Published:Updated:

700 காளைகள்; 5,000 பக்தர்கள்; மூக்கணாங்குறிச்சி மாடு மாலை தாண்டும் திருவிழா!

எருது ஓட்டத் திருவிழா

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 3 நாள்கள் நடைபெறும் கோயில் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

700 காளைகள்; 5,000 பக்தர்கள்; மூக்கணாங்குறிச்சி மாடு மாலை தாண்டும் திருவிழா!

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 3 நாள்கள் நடைபெறும் கோயில் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

Published:Updated:
எருது ஓட்டத் திருவிழா
கரூர் அருகே 7 ஆண்டுகளுக்குப் பிறகு எருது ஓட்டம் எனும் மாடு மாலை தாண்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவுக்கு வந்த மக்கள்
திருவிழாவுக்கு வந்த மக்கள்

இந்த திருவிழாவில் 700 க்கும் மேற்பட்ட நாட்டு இனக் காளை மாடுகள் பங்கேற்ற நிலையில், கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 5,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மட்டுமின்றி, அக்கம்பக்கத்து மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட நாட்டு இனக் காளை மாடுகளை அந்தந்த ஊர்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். சாமி வழிபாட்டிற்குப் பிறகு எருதுகளை சுமார் 3 கி.மீ் தூரம் அழைத்துச் சென்று, அங்கிருந்து எருதுகளை ஓட்டி வந்தனர். பதினான்கு ஊர் மந்தை எனப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த 5,000 க்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவுக்கு வந்த மக்கள்
திருவிழாவுக்கு வந்த மக்கள்

இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில், நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நாட்டு இனக் காளை மாடுகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து பல தலைமுறைகளாக பாரம்பர்யமாக இந்தத் திருவிழாவை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இந்த எருது ஓட்ட விழாவில் பங்கேற்று முதலாவதாக வரும் 3 காளைகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சைக் கனி பரிசாக வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள தொட்டியப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 3 நாள்கள் நடைபெறும் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

எருது ஓட்டத் திருவிழா
எருது ஓட்டத் திருவிழா

குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த இந்தக் குல தெய்வ கோயில் திருவிழா 2 நாள்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாம் நாளில் எருது ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது.