Published:Updated:

யோகா... ஆஹா!

யோகா... ஆஹா!

யோகா... ஆஹா!

யோகா... ஆஹா!

Published:Updated:
இளைஞர் சக்தி
யோகா... ஆஹா!
யோகா... ஆஹா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளிமையாகக் கற்போம் அற்புதக் கலையை!

யோகா... ஆஹா!

ந்த ஆசனத்தின் இறுதி நிலையில், ஒட்டகத்தைப் போன்று நாம் உடலை மேல் நோக்கி உயர்த்துவதால், இதற்கு உஷ்ட்ராசனம் என்று பெயர். உட்கார்ந்தபடியே செய்யப்படும் இந்த ஆசனத்துக்கு மொத்தம் எட்டு நிலைகள்.

யோகா... ஆஹா!

துவக்க நிலை:

முந்தைய பஸ்சி மோத்தனாசனத் தைப்போன்றே இதற் கும் துவக்க நிலை அமைய வேண்டும். அதன் மாற்று ஆசனம் இது.

முதல் நிலை:

துவக்க நிலையில் இருந்து வலக் காலைப் பின்புறமாக மடக்கி, குதிகாலின் மீது அமர்ந்து கொள்ளவும்.

யோகா... ஆஹா!

இரண்டாம் நிலை:

இடக் காலையும் அதே போல் மடக்கி, இரண்டு குதிகால்கள் மீதும் ஆசனப் பகுதியை வைத்து, நிமிர்ந்து உட்கார வேண்டும்.

மூன்றாம் நிலை:

மெள்ள எழுந்து, மூட்டுப் பகுதியைத் தரையில் ஊன்றி நிற்கவும். முழங்காலுக்கு மேலே உள்ள உடலை செங்குத்தாக வைக்கவும்.

நான்காம் நிலை:

கைகளை இடுப்பின் பின்புறம் தாங்கிப் பிடித்த கோணத்தில் வைத்துக் கொள்ளவும். பிறகு, உடலைப் பின்புறம் வளைத்து மெது வாக இரு கைகளாலும், குதி கால்களைப் பிடிக்க வேண்டும். தலையையும் பின்புறம் நன்றாக வளைத்துக் கொள்ள வேண்டும். மார்பு பகுதி மட்டுமே இந்த நிலையில் உயர்ந்திருக்கும்.

யோகா... ஆஹா!

ஐந்தாம் நிலை:

மெதுவாகக் கைகள் இரண்டையும் குதிகால்களில் இருந்து விடுவித்து, உடலை மீண்டும் நேராகக் கொண்டு வரவும்.

ஆறாம் நிலை:

இரண்டாம் நிலையில் அமர்ந்தது போல், மெதுவாக குதிகாலின் மீது அமர்ந்து கொள்ளவும்.

யோகா... ஆஹா!

ஏழாம் நிலை:

இடக் காலை நீட்டிக் கொள்ளவும்.

எட்டாம் நிலை:

வலக் காலை விடுவித்து, ஆரம்ப நிலைக்கு வரவும்.

யோகா... ஆஹா!

சுவாசிக்கும் முறை:

இந்த ஆசனத்தின் 1, 2, 6, 7, 8 ஆகிய நிலைகளில் மூச்சு சாதாரண நிலையில் இருக்க வேண்டும்.

3-ஆம் நிலையில் மூச்சை வெளியே விட்டவாறு முழங்காலில் எழுந்து நிற்கவும்.

4-ஆம் நிலையில் மூச்சை உள்ளிழுத்தவாறே பின்னோக்கி வளையவும்.

5-ஆம் நிலையில் மூச்சை வெளியே விட்டவாறு நிமிரவும்.

பலன்கள்

இந்த ஆசனம் முதுகெலும்பை வளையச் செய்கிறது. மூளைப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகு கூன் விழுவதைத் தடுக்கிறது. மூச்சு சம்பந்தமான வியாதிகள் எதுவும் வராமல் பாதுகாக்கிறது.

ராஜ யோகம்

ம் புலன்களை வழி நடத்தும் மனத்தை, எவனொருவன் கட்டுப்படுத்தி கோபதாபங்கள், உணர்ச்சிகள், ஆசைகள் ஆகியவற்றுக்கு அடிமை ஆகாமல் வாழ்கிறானோ அவனே ராஜ யோகி. உடலையும், மனதையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே ராஜ யோகம்.

இதற்கு பதஞ்சலி முனிவர் பல வழிமுறைகள் கூறி, அவற்றை எட்டுப் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். இது, அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது. (அஷ்ட: எட்டு, அங்கம்: பகுதி). ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அபரி மிதமான சக்தி அடங்கியிருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புத சக்தியை வெளிக்கொணர்ந்து, நமது ஆளுமையை முழுமையாக்கிக் கொள்வதே ராஜ யோகத்தின் நோக்கம். இதற்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் உள்ள எட்டுப் பகுதிகளிலும் ஒழுக்கமே மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.