சுகி.சிவம் பதில்கள்!

கேள்வி - பதில்

காம உணர்வை தூண்டும் சிற்பங்கள் கோயில்களில் தேவையா?

வறுமை, இறைவன் அளித்த தண்டனையா?

த. சத்தியநாராயணன், அயன்புரம்

இல்லை. தனி மனிதர்களது பிழைகளும் சமூகத்தின் பொறுப்பின்மையுமே வறுமைக்குக் காரணம். எல்லோரும் நேர்மையுடன் சேர்ந்து முயன்றால், வறுமைக்கு வறுமை வந்து விடும்!

கோயில்களில், காம உணர்வைத் தூண்டும் சிற்பங்கள் இருக்கின்றனவே?

- பிருந்தாமணி, நாகர்கோவில்

'காமத்திலிருந்து கடவுளுக்கு' என்ற தலைப்பில் ஓஷோ பேசிய பேச்சில், உங்களது கேள்விக்கான பதில் உள்ளது

கஜுராஹோ... இந்த பூமியிலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஒரு ஞாபகச் சின்னம். ஆனால், மறைந்த ஸ்ரீபுருஷோத்தம்தாஸ் தாண்டனும் அவர் நண்பர்களும் கஜுராஹோவின் சுவர்களை சாந்து பூசி, மறைத்து விட வேண்டும் என்று எண்ணினர்.

ஏனென்றால், அந்த சிற்பங்கள் மக்களிடம் காம உணர்வுகளைத் தூண்டி விடும் என்று அவர்கள் கருதினர். இதைக் கேள்விப்பட்ட நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். 'இந்த சிலைகளின் முன் மக்கள் அமர்ந்து தியானம் செய்தால், அவர்கள் காமத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்' என்று இந்த சிலைகளை வடித்தவர்கள் எண்ணினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த சிலைகள் தியானத்துக்குரிய பொருள்களாக இருந்தன. இது, நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது.

அதிகமாக காமவசப்படும் மக்கள், கஜுராஹோ கோயிலுக்குச் சென்று இந்த சிலைகள் முன் அமர்ந்து தியானம் செய்து, அவற்றில் தம்மை இழந்து விடும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

தலைக்கு மேல் உள்ள வேலைகளை விட்டு விட்டு... மற்றவர்கள் சண்டை போடுவதை, அரை மணி நேரமாக நின்று வேடிக்கை பார்ப்பீர்கள். அதேபோன்று குத்துச் சண்டை போட்டிகள் நடக்கும் இடத்துக்கும் செல்கிறீர்கள். இவையெல்லாம் ஏன்?

இந்த விஷயங்களில் எல்லாம் ஒருவிதமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளன. இரண்டு பேர் சண்டையிடுவதை நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்குள் ஆழத்தில் இருக்கும், 'சண்டை போட வேண்டும்!' என்கிற உணர்வு திருப்திப்படுத்தப்படுகிறது. அந்த உணர்வு வலுவிழக்கிறது. உங்களுக்குள் உள்ள உணர்வு வெளியே தள்ளப்படுகிறது. அதனால் நீங்கள், மேலும் அமைதி நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள்.

எனவே ஒருவன், குறிப்பிட்ட இந்த சிற்பங்களின் முன்னால் அமர்ந்து தியானம் செய்தால், அவனுக்குள் இருக்கும் காமப் பித்து, நீர் கொதித்து ஆவியாவது போல், மாயமாகி விடும்!
ஒருவன் மனநோய் மருத்துவரிடம் சென்றான்.

அவனுக்குத் தன் முதலாளியின் மீது பெருத்த கோபம். முதலாளி ஏதாவது கூறினால், உடனே கோபமாகி விடுவான்; தனது செருப்பைக் கழற்றி அவரை அடித்து விடலாமா என்று கூட எண்ணுவான். ஒரு கட்டத்தில்... அவனுக்குத் தன்னைப் பற்றியே பயம் வந்து விட்டது. 'என்றாவது ஒரு நாள் முதலாளியை அடித்து விடுவோமோ?' என்ற பயத்தில், செருப்புகள் அணியாம லேயே வேலைக்குச் சென்றான்.

