இளைஞர் சக்தி

தகவல்கள்

தேரை உணர்த்திய தெய்வ சக்தி!

மராட்டிய மன்னனான வீர சிவாஜி பெரிய கோட்டை ஒன்று கட்டினார். அதற்கான பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கட்டடப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வீர சிவாஜியின் மனதில், 'இவ்வளவு தொழிலாளர்களுக்கும் நான் அல்லவா உணவு அளிக்கிறேன்!' என்ற அகந்தை எழுந்தது. இதை, அருகில் இருந்த ஸமர்த்த ராமதாஸர் (வீர சிவாஜியின் குரு) புரிந்து கொண்டார். தன் சீடனுக்குத் தகுந்த புத்தி புகட்ட எண்ணினார்.

வீர சிவாஜியைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்தார். ''சிவாஜி, நீ செய்யும் அறப்பணிகளுக்கு அளவே இல்லை. இதோ... இங்கே பணி செய்யும் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு நீதானே உணவளிக்கிறாய்? உண்மையில், உனது பணி மகத்தானது!'' என்று வாயாரப் புகழ்ந்தார். ஏற்கெனவே, தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த வீர சிவாஜியின் அகந்தை, குருநாதரின் பாராட்டுகளால் மேலும் அதிகரித்தது.

ஒரு நாள், வீர சிவாஜியுடன் நடந்து கொண்டிருந்தார் ராமதாஸர். வழியில், ஒரு பாறை தென்பட்டது. உடனே, ''சிவாஜி, இந்த பாறையை உடை!'' என்றார் அவர். மறுகணம் அதை உடைத்தெறிந்தார் சிவாஜி. அப்போது, அந்தப் பாறைக்குள் இருந்து தேரை ஒன்று குதித்தோடியது. கூடவே சிறிது தண்ணீரும் தெறித்தது. இதைக் கண்ட சிவாஜிக்கு வியப்பு! அவரைப் பார்த்துப் புன்னகைத்த ராமதாஸர், ''சிவாஜி, இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கு உணவு அளித்தது யார்?'' என்று கேட்டார்.

இதைக் கேட்ட வீர சிவாஜிக்கு, சவுக்கால் அடித்தது போலிருந்தது! குருநாதரது கேள்விக்கான உட் பொருளை சட்டெனப் புரிந்து கொண்டார். தனது அகந்தையை நினைத்து வெட்கமடைந்தார். ''குருவே! என்னை மன்னியுங்கள். வீண் அகந்தைக்கு இடம் கொடுத்து விட்டேன். எல்லாம் இறைவனது செயல். நம்மால் ஆவது ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்!'' என்று ராமதாஸரின் கால்களில் வீழ்ந்தார்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி-6

திப்பு சுல்தான் வியந்த தீர்ப்பு!

மைசூரை திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, அவரிடம் சிக்கலான வழக்கு ஒன்று வந்தது.

ஒரு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையட்டி தேரோட்டம் நடைபெற்றது. ஸ்வாமி விக்கிரகத்தை அழகாக அலங்கரித்து தேரில் அமர்த்தி, பக்தகோடிகள் வலம் பிடித்து இழுத்து வந்தனர்.

ஓரிடத்தில், பெரிய மரக்கிளை ஒன்று தேர் பவனிக்குத் தடையாக இருந்தது. அந்தக் கிளையை வெட்டி விடலாம் என்று முடிவு செய்தனர். இதற்கு, அந்தப் பகுதியில் வசித்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ''இந்த மரம் எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட மரம். இதில் எங்களின் குலதெய்வம் குடிகொண்டிருக்கிறது. கிளையை வெட்டினால் தெய்வக் குற்றத்துக்கு ஆளாவீர்கள்!'' என்று தடுத்தனர்.

கோயில் தரப்பினரோ வந்த வழியில் திருப்பி இழுத்துச் செல்வதை அபசகுனமாகக் கருதினர். தவிர, வேறு வழியில் தேரைக் கொண்டு செல்லவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த இக்கட்டான சூழலில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றியது. வன்முறை வெடிக்கும் அபாயம் தெரிந்தது. ஊர்ப் பெரியவர்கள், விஷயத்தை திப்பு சுல்தானிடம் கொண்டு சென்றனர்.

இரு தரப்பினரும் கூறிய விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்டறிந்த திப்பு சுல்தான் யோசித்தார். 'இந்த வழக்கில் நான் தீர்ப்பு சொல்வது சரியல்ல!' என்று தயங்கினார். இறுதியில், இந்த வழக்குக்குத் தீர்ப்பு சொல்லும் தகுதி வாய்ந்தவர் அப்பாஜியே என்ற முடிவுக்கு வந்தார். உடனடியாக அப்பாஜியை வரவழைத்து, வழக்கை அவரிடம் ஒப்படைத்தார்.

அப்பாஜி சம்பவ இடத்துக்கு விரைந்தார். என்னதான் தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் திப்பு சுல்தானும் அங்கு மாறுவேடத்தில் சென்றார்.

