Published:Updated:

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

Published:Updated:
18 - துள்ளி எழு
இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட இளம் பெண் அவள். ஆசிரம மரம் ஒன்றின் நிழலில் முழங்காலில் மோவாய் பதித்து, சோகச் சித்திரம் போல் அமர்ந்திருந்தாள். அவளை நெருங்கினேன். நிமிர்ந்து பார்த்தாள். குழந்தை முகம்.

“நான் பணி புரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சொந்தக்காரப் பையன் ஒருவனும் வேலை செய்கிறான். ‘அவனை விட நான் நன்றாக உழைத்துப் பெயர் வாங்க வேண்டும்!’ என்று என் பெற்றோர் சொல்வார்கள். நானும் இரவு- பகலாக உழைத்து, எனக்கு அளிக்கப்பட்ட பிராஜக்டுகளை முடிப்பது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவனுக்குத்தான் பாராட்டு, இன்சென்டிவ் மற்றும் போனஸ் எல்லாம் கிடைக்கும். என்னால் அவனை ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை!”

“அதனால்தான், நீங்கள் இறந்து போய் கடவுளிடம் புத்திசாலித்தனமான மூளையைப் பெற்று மறுபடி பூமிக்கு வர முடிவு செய்து விட்டீர் களா?” என்று கேட்டேன். அவள் மௌனமாக இருந்தாள்.

“ஆமை- முயல் ஓட்டப் பந்தயக் கதை தெரியுமா? ‘நிதானமாக- ஒழுங்காக செயல் படுபவர் வெற்றி பெறுவார்’ என்பதை விளக்கும் கதை அது...”

அவள் உதடுகளைப் பிதுக்கினாள்: “எனக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரியுமே...”

“சுவாரஸ்யமான ரீமிக்ஸ் பாடல்கள் போல், புதிய திருப்பங்கள் கொண்ட ரீமிக்ஸ் கதை இது...” என்று தொடர்ந் தேன்: “தோற்றுப் போன முயல், தனது திறமை மேல் அளவுக்கு அதிக நம்பிக்கை வைத்ததும், கவனக் குறைவுமே தோல்விக்கான காரணங்கள் என்று ஆராய்ந்து உணர்ந்தது. குறை களை நீக்கிவிட்டுப் போராடத் தீர்மானித்தது. ஆமையை மீண்டும் போட்டிக்கு அழைத்தது. இந்த முறை இடையில் எங்கும் நின்று விடாமல் கடைசி வரை வேகமாக ஓடிய முயல், ஆமையை எளிதில் வென்றது. இதிலிருந்து தெரிந்து கொள்ளும் பாடம், ‘நிதானமாக- ஒழுங்காகச் செயல்படுபவர்களை விட, வேகமாக தளராமல் செயல்படுபவர்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!’

உங்கள் அலுவலகத்தில் பொறுமை யாகவும், விதிப்படியும் பணி செய்து வேலைகளை முடிப்பவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் நல்ல பணியாளர்கள்தான். ஆனால், அவர்களை விட, வேகமாகவும் உறுதியுடனும் திறம்படப் பணி செய்பவர்கள் சிறந்தவர்களாக மதிக்கப்படுவதுடன், விரைவாகவும் முன்னேறுவார்கள். பதவி உயர் வும் பெறுவார்கள். தொழில் துறைகளில் கடும் போட்டி நிலவும் இந்தக் காலத்தில், இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது.

ஆனால், கதை முடியவில்லை. ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன ஆமை தீவிரமாக யோசனை செய்தது. ‘பந்தயப் பாதையை மாற்றினால் ஒழிய, தான் வெற்றி பெற இயலாது!’ என்று உணர்ந் தது. எனவே, அது பந்தயப் பாதையை மாற்றி விட்டு, முயலைப் பந்தயத்துக்கு அழைத்தது.

