Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

Published:Updated:
இளைஞர் சக்தி
பிட்ஸ்


ஜப்பான் பிறந்த கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ்

சீ னாவை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ‘நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்!’ என்று ஆசைப்பட்ட அரசன், அதற்கான வழி முறை களைக் கூறும் பொருட்டு கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு அவர்களை கைதிகள் போல நடத்திய அரசன், தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான வழிகளைச் சொல்ல மறுத் தால் எவரும் உயிரோடு போக முடியாது என்று எச்சரித்தான். அறிஞர்கள் இப்படி ஓர் அபாயத்தை எதிர்பார்க்கவில்லை. ‘ஆயுள் கூடுவது என்பது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது? இந்தப் பைத்தியக்கார ராஜாவிடம் இதை எப்படிச் சொல்வது,’ என்று திணறினர்.

அப்போது ஒரு அறிஞர் எழுந்து ‘‘தோழர்களே! நாம் ஒரு தந்திரம் செய்வோம். ஆயுள் கூடும் அதிசய மூலிகை ஒரு தீவில் இருப்பதாகவும், அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்துதான் எடுத்து வர வேண் டும்... அப்படி ஒரு மாத காலம் தங்க வேண்டி இருப்பதால் எங்கள் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் எனக் கூறுவோம். அப்படி அவன் அனுப்பி வைத்தவுடன்- எரிமலைத் தீவு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் கஷ்டமான பூமிதான். இருந்தாலும், நாம் முயற்சி செய்தால் நிச்சயம் அதைச் சிரமப்பட்டுச் சொர்க்கபுரியாக மாற்றி விட முடியும்!’’ என்றார்.

அரசனுக்கு விஷயம் சொல்லப்பட்டது. தானியம், உதவிக்குச் சில வீரர்களுடன் கப்பல் கள் மூலம் அவர்களை அனுப்பி வைத்தான். ‘‘வெறும் கையுடன் திரும்பி வந்தீர்களானால் எவரும் உயிர் தப்ப முடியாது!’’ என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தான் அரசன்.

பிறகு அந்த அறிஞர்கள், தங்களுடன் வந்த படை வீரர்களைக் கொன்று விட்டு, அந்த எரிமலைத் தீவை சென்றடைந்தார்கள். அங்கு நிலத்தைப் பண்படுத்தி ஒரு நாடாக ஆக்கினார்கள்! அந்த நாடுதான் ஜப்பான்!

எல்லா வகையான அறிஞர்களையும், உழைப்பாளிகளையும் கொண்டிருந்ததால்தான், அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் ஒன் றாகத் திகழ்கிறது ஜப்பான்.

- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி

தங்கத்தை விட அரியது எது?

பிட்ஸ்

ந்தச் சிற்றூரில் முதியவர் ஒருவர் தம் இரு புதல்வர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் தன் புதல்வர்களை அழைத்து, ‘‘நமது வயலில் பெரும் புதையல் இருக்கிறது. உடனே சென்று அதைத் தோண்டி எடுங்கள்!’’ என்று கட்டளையிட்டார். அதைக் கேட்ட மகன்கள், ‘நமது நிலத்தில் தங்கமும் வெள்ளியும் கிடைக்கப் போகிறது, நாம் செல்வந்தர் ஆகப் போகிறோம்!’ என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இரு சகோதரர்களும் வயலுக்குச் சென்று உற்சாகத்துடன் நிலத்தைத் தோண்டத் தொடங்கினர். காலை முதல் மாலை வரை நாள் விடாமல் தோண்டினர். ஆனால், அவர்கள் தோண்டத் தோண்ட களிமண் கட்டிகளையும், கற்களையும் காண முடிந்ததே தவிர, புதையல் எதுவும் கிடைத்தபாடில்லை. சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். ‘‘எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால் கூட, நாம் தாகத்தால் மடிந்து விடுவோம் போலிருக்கிறதே! தண்ணீரே தங்கத்தை விட அரியது’’ என்று புலம்ப ஆரம்பித்தார்கள். தனயர்களின் தயக்கத்தை அறிந்த தந்தை, ‘‘இவ்வளவு நாள் பட்ட பாட்டுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்!