Published:Updated:

வளமுடன் வாழலாம்..! - 13

அன்பே தவம்!ஆர்.கே.பாலா

வளமுடன் வாழலாம்..! - 13

அன்பே தவம்!ஆர்.கே.பாலா

Published:Updated:
##~##

ங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்று எங்கெல்லாமோ தேடித் திரிகிறோம். மலைப் பிரதேசங்களிலும், குளிர் தேசங்களிலும், பொழுது போக்குக் கூடங்களிலும், அருவிகளிலும் ஆறுகளிலும் நிம்மதியைத் தேடிப் பயணிக்கிறோம். அப்படிப் பயணித்து, 'அப்பாடா... இப்பத்தான் புத்துணர்ச்சியா இருக்கு’ என்று மகிழ்ச்சியோடு ஊர் திரும்புகிறோம். பத்து இருபது நாட்கள் கழித்து, மீண்டும் 'எங்கே நிம்மதி’ என்று பழையபடி தேடத் துவங்கிவிடுகிறோம்.

''உண்மையில் நிம்மதி என்பது, காட்டிலும் மேட்டிலும் இல்லை; அருவிகளிலும் குளிர் பிரதேசங்களிலும் இல்லை; நவீன தீம் பார்க் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் இல்லை. நிம்மதி என்பது நம் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது. மனத்தினுள் உள்ள கசடுகளையும் கவலைகளையும் தூர எறிந்துவிட்டால், அங்கே நிம்மதியும் சந்தோஷமும் குடிகொள்ளும்!'' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனத்தின் கசடுகளையும் கவலைகளையும் எப்படிக் களைந்தெறிவது? தோல்வி தந்த வலிகளையும், வசை பாடிய வார்த்தைகள் உண்டாக்கிய வேதனைகளையும் ஆழமான ரணமாக மனசுக்குள் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அல்லாடுகிற நிலையில் இருந்து எப்படி மீள்வது? ஒரு சின்ன சுடுசொல்லைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து மருகுகிற சூழலில் இருந்து எவ்விதம் தப்பிப்பது?

வளமுடன் வாழலாம்..! - 13

இவற்றில் இருந்து விடுதலையாவதற்குத்தான், வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை எனும் யோகப் பயிற்சியை மிக எளிமையான முறையில் நமக்குத் தந்திருக்கிறார்.

குடும்பத்திலும் உறவுகளிலும்தான் எத்தனை எத்தனைச் சிக்கல்கள்! உறவுகளிடத்திலும் நண்பர்களிடத்திலும் கர்வத்துடனும் முன்கோபத்துடனும் அலட்டலுடனும் பேசி, அவர்களின் மனங்களைக் காயப்படுத்தி, அந்த உறவையும் நட்பையும் முற்றிலுமாக முறித்துக் கொள்கிறவர்கள் அநேகம் பேர் இங்கே!

வளமுடன் வாழலாம்..! - 13

கர்வத்தோடும் கோபத்தோடும் எடுக்கிற முடிவுகளும், பேசுகிற பேச்சுகளும் எதிராளிக்குக் காயத்தைதான் ஏற்படுத்தும். கர்வத்தைத் துறந்து, கோபத்தை மறந்து பேசுவதற்கு ஒரு நிதானம் தேவை; பக்குவம் தேவை. அந்த நிதானத்தையும் பக்குவத்தையும் பெறுவதற்கு அடிப்படையான சஞ்சலமற்ற மனத்தைத் தரவல்லதுதான், மனவளக்கலைப் பயிற்சி!

நிதானம் அமைதியைக் கொடுக்கும்; அந்த அமைதி, தெளிவான மனநிலையைத் தரும். தெளிவுடன் இருக்கும்போது சிந்திப்பவை அனைத்துமே சரியாகவும் திடமாகவும் இருக்கும். எடுக்கும் முடிவுகள் திடமாக இருந்தால்தான் பாசாங்கு இல்லாமல் வாழமுடியும். பாசாங்கும் பொய்யும் அற்ற மனிதர்களையே, சக மனிதர்கள் விரும்புவார்கள்.

எப்போதும் நடிப்புடனும் பொய் முகத்துடனும் பேசிப் பழகுபவர்களுக்கு, ஒரு கட்டத்தில் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாத நிலை ஏற்படும். தெளிவும் உண்மையுமே கம்பீரத்தைக் கொடுக்கும். உண்மை கொடுக்கிற கம்பீரமும் பாரபட்சம் இல்லாத அன்பும் இருந்துவிட்டால், கவலையோ மன அழுத்தமோ இல்லை; துக்கமோ வருத்தமோ தேவையில்லை என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

இவற்றை நாம் பெறுவதற்கு, மனவளக் கலைப் பயிற்சி பேருதவி புரிகிறது. உடலையும் மனத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால், வளமுடன் வாழ்வது வெகு சுலபம்! நம்மை வளமுடன் வாழச் செய்யும் எளிமையான இந்தப் பயிற்சியை, இனியேனும் கற்றுக் கொள்வோம். இனிதே வாழ்வோம்!

வாழ்க வளமுடன்!

- நிறைவுற்றது

படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism