தகவல்கள்

பிரசாதம் சாப்பிடுவதிலா பக்தி?
ஒரு முறை, பகவான் ரமணர் பக்தர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அவர் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன், நெல்லூரிலிருந்து வந்திருந்த அன்பர் ஒருவர் அருகில் வந்து, ''எனக்குச் சிறிது பிரசாதம் கொடுங்கள்!'' என்று கேட்டார். ரமணர் தனது உணவில்

இருந்து சிறிது கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் அந்த அன்பர். ஆனால் ரமணர், ''சாப்பிடுபவன்... 'நான்' என்ற எண்ணம் இல்லாமல் சாப்பிட்டால் அதுவே பிரசாதம்தான்!'' என்று கூறி விட்டார்.

பிறகு சாப்பிட்டு முடிந்ததும் அந்த அன்பரை அழைத்த ரமணர், ''உங்களுக்கு பிரசாதம் தந்தால், மற்றவர்களும் என்னிடம் பிரசாதம் கேட்பார்கள். அப்படி எல்லோருக்கும் கொடுத்து விட்டால், எனது இலையில் ஒன்றும் மிஞ்சாதே!'' என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டவர், மேலும் தொடர்ந்தார்

''எனது இலையில் இருக்கும் உணவில் ஒரு பிடியைப் பிரசாதமாக சாப்பிடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது? இதுவா பக்தியைக் காட்டுகிறது? உள்ளத்தில் பக்தி

இருக்க வேண்டும். அதுவே நிறைவானது; அதுவே போதுமானது!'' என்றார்.

- நெ. இராமன், சென்னை-74

நேருவிடமே கணக்கு கேட்டார்!

ஜவஹர்லால் நேரு வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த போது, அவரின் தந்தை மோதிலால் நேருவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், ''நீ செய்யும் செலவுகளுக்குக் கணக்கு எழுதவும்'' என்று குறிப்பிட்டிருந்தார் மோதிலால் நேரு.

இதைப் படித்த ஜவஹர்லால் நேரு தன் தந்தைக்கு இப்படி பதில் எழுதினார் ''என் மேல் தங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கணக்கு தேவையில்லை. என் மேல் நம்பிக்கை இல்லை எனில், நான் தரும் செலவு கணக்குகளிலும்

தங்களுக்கு நம்பிக்கை வராது!''

_ பி. கோவிந்தசாமி, ஊத்தங்கரை

நோபல் பரிசையே மறுத்தார்!

மகான் ஸ்ரீஅரவிந்தருக்கு, 'நோபல் பரிசு' தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் சமாதி அடைந்து விட்டார். எனவே அரவிந்தருக்கு அளிக்கவிருந்த நோபல் பரிசை, அவரின் முக்கிய சீடரான 'அன்னை'க்குக் கொடுக்க விரும்பினார்கள்.

ஆனால் அன்னை, ''நான் ஒரு கருவி மட்டுமே. இயக்குவதெல்லாம் ஸ்ரீஅரவிந்தரே.

எனது எண்ணங்களும் அவற்றைச் செயல்படுத்தும் ஆன்மிக சக்தியும் ஸ்ரீஅரவிந்தருடையதே. ஆதலால், வெறும் கருவியான என்னை, பெயருக்கும் புகழுக்கும் ஆளாக்குதல் சரியில்லை!'' என்று கூறி, நோபல் பரிசையே பெருந்தன்மையுடன் மறுத்து விட்டார்!

_ எஸ். விஜயலட்சுமி,சென்னை-88

திருடனுக்குத் தெரிந்த மரியாதை!

பெல்ஜியம் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் மேட்டர்லிங்க். இவருக்கு, தான்

எழுதும்போது எவராவது குறுக்கே பேசினால் பொல்லாத கோபம் வரும்!

ஒரு முறை, வீட்டில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார் மேட்டர்லிங்க். அப்போது வெளியில் சென்றிருந்த அவரின் மனைவி வீடு திரும்பினார். கணவருக்குத் தொந்தரவு தரக் கூடாது என்பதற்காக சந்தடியில்லாமல், தனது அறைக்குச் சென்றவர் அதிர்ந்தார். பதட்டத்துடன் கணவரிடம் ஓடி வந்து, ''யாரோ எனது நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!'' என்று அலறினாள்.

மனைவியின் கூச்சல் மேட்டர்லிங்குக்குக் கோபத்தை வரவழைத்தது. ''ஒரு திருடன் எனது வேலைக்குக் காட்டும் மரியாதையைக்கூட, உனக்குக் காட்டத் தெரியவில்லையே?'' என்று பதிலுக்குக் கத்தினார் மேட்டர்லிங்க்.

காசிதாசன், வந்தவாசி