Published:Updated:

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

Published:Updated:
இளைஞர் சக்தி
நீயும் ஓர் அர்ஜுனன்தான்!
நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!
நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

ர்ஜுனனுக்கு கர்ம யோகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணர், வாழ்க்கையில்- வாழ்க்கைப் பாதையில் எப்படிச் செயலாற்றுவது என்று இந்த அத்தியாயத்தில் கூறுகிறார்...

‘‘முதலில் செயலைத் துறக்கவும், பிறகு பக்தியில் செயலாற்றவும் உபதேசித்தாய்... இந்த இரண்டில் எது சிறந்தது. சொல் கிருஷ்ணா?’’ _ கேட்டான் அர்ஜுனன்.

‘‘கர்ம யோகமும் ஞான யோகமும் இரண்டும் வேறு வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே- அறிவில்லாதவர்களைப் போல!’’ என்றார் கிருஷ்ணர்.

வாழ்க்கையில் நீ தேடுவது, விரும்புவது எல்லாம் தாமாகவே உன்னை வந்தடையும். அதற்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான்! சிரத்தை அல்லது ஈடுபாடு. சிரத்தா வான் லபதே ஞானம்- என்று கூறுவார்கள். ஒரு செயலில் முழுமையான ஈடுபாட்டுடன் இறங்கினால், பிறகென்ன வெற்றிதான்.

வாழ்க்கைப் பாதையில் முன்னேறும் ஒருவன், தனது இலக்கு அல்லது லட்சியம் எது என்பதை மட்டும் தீர்மானித்தால் போதும்... அந்த லட்சியத்தில் உறுதியாக இருந்தால், அதை அடையும் வழிமுறைகள் தாமாகவே கிடைத்து விடும். இலக்கை நோக்கி எறியாத அம்புகள் வீண்தானே?!

ஆக... லட்சியமே வாழ்க்கையின் வழிகாட்டி. இலக்கை நோக்கி நகரும்போது நித்திரை, சோம்பல், பயம், அவ நம்பிக்கை போன்ற தடைக் கற்கள் தடுக்கி விடும்... ஆனாலும் எழுந்து முன்னைவிட வேகமாகச் செல்ல வேண்டும். எல்லா வித முயற்சிகளுக்கும் அடிப்படை லட்சியம் மட்டுமே! அது ஒன்றே தேவை.

‘எழுந்திரு... விழித்திரு.... கருதிய கருமம் கை கூடும் வரை சலியாது உழைத்திரு’ இதுதான் உனது முதல் பாடம். கர்ம யோகத்துக்கும் ஞான யோகத்துக்கும் மற்றுமுள்ள எல்லா வித யோகங்களுக்கும் முதல் பாடம் இதுதான். சாஸ்திரத்தின் ரகசியமும் இதுவே! விவேகானந்த சுவாமிகள் கற்றுத் தேர்ந்த பாடம்... வானர இனத்தைச் சேர்ந்த அனுமன் கடல் தாண்டி சீதையைக் கண்ட தீரத்தின் சாரம்.

எல்லாவித ஞானிகளும் யோகிகளும் தமது அரிய தவத்தால் கண்டறிந்த பரம்பொருளின் வடிவம் லட்சியம். அதை அடைவதற்கு- கடும் உழைப்பு, விருப்பு- வெறுப்பற்ற ஈடுபாடு, கிடைக்கும் விளைவை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்... இதுதான் இப்போது நமக்குத் தேவை!

