் படியுங்கள். அப்போதுதான், கொடுப்பவனை இந்த உலகம் எவ்வளவு புகழும் என்பது புரியும். மன்னர்களது படை வீரத்தை விடவும், அவர்களது கொடை வீரத்தைத்தான் ஏடுகள் முழுவதும் எழுதி நிரப்பி இருக்கிறார்கள் புலவர்கள்.

கர்ணனிடம் எவ்வளவோ தீய குணங்கள் இருந்தன. ஆனாலும் தானம் செய்யும் அவனது குணம், மற்ற குறைகளை எல்லாம் மறைத்து விட்டது. பாரதத்தில் அவனும் தனிப் பெரும் பாத்திரமாக ஒளி வீசுகிறான்!

எவன் கொடுக்கிறானோ... அவன் மீதுதான் புகழ் வந்து நிற்கும். ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் என்கிறது திருக்குறள். ஆகவே, கொடை தரும் குணத்தை வளர்க்க வேண்டும்.

பசித்த மனிதனுக்கு அன்னதானம் செய்யுங்கள். அவன் வயிறார உண்டு மனதார வாழ்த்தினால்... அந்த வாழ்த்து, பணத்தை விடவும் உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும். கொடுக்கக் கொடுக்க உங்கள் மனது விரிவடையும். இதயம் மலர்ந்து விரிந்தால் அதுவே ஆனந்தம்.

ஒரு பொருளை வைத்திருப்பதால் வரும் இன்பத்தை விட, அதை தானம் செய்வதால் வரும் இன்பம் நூறு மடங்கு அதிகம் என்பார்கள். ஈசாவாஸ்யம் எனும் உபநிஷத் ஒன்று, 'உன்னை நீ காப்பாற்ற நினைத்தால், உன்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து விடு' என்கிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வார்...

ஒரு காகம் கருவாட்டுத் துண்டைக் கவ்விக் கொண்டு பறந்ததாம். இதைப் பார்த்த மற்ற காகங்கள் அதைத் துரத்தித் துரத்திக் கொத்தி இம்சித்தனவாம்.

கருவாட்டைக் கவ்விய காகம் அதைத் தானும் தின்ன முடியாமல், பிற காகங்களுக்கும் விட்டுத் தராமல்... அந்த காகங்களால் கொத்துப்பட்டு வேதனைப் பட்டதாம். கடைசியில் சலித்துப் போய், கருவாட்டைக் கீழே போட்டதாம். இப்போது, மற்ற காகங்கள் துரத்தவில்லை. 'அப்பாடா!' என்று பெருமூச்சு விட்டதாம் அது!

லோபிகள், கருவாட்டைக் கவ்விய காகம்போல் கஷ்டப்பட்டாக வேண்டும் என்பார் அவர்.

தேவலோகத்தில் ஒரு கதை.

ஒரு பெரிய அண்டா முழுக்க அமிர்தம் இருந்ததாம். 'அமிர்தம் தங்களுக்கே' என்று தேவர்களும் அசுரர்களும் அடித்துக் கொண்டார்கள். இரு தரப்பினரையும் அழைத்த கடவுள், அவர்களின் கைகளை நேராக நீட்டச் சொல்லி, மூங்கில் பிளாச்சை (பிளக்கப்பட்ட மூங்கில் பகுதி) வைத்து கட்டி விட்டார்!

பிறகு, 'இனி எப்படி சாப்பிடுவீர் களோ சாப்பிடுங்கள்' என்று கூறி, தேவர்களுக்கு முன்பாக ஒன்று; அசுரர்களுக்கு முன்பாக ஒன்று... என இரு பாத்திரங்களில் அமிர்தத்தை நிரப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து கடவுள் திரும்பி வந்தார். அசுரர்களின் பாத்திரத்தில் அமிர்தம் அப்படியே இருந்தது. தேவர்களின் பாத்திரம் காலியாக இருந்தது!

மூங்கில் பிளாச்சினால் கைகள் கட்டப்பட்டிருந்த தால்... அமிர்தத்தை, தானே எடுத்துச் சாப்பிட முடியாது. ஆனால், மற்றவருக்கு ஊட்டிவிடலாமே! அதன்படியே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தனர் தேவர்கள். ஆனால் அசுரர்கள்... அமிர்தப் பாத்திரத்தில் அடுத்தவன் கை வைக்காதபடி பார்த்துக் கொண்டார்களாம்!

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்று சும்மாவா சொன்னார்கள்?!

சந்திப்போம்...
படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பணம் படுத்தும் பாடு!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் சிறந்த பேச்சாளரும் கூட! இவர் ஒருமுறை, டாக்சிக்காரர் ஒருவரிடம், ''பி.பி.சி. ரேடியோ நிலையத்துக்குச் செல்ல வேண்டும். வருகிறாயா?'' என்று கேட்டார்.

டிரைவருக்கு சர்ச்சிலை அடையாளம் தெரியவில்லை. ''இன்னும் சற்று நேரத்தில் பி.பி.சி. ரேடியோவில் சர்ச்சில் பேசப் போகிறார். அதைக் கேட்க வேண்டும். என்னால் வர இயலாது!'' என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த சர்ச்சில், அவருக்குப் பணம் பரிசளித்தார்.

அதை வாங்கிக் கொண்ட டிரைவர், ''நீங்கள் மிக நல்லவர். உங்களைப் புறக்கணித்து விட்டு சர்ச்சிலின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை. வண்டியில் அமருங்கள்... நாம் போகலாம்!'' என்றான்.

சர்ச்சிலால் ஒன்றும் பேச முடியவில்லை!

காசிதாசன், வந்தவாசி

வீடு வரை வந்த குரு பக்தி!

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந் தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தியாகராச செட்டியார்.

இவர் மீது மிகுந்த பக்தியும் நன்றியும் கொண்டிருந்தார்

உ.வே.சாமிநாத ஐயர்.

பிற்காலத்தில், சென்னை- திருவல்லிக் கேணியில், தான் கட்டிய வீட்டுக்கு, 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டு, தனது நன்றி மறவாமையை வெளிப் படுத்தினார் உ.வே.சா.!

எஸ். விஜயலட்சுமி, சென்னை-88