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஓட்டப் பந்தயம் துவங்கியது. வழக்கம் போல வேக மாக ஓடியது முயல். ஆனால், இந்த முறை பந்தயப் பாதையில் பெரிய நதி ஒன்று குறுக்கிட்டது. அதனைக் கடந்து மறு புறம் சென்று நிலத்தில் சிறிது தூரம் ஓடினால்தான் இலக்கை எட்ட முடியும். வேகமாக ஓடி வந்த முயல் நதிக் கரையை அடைந்ததும், அதைக் கடக்க வழி தெரியாமல் திகைத்துப் போய் அங்கேயே தங்கி விட்டது. ஆமையோ நிலத்தில் மெதுவாக நகர்ந்து வந்து, நதியை அடைந்து, தண்ணீரில் இறங்கி நீந்தி, எதிர்க்கரையை அடைந்து, நிலத்தில் நகர்ந்து வெற்றிக் கோட்டைத் தொட்டது. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம் என்ன? நமது பலத்தை அடையாளம் காண வேண்டும். அதைப் பயன்படுத்தும் விதமாக நமது சூழ்நிலையையே நாம் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் நமக்கு அதிகம். ஒருவரிடம் நல்ல பேச்சுத் திறன் இருக்கும். அவர் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கான எதிர்காலத் திட்டங்கள் பற்றி மேலதிகாரிகளுக்கு நேரடியாக எடுத்துரைக்கலாம். எழுதும் திறன் உள்ளவர், புள்ளி விவரங்களுடன் விரிவான அறிக்கைகள் தயார் செய்து உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். தங்களது தனிப்பட்ட திறமைகளை முன்னிறுத்தும் விதமாகச் செயல்படும் இளைஞர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் கவனத்துக்கு வருவார்கள். அவர்களது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நல்ல வாய்ப்புகள் ஏற்படும்!”

அந்தப் பெண்ணின் கண்களில் முதல் முறையாக ஆர்வம் மின்னுவதைக் கண்டேன்.

நான் தொடர்ந்தேன்: “கதை இன்னும் முடியவில்லை. இப்போது ஆமையும் முயலும் நல்ல நண்பர்களாகி விட்டன. இரண்டும் கடைசி முறையாக ஒரு பந்தயம் வைக்கத் திட்டமிட்டன. ஆனால், இந்த முறை ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவதை விட்டு விட்டு, இரண்டுமே இணைந்து ஓட்டப் பந்தயத்தில் ஓட முடிவு செய்தன. பந்தயம் துவங்கியதும் ஓர் அதிசயம் நடந்தது. முயல், ஆமை யைத் தன் முதுகின் மேல் சுமந்து கொண்டு ஓடத் தொடங்கியது. வேகமாக நதிக்கரையை அடைந்தது. இப்போது ஆமை, முயலைத் தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு நதியில் இறங்கித் தண்ணீரில் நீந்தி யது. நதியைக் கடந்து எதிர்க் கரையை அடைந்தது. மீண்டும் முயல் ஆமையை தன் முதுகில் தூக்கிக் கொண்டு நிலத்தில் வேகமாக ஓடியது. விரைவில் இரண்டும் பந்தய இலக்கைத் தொட்டு விட்டன.

தனித் தனியாக ஓடியதை விட, இப்போது அவை எளிதில் வெற்றிக் கோட்டை அடைந்தன! ஒவ்வொருவர், ஒவ் வொரு துறையில் சிறந்தவராக இருப்பர். அவர்களுக்குள் தனித் தனி திறமைகள் இருக்கும். இருப்பினும் அனைவரும் சேர்ந்து, தங்கள் தனிப்பட்ட திறமைகளை ஒருங்கிணைத்து, ஒரே அணியாகச் செயல்பட்டால்தான், முழுமையான பலன் கிடைக்கும். ஏனென்றால், தொழில், நிர்வாகத் துறைகளில் நாம் பல வித நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு நிலையையும் எதிர்கொள்ள... ஒவ்வொரு விதமான திறமை தேவைப்படும். அப்போது அந்தந்தத் திறமைசாலிகளின் சேவை அந்த நிறுவனத்துக்குக் கண்டிப்பாகத் தேவை. கூட்டு முயற்சி என்பதே, இப்படி பல விதத் திறமையுள்ளவர்கள், சந்தர்ப் பங்களுக்குத் தகுந்தாற் போல் மாறி மாறி தலைமைப் பொறுப்பு ஏற்பதேயாகும். சமீபத்தில் வானொலியில் கேட்ட உண்மை நிகழ்ச்சி ஒன்று.