தேர் தடைபட்டு நின்ற இடத்தை நன்கு சுற்றிப் பார்த்தார் அப்பாஜி. பிறகு, இரு தரப்பினரையும் அழைத்தார். அவர்களிடம் மீண்டும் பேசிப் பார்த்தார். அவரவர்கள், தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர்.

சற்று நேரம் யோசித்த அப்பாஜி, ''இந்தக் கிளை மட்டத்தைக் காட்டிலும் தேர் எவ்வளவு உயரம் அதிகமாக உள்ளது?'' என்று கேட்டார்.

''சுமார் 5 அடி இருக்கும் ஐயா!'' என்று பதில் வந்தது.

உடனே, ''அப்படியா... சரி, இந்தப் பாதையில் ஐந்தடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி பாதை அமையுங்கள். தேர், அந்தப் பாதை வழியே செல்லட்டும். மரக் கிளையும் தடையாக இருக்காது; தேரும் இந்த வழியாகவே பயணிக்கும்!'' என்றார்.

மறு கணம், அங்கிருந்த இளைஞர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட... பள்ளமான பாதை அமைக்கப்பட்டு, தேர் பவனி தொடர்ந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சிக்கலான வழக்கை சாதுர்யமாக சமாளித்த அப்பாஜியின் அறிவுக் கூர்மையைப் பாராட்டி அவருக்கு பொன்னும் பொருளும் பரிசளித்து கௌரவித்தார் திப்பு சுல்தான்.

- மு. ஜெகந்நாதன், சென்னை-73

விழுந்ததற்கு பாரதி சொன்ன விளக்கம்!

ஒரு கிராமத்துக்கு சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார் பாரதியார். நிகழ்ச்சி முடிந்ததும் பாரதியாரை ரயிலேற்றி விடுவதற்காக சிலர், ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

ரயில் வந்ததும் பாரதியார் அவசர அவசரமாக ரயிலேறப் போனபோது தவறி கீழே விழுந்து விட்டார். உடன் வந்தவர்கள் பதறிப் போய் பாரதியாரைத் தூக்கினார்கள்.

ஆனால் பாரதியார் சிரித்துக் கொண்டே, ''நான் மண்ணில் விழுந்து விட்டேன் என்பதற்காக ஏன் பதறுகிறீர்கள்? நான், என் தாய்நாட்டு மண்ணில்தானே புரண்டு எழுந்தேன்!'' என்றார்.

- அரூர். மு. மதிவாணன்

உழைத்தால்தானே உணவு?!

ஒரு முறை, வினோபாஜியைச் சந்திக்க அவரது ஆசிரமத்துக்கு வந்தார் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். அந்த நேரத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தோட்டத்தைக் கொத்திப் பதப்படுத்திக் கொண்டிருந்தார் வினோபாஜி.இதைக் கண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் மிகவும் வருந்தினார். ''இந்த வயதில், மிகவும் கஷ்டப்பட்டு இந்த வேலையைச் செய்யத்தான் வேண்டுமா?''என்று வினோபாஜியிடம் கேட்டார்.

உடனே, ''நான் சாப்பிடும் அளவுக்காவது உழைக்க வேண்டுமல்லவா? தவிர, சாப்பாட்டுத் தேவைக்காக சம்பாதிக்கவும் வேண்டுமே! இன்று, மூன்று மணி நேரம் தோட்ட வேலை செய்திருக்கிறேன். இன்றைய சாப்பாட்டுக்கு இது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்!'' என்றார் வினோபாஜி.

- அரூர். மு. மதிவாணன்

அன்னையின் ஆணை!

கல்கத்தா, இந்தியாவின் தலைநகராக திகழ்ந்த காலம். கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதிபதியாகவும், கல்கத்தா பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர் அஷ்டோஷ் முகர்ஜி.

ஒரு முறை, இங்கிலாந்து பேரரசராக 7-வது எட்வர்ட் முடிசூடும் விழாவுக்கு, கல்கத்தா நகரின் பிரதிநிதியாக சென்று வருமாறு முகர்ஜியைப் பணித்தார் இந்திய வைஸ்ராய் கர்ஸன் பிரபு. ஆனால் முகர்ஜியின் அன்னை, வெளிநாடு செல்லக் கூடாது என்று கூறி விட்டார். தாயாரின் சொல்லை மீறியதே கிடையாது. வைஸ்ராயிடம் இதைச் சொன்னார் முகர்ஜி. அதற்கு அவர், ''இங்கிலாந்து செல்ல உத்தரவிடுவது, இந்தியாவின் வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான நான் என்பதை உங்கள் அன்னையிடம் தெரிவியுங்கள்!'' என்றார்.

உடனே முகர்ஜி, ''அப்படியா னால், என் அன்னை சார்பில் நானும் ஒன்றைக் கூறுகிறேன். தன்னைத் தவிர, தன் மகனுக்கு வேறு எவரும் உத்தரவிடுவதை என் அன்னை அனுமதிக்கவே மாட்டார்!'' என்றார். கர்ஸன் பிரபு திகைத்து நின்று விட்டார்!

- எஸ். திருமலை, கோவை-9