Published:Updated:

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

Published:Updated:
இளைஞர் சக்தி
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! - 18
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொட்டை அடிப்பது ஏன்?

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

‘‘சா ப்பிடறப்போ வாழை இலைய, நுனி இடக் கைப் பக்கமா இருக்கும் படியா போடணும்!’’ என்று கூட் டத்தில் இருந்து பதில் வந்ததும், தாத்தா அதை மறுத்தார்.

‘‘இது தப்புன்னு சேக்கிழார் ஸ்வாமிகள் சொல்றாரு!’’ என்றார். கூட்டம் முழுவதும் குழப்பத்தை முகத்தில் காட்டியது. அதைப் பார்த்தும், பார்க்காதவர் போலத் தொடர்ந்து பேசினார் தாத்தா: ‘ஈர்வாய் வலம் பெற வைத்து’னு பெரிய புராணத்துல, சேக்கிழார் சொல் றாரு. இப்ப நீங்க சொன்னதைதான் அவரும் சொல்றாரு. ஆனா, வேற விதமா சொல்றாரு. அதாவது நுனி இலய நாம நறுக்கறோமில்லையா, அந்த நறுக்கின பகுதி, வலக் கைப் பக்கமா வரணும்ங்கறாரு. ஏன் அப்படி? இடக்கைப் பக்கம்னு சொல்லக் கூடாது. ‘இடது’ங்கறது அமங்கலமான வார்த்தை. வலம் வர்றதுன்னு சொல்லுவோமே தவிர, இடம் வர்றதுனு சொல்ல மாட்டோம். இடம் வர்றது - அமங்கலமான காரியத்துல தான். அமங்கலமான வார்த்தையைச் சொல்லக் கூடாதுங்கறதுனாலதான், நாம சொல்ற மாதிரி ‘நுனிய இடக் கைப் பக்கமா போடணும்’னு சொல்லாம, வேற மாதிரி மாத்திச் சொன்னாரு சேக்கிழார். மறந்து போய்க் கூட அமங் கலமா பேசக் கூடாது!’’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருந்தபோதே, முன் வரிசையில் இருந்த ஒருவரின்

செல் போன் வீரிட்டது. விழா நிர்வாகி அவசர அவசரமாக மைக்கில், ‘‘தயவுசெய்து அனைவரும் அவரவர் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விழா கமிட்டியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்...’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒரு சிலர் அப்படியே செய்தார்கள். அதை அனு சரித்தே பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா: ‘‘இப்ப உங்க செல்போன எடுத்துக்குங்க. அது தானாவா அடிக்குது? உங்க நம்பரை நீங்களா விருப்பப்பட்டுக் குடுத்தீங்க. வாங்கினவங்க உங்களத் தொடர்பு கொள்றாங்க. இதேதான் வாழ்க்கையிலேயும். நாம பண்ணுன நல்லது- கெட்டது, ரிஃப்ளெக்ட் ஆகி, நமக்கே திருப்பி வருது. இதுல என்ன விசேஷம்னா... நல்லது- நிதானமா, லேட்டா வரும். கெட்டது- அப்பவே, உடனடியா வரும். புரியும்படியா எளிமையா சொல்லணும்னா... ‘நாம குண்டாகணும், நமக்கு நெறய பலம் கெடைக் கணும்’னா டானிக் குடிக்கறோம். உடனே பலன் கெடைக்காது. நிதானமாத்தான் பவர் தெரியும். அதே விஷம்னா, உடனே தன்னோட வேலயக் காட்டிடும். அதனாலதான் அமங்கலமாப் பேசக் கூடாதுங்கறத நம்ம மனசுல பதிய வெக்கறதுக்காக சேக்கிழார் அப்படிச் சொன்னார். அடுத்ததா; துணிங்களத் தோச் சிட்டுப் பிழியும்போது, சில பேர் கால்ல பிழிஞ்சுக்குவாங்க. அப்படி செஞ்சா, துணியில இருக்கற அழுக்குங்க தண்ணியோட சேர்ந்து கால்ல போய், அங்க ஏற்கெனவே இருக்கற அழுக்குங்க கூடக் கூட்டணியா சேர்ந்துக்கும்.

அப்பறம் என்ன? அழுக்கோட அழுக்கு சேர்ந்து, தண்ணியுந்தான் இப்ப ஒத்தாசைக்கு இருக்கே, எல்லாக் கிருமிங்களும் உடம்புல பரவி வியாதியக் கொண்டாந்துடும். முக்காவாசி வியாதிங்க வர்றதுக்குக் காரணமே, நம்ம காலுங்களத் தூய்மையா வெச்சுக்காததால தான். அதுனால, துணிங்களத் தோச்சுப் பிழியும்போது, கால்ல வெச்சுப் பிழியக் கூடாதுனு பெரியவங்க சொன்னாங்க. அதோட, ராத்திரி, படுக்கும்போது காலை நல்லாக் கழுவிட்டு, ஈரம் போகத் தொடச்சிட்டுப் படுக்கணும்னாங்க. அதனாலதான் இவ்வளவு மருத்துவ வசதிங்க இல்லாத அந்தக் காலத்திலயும், ஆரோக்கியத்தோட இருந்தாங்க.