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் அந்தமான் தீவுகளில், பிரிட்டிஷ் படை வீரர்களும், ஜப்பானிய வீரர்களும் மோதிக் கொண்டார்கள். அப்போது திடீரென்று கடல் பொங்கி ஒரு சிறு தீவை மூழ்கடித்தது. ஏகப்பட்ட பிரிட்டிஷ்- ஜப்பானிய வீரர்கள் உயிர் இழந்தார்கள். சான்சே எனும் ஒரு ஜப்பானிய வீரரும், கேப்டன் ஸ்மித் எனும் ஒரு பிரிட்டிஷ் வீரரும் உயிர் தப்பினர். சுற்றிலும் எங்கு பார்த்தாலும் அழுகிப் போய் துர்நாற்றம் வீசும் மனித உடல்கள். பசி இருவரையும் வாட்டியது.அவர்கள் உயிர் பிழைத்திருப்பதை அறிந்து, பிரிட்டிஷ் படை அவர்களுக்கு ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசியது. அவர்களுடைய துரதிர்ஷ்டம் எல்லா உணவுப் பொட்டலங்களும் கடலில் விழுந்து சுறாக்களுக்கு இரையாகின. ஒரே ஒரு உணவுப் பொட்டலம் மட்டும் ஒரு மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டது.

‘எதிரியைக் கொன்றால்தான் அடுத்தவர் தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள முடியும்!’ எனும் நிலை. ஆனால், சண்டை போட உடலில் வலுவில்லை. எனவே, மரத்தில் தொங்கும் உணவுப் பொட்டலத்தை யாரால் எம்பி எடுக்க முடி கிறதோ அவரே அந்த உணவை உண்பது என்று தீர்மானித்தனர். இருவரும் தங்களால் முயன்ற மட்டும் எம்பி எம்பிப் பார்த்தார்கள். ம்ஹூம்... இருவராலும் உணவுப் பொட்டலத்தை எட்டிப் பிடிக்க முடிய வில்லை. இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ‘பிரிட்டிஷ§ம், ஜப்பானும் வேண்டுமானால் எதிரி நாடுகளாக இருக்கலாம். ஆனால், நாம் எதிரிகள் அல்லவே. இருவரும் இணைந்து விட்டால் என்ன?’ என்பதுதான் அந்த யோசனை.

சற்று உயரமான கேப்டன் ஸ்மித் மரத்தடியில் குனிந்து நின்றார். சான்சே அவர் தோள் மேல் ஏறினார். கேப்டன் ஸ்மித் நிமிர்ந்தார். மரக்கிளை யில் இருந்த உணவுப் பொட்டலத்தை வெகு எளிதாக சான்சேவால் எடுக்க முடிந்தது. அந்த உணவை இருவருமே பகிர்ந்து கொண்டார்கள். உயிர் பிழைத்தார்கள். பின் இருவருமே கனடா சென்று அங்கு ஓர் உணவு விடுதியைத் தொடங்கினர். ஆசிய-ஐரோப்பிய உணவு வகைகளை வழங்கிய அந்த உணவு விடுதி ஒரே ஆண்டுக்குள் புகழ் பெற்றது. இணைந்து செயலாற்ற முடிவு செய்து விட்டால், எதிரி என்று எவருமே இல்லாமல் போய் விடுகிறார்கள் அல்லவா? நீங்கள் ஏன் இப்படிப் பட்டதொரு முடிவுக்கு வரக்கூடாது?” அந்தப் பெண்ணின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. என்னை வணங்கி விட்டுச் சென்றாள்.

எனதருமை இளைஞர்களே, ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவதை விட, அனைவரும் இணைந்து, எதிர்கொள்ள வேண்டிய சவால்களுடன் போட்டி போடும்போது, நமது திறமைகள் அதிகரிப்பதுடன் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கிறது.