முழு ஈடுபாட்டுடன் லட்சியம் ஒன்றையே குறியாக, இடையில் குறுக்கிடும் இடர்ப்பாடுகளால் மனம் தளராமல் ஒருவன் செய்யும் செயல்கள் அவனுக்கு முழு வெற்றியை, திருப்தியைத் தரும். அப்போது ஏற்படும் மன நிறைவு ஆத்ம ஞானம் எனப்படும்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வசித்தது. அதன் உலகமே அந்தக் கிணறுதான். அது வெளியுலகத்தைப் பார்த்ததே கிடையாது. அந்தக் கிணற்றுக்குள் ஒரு நாள் கடல் தவளை வந்து சேர்ந்தது. அது கிணற்றுத் தவளையைப் பார்த்துக் கேட்டது. ‘அச்சச்சோ.... இதுக்குள்ளேயா இருக்கிறாய். இவ்வளவு நாட்களை வீணாக்கி விட்டாயே! உலகம் எவ்வளவு பெரிசு தெரியுமா? கடலை நீ நிச்சயம் பார்க்க வேண்டும். அங்கு ரொம்ப ஆனந்தமாக விளையாடலாம்’ என்றது.

கிணற்றுத் தவளை கிணற்றுக்குள் ஓர் அடி உயரத்துக்கு குதித்து விட்டுக் கேட்டது:

‘இவ்வளவு பெரிசு இருக்குமா?’

கடல் தவளை, ‘இல்லை’ என்றது.

கிணற்றுத் தவளை மீண்டும் கிணற்றின் பாதி அளவுக்கு குதித்துவிட்டுக் கேட்டது: ‘இவ்வளவு பெரிசு இருக்குமா?’

‘இல்லை... இன்னும் பெரிசு!’ என்றது கடல் தவளை.

கிணற்றுத் தவளை இன்னும் முயற்சி செய்து கிணற்றின் முக்கால் கிணறு அளவுக்குக் குதித்துவிட்டு, ‘இப்ப சொல் இவ்ளோதானே இருக்கும் கடல்?’ என்றது.

‘அதுவும் இல்லை!’ என்ற கடல் தவளை ஒரு காரியம் செய்தது. அப்போது கிணற்றுக்குள் தண்ணீர் இறைக்க போடப்பட்ட வாளிக்குள் குதித்து... கிணற்றுத் தவளையையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தது. கிணற்றுத் தவளையைக் கடலுக்கு அழைத்துச் சென்றது.

கடலைப் பார்த்தவுடன் கிணற்றுத் தவளை எதுவும் பேசாமல் வாய் மூடி நின்று விட்டது. கடலுக்கு ஈடாக எந்த உதாரணமும் சொல்ல முடியாது என்பது அந்தக் கிணற்றுத் தவளைக்குப் புரிந்து போயிற்று.

கர்ம யோகமோ, ஞான யோகமோ இரண்டும் இது போலத்தான்... எதன் வழியாகவாவது நாம் ஆத்ம ஞானம் அடைந்து விட்டால், பிறகு வாய் வார்த்தைகள் தேவை இருக்காது. அதுதான் மோட்சம்.

மோட்சத்துக்கு ஆதாரமான ஞானத்தை நாம் தேட வேண்டும். ஞானத்தை விட பவித்ரமானது ஒன்றுமில்லை. நாம் யார்? இந்த உலகத்தை இயக்கும் ஆதார சக்தி எது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு வாழும் வாழ்க்கை ரொம்ப எளிது. இனி வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று பார்ப்போம்.

தாமரை, சேற்றில் புதைந்து வளர்கிறது. தாமரை மலர் மிகவும் புனிதமானது. சேற்றின் நாற்றமோ, தண்ணீரின் சலசலப்போ, அதன் அழுக்கோ அதனைப் பாதிப்பதில்லை. தாமரையின் இலையோ இன்னும் நேர்த்தியாக ஒரு துளி தண்ணீர் கூட ஒட்டாமல், ‘ஹை, என்னைப் பார். எவ்ளோ சுத்தம்!’ என்று நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.

‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்பது போல் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு தண்டுகளைச் சுருக்கி, தாமரை அது பாட்டுக்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது.

தாமரை நமக்கு மிகச் சிறந்த பாடம். நாமும் உலக வாழ்க்கையில் கடமைகளை ‘தாமரை’ போல் செய்து வாழ்க்கையைக் கடந்து போக வேண்டும்.