என்றாலும் அவனால், செருப்புகளை மறக்க முடியவில்லை. முதலாளியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் கை தானாகவே கால்களை நோக்கிச் செல்லும்... செருப்பைக் கழற்ற! ஆனால், நல்லவேளையாக... அவன்தான் செருப்புகள் அணிவது இல்லையே! இன்னும் சில தருணங்களில்... பேனாவைத் திறந்தால், உடனே செருப்பு படம் வரைய ஆரம்பித்தான்! நாளாக நாளாக... அடுத்தவர் செருப்பையாவது கழற்றி முதலாளியை அடிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றியது!

இந்த நிலையில்தான் மனநல மருத்துவரை நாடினான்.

'கவலைப்படும்படி ஒன்றும் இல்லை' என்ற மருத்துவர், தகுந்த ஆலோசனைகளும் வழங்கினார். வீட்டில், முதலாளியின் படத்தை மாட்டி வைத்து, ஒவ்வொரு நாளும் காலையில்- ஐந்து முறை செருப்பால் அடிக்கும்படி அறிவுறுத்தினார். அந்த போட்டோவை, அவன் அலுவலகத்துக்குச் செல்லும் முன் மிகவும் பக்தியோடு அடிக்க வேண்டும் என்றும், ஒரு நாள் கூட தவற விடக்கூடாது என்றும் கூறினார். அதேபோல், அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் இதே சடங்கை மீண்டும் செய்ய வேண்டும் என்றார்.

அப்படியே செய்ய ஆரம்பித்தான். முதல் நாள், முதலாளியின் படத்தை ஐந்து முறை செருப்பால் அடித்து விட்டு அலுவலகத்துக்குச் சென்றவன் ஒரு புதிய உணர்வைப் பெற்றான். முதலாளியைப் பார்த்தபோது, முன்பு போல கோபம் வரவில்லை. பதினைந்து நாட்களுக்குள் அவன் தனது முதலாளிக்கு மிகவும் அடக்கமான தொழிலாளியாகி விட்டான். முதலாளியும் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தார். 'நீ மிகவும் அடக்கமானவனாக, சொன்ன சொல் கேட்பவனாக, பணிவுள்ளவனாக ஆகிவிட்டது எதனால்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'தயவுசெய்து அதை மட்டும் கேட்காதீர்கள். கேட்டால் மீண்டும் குழப்பமாகி விடும்!' என்றான்.

கஜுராஹோ, கோனார்க், பூரி போன்ற கோயில்கள், இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ளன. இதுபோன்ற கோயில்கள் முழு அர்த்தமுடையவை. எவருடைய மனமாவது அதிக காமப்பித்து பிடித்திருந்தால், அவர்கள் அங்கே சென்று தியானம் செய்ய வேண்டும். அங்கிருந்து திரும்பும்போது மன அமைதியுடன் வரலாம்!

சாமர்த்தியம்- திறமை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

- ரா. பிரபு, கல்லிடைக்குறிச்சி

நண்பர்கள் இருவர் காட்டு வழியாகப் பயணித்தார்கள். ஓரிடத்தில் புலி உறுமும் சத்தம் கேட்டது!

''இருவரும் ஓடத் தயாராக வேண்டும்!'' என்று எச்சரித்த ஒரு நண்பன் ஓட யத்தனித்தான்.

மற்றவனோ, ''முட்டாள்... புலியை விட வேகமாக ஓட நம்மால் முடியாது. அவ்வளவு திறமை நமக்கேது?'' என்றான்.

இப்போது முதலாமவன், ''உண்மைதான். புலியை விட வேகமாக ஓட முடியாவிட்டாலும் உன்னைவிட வேகமாக ஓடினால், நான் பிழைத்துக் கொள்வேன் அல்லவா!'' என்றபடி ஓட ஆரம்பித்தான்.