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

அடுத்தது; துணியத் தாண்டக் கூடாதுனு சொல்லி வெச்சுருக்காங்க. காரணம்? இறந்து போனவங்களுக்கு உண்டான காரியங்களச் செய்யும்போதுதான், துணியப் போட்டு மிதிக்கச் சொல்லுவாங்க (தாண்டச் சொல்லுவாங்க). அதுனாலதான், துணியத் தாண்டக் கூடாதுனு சொன்னாங்க. பெரியவங்க சொன்ன தையோ அல்லது செஞ்சதையோ கேலி பேசறதுல எந்த லாபமும் இல்ல. முன்னோர்கள்லாம் இடுப்புல ஒரு கயிறு கட்டியிருப்பாங்க. அரணாக்கயிறு, அண்ணாக் கயிறுன்னு எல்லாம் சொல் லிக் கிண்டலடிப்போம். அத ஏன் செஞ்சாங்கன்னு நாம தெரிஞ்சுக்க வாணாமா? இடுப்புல அப்படிக் கயிறு கட்டிக்கிட்டு இருந்ததுனால, கிட்னி ப்ராப்ளம் - மூத்திர கோசம்னெல்லாம் சொல்றோமே, அந்த வியாதிங்கள்லாம் அதிகமான அளவு வராம இருந்துச்சு.

அடுத்தது; பல பேரு அதிகமான அளவுல எகத்தாளமா பேசறது- முடி இறக்கறதப் பத்தி; அதாவது மொட்ட அடிச்சுக்கறதப் பத்தி. ‘உசுரக் குடுத்த சாமிக்கி, முடியக் குடுக்கறியே, அது மறு படியும் வளரும்னுதானே! பக்தி இருந்தா எங்க உங்க சுண்டு வெரலக் குடுங்கடா! பார்ப்போம்’னு சினிமாவுலயே தமாஷ்ங்கற பேர்ல, குறிப்பா நம்ம கலாசாரத்தைக் கிண்டல் பண்ணி இருக்காங்க.

மொட்டை அடிக்கறதப் பத்திப் பார்க்கலாம். அடுத்தவங்கள மொட்டை அடிக்கறதப் பத்தி இல்ல. நமக்கு அடிச்சுக்கறதப் பத்தி. கூர்மையாக் கேக்கணும். நாம எல்லாரும் அம்மா வயத்துல பத்து மாசம் (கர்ப்பத்தில்) இருக்கோம்; அதாவது முந்நூறு நாள். அங்க அம்மா வயத்துல நாம இருக்கறப்ப நம்மச் சுத்தி என்ன பாலும் தேனுமா இருக்கு? அல்லது ஏ.சி. இருக்கா? நம்மளச் சுத்தி ரத்தம், சதை, மலம், ஜலம் (சிறுநீர்)னு தான் இருக்கு. அதுங்களுக்கு நடுவுலதான் முந்நூறு நாள் இருந்துருக்கோம். அதுங்கள்லாம் நம்ம உடம்புல எவ்வளவு ஊறியிருக்கும்? உதாரணத்துக்கு, கடல் தண்ணியில நம்ம சுட்டு வெரல வெச்சு எடுத்துட்டு, துணி யால தொடச்சுட்டு, வெரல நாக்குல வெச்சுப் பாத்தா உப்புக் கரிக்கும். ஒரு விநாடி உப்புத் தண்ணியில இருந்த வெரலுக்கே, உப்பு அப்பிடி ஊறியிருக்குதுன்னா... முந்நூறு நாள் அம்மா வயத்துல ரத்தம், சதை, மலம், ஜலம் (சிறுநீர்)னு, நம்ம உடம்புல எத்தனை ஊறி இருக்கும்? அதெல்லாம் நம்ம பொறந்ததுக்கு அப்பறமா, எப்பிடி வெளியேறும்?

உடம்புக்குள்ள இருக்கறது எல்லாம், உடம்புல இருக்கற மயிர்க்கால்கள் மூலமா வெளியில போயிடும். ஆனா தலைக்குள்ளாற இருக்கறது எல்லாம் வெளியில போக என்ன வழி?’’ என்ற தாத்தா அருகில் இருந்த தண்ணீரைப் பருகி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.