கிருஷ்ணர் இதைத்தான்

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேன பத்மபத்ரமிவாம்பஸா.. . என்கிறார்.

‘‘அர்ஜுனா... கர்மம் செய்து கர்ம யோகத்தைக் கடந்து போ. பற்றின்றி கடமைகளைச் செய்து, பலன்களைப் பகவானுக்கு அர்ப்பணிப்பவன் தாமரை இலை எவ்வாறு நீரால் பாதிக்கப்படுவது இல்லையோ, அது போல பாவ விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை’’ என்கிறார் கிருஷ்ணர்.

நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

பற்றின்றி கடமைகளைச் செய்வது என்பது, கத்தி மேல் நடப்பது போல் சிரமமான காரியம். ஆனாலும் நடந்தாக வேண்டும்.

ஆன்மிகத்துக்கும், அறிவியலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இல்லாத ஒன்றை எப்படிக் கண்டுபிடிப்பது? நாம் கண்டுபிடித்த பொருட்கள் எல்லாம் ஏற்கெனவே இருந்த ஏதாவது ஒரு பொருளில் இருந்து பெறப்பட்டவைதானே. இல்லாத ஒன்றை எப்பவும் கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் அறிஞர்கள் புதிதாக உருவாக்கிய தொழில்நுட்பக் கருவிகள், அடுத்த நிமிடமே உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்துவிடும். நாம் எல்லோரும் பயன்படுத்தலாம்.

ஆத்ம ஞானம் அப்படியல்ல... அவரவர் தேடுகிற ஞானம்தான் அவரவருக்குக் கிடைக்கும். விலைக்கு வாங்கவோ, தானமாகவோ பெற இயலாது. உனது முயற்சிக்குத் தகுந்த பலன்தான் உனக்குக் கிடைக்கும். உனக்காக யாரும் பாவமோ... புண்ணியமோ சேர்த்து வைக்க முடியாது.

ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உடையவன். அப்படி இருந்தும்கூட பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஓடிக் கொண்டே இருந்தான். நிறையப் பணமும் சேர்ந்தது.

வயதாகி மரணப் படுக்கையில் விழுந்தவுடன் அவனுக்குத் தோன்றியது _ ஒரு பண்டிதரை வைத்து சகஸ்ரநாமத்தைச் சொல்லக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிய வேண்டும் என்று! அவ்வாறே ஏற்பாடும் செய்தான். பண்டிதர் தலைமாட்டில் உட்கார்ந்து சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு சுற்று முடிய அரை மணி ஆயிற்று. சகஸ்ரநாமச் சுற்றுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால், பணக்காரன் உயிர் போனபாடு இல்லை. பண்டிதருக்கோ இயற்கை உபாதைக்குச் செல்ல வேண்டும். ஒரு வழியாக அனுமதி கேட்டு வெளியே போன நேரம் பார்த்துச் சட்டென்று பணக்காரனின் உயிர் பிரிந்தது.

ஞானம் நாம் தேடும்போது, வராது. நாம்தான் தேடித் தேடி, சிறுகச் சிறுக குருவி நெல்மணி சேர்ப்பது போல் சேர்க்க வேண்டும். இந்தத் தேடுதல் உனது கடமை.

பிறந்த குழந்தை எவ்வித ஆதரவும் இன்றி அழும். அதற்கான முழுப் பொறுப்பையும் பிரதிபலன் இன்றி தாய் எடுத்துக் கொள்கிறாள். தனது கடமை என்கிற உணர்வில் தன்னைத் தந்து தியாகம் செய்கிறாள். இந்தத் தன்னலமற்ற உணர்வு, ஒவ்வொரு செயலிலும் நம்மிடமிருந்து வெளிப்பட வேண்டும். இப்படித்தான் உலக வாழ்வை நாம் கடந்து போக வேண்டும்.