திறமை இல்லாவிட்டாலும், சாமர்த்தியம் உள்ளவன் பிழைத்துக் கொள்கிறான்.

பிறப்பால் உயர்வு- தாழ்வு பார்ப்பது பிழைதானே?

- சி.உ. வடிவேல், தூத்துக்குடி

நிச்சயம் பிழைதான்! வாழ்வும் எண்ணங்களுமே நமது உயர் வையோ தாழ்வையோ தீர்மானிக்க வேண்டும்.

கங்கையில் குளித்துவிட்டு படியேறிய துறவி ஒருவர் மீது தாழ்த்தப்பட்ட ஒருவரது மேலாடை பட்டு விட்டது.

கோபம் கொண்ட துறவி, தம் கையிலிருந்த கமண்டலத்தால் 'ணங்'கென்று தாழ்த்தப்பட்டவரை அடித்து விட்டு, ''பாவி... நான், மறுபடியும் போய் குளிக்க வேண்டும்!'' என்று கத்தினார்.

தாழ்த்தப்பட்டவரோ, ''சுவாமி... நீங்கள் குளித்தாலும் குளிக்காவிட்டாலும்... நான் மறுபடியும் குளித்தாக வேண்டும். ஏனெனில், உங்களது கோபம் செம்பின் மூலம் என்னைத் தீண்டி விட்டது. கோபம் மிக மிகக் கீழானது அல்லவா? அதனால் நான் குளிக்க வேண்டுமே சுவாமி!'' என்றார்.

உயர்வு- தாழ்வை பிறப்பு நிர்ணயிப்பதில்லை; குணம்தான் நிர்ணயிக்கிறது!

(இன்னும் வரும்)
படம் கே. ராஜசேகரன்

ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும்படி ஏதாவது ஒரு செய்தி சொல்லுங்களேன்.

- சி. பாலாஜி

அன்னைக்குக் காச நோய். தந்தைக்கு மேக நோய். இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை குருடு. இரண்டாவது இறந்தே பிறந்தது. மூன்றாவது குழந்தைக்குக் கை-கால் ஊனம். நான்காவது குழந்தைக்குத் தாயின் சீதனமாகக் காச நோய்!
அந்தப் பெண் மறுபடியும் கர்ப்பம். 'அவளின் கருவை

அழிப்பதா, வேண்டாமா?' என்று இனம் புரியாத குழப்பம் டாக்டருக்கு. தன் சக டாக்டரிடம் ஆலோசனை கேட்டார்.

அவர், 'இவ்வளவு கஷ்டமுள்ள குடும்பத்துக்கு இன்னொரு குழந்தை தேவையா? அது என்ன குறைபாடோடு பிறக்குமோ! பேசாமல் கருவைக் கலைத்து விடுங்கள்!' என்று அறிவுறுத்தினார்.

ஆனால், அந்த டாக்டர் அப்படிச் செய்யவில்லை. ஐந்தாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே, உலகம் போற்றும் இசைக் கலைஞன் பித்தோவன்.

அவரும் செவிப்புலன் பாதிக்கப்பட்டவரே!

சிலப்பதிகாரத்தை இரண்டே வரிகளில் சொன்னீர்களாமே? அதை எங்களுக்கும் சொல்ல முடியுமா?

- கே. ராமு

பரத்தை பத்தினியானாள் - மாதவி;

பத்தினி பகவதியானாள் - கண்ணகி!

இன்றைய இளைய தலைமுறையின் வளர்ச்சி, வாழ்க்கை முறை மற்றும் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் ஆகியவை குறித்துக் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி. சிவம் இந்தப் பகுதியில் பதில் தருகிறார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

சுகி. சிவம் பதில்கள்,
இளைஞர் சக்தி, சக்தி விகடன்,
34, கிரீம்ஸ் ரோடு, சென்னை- 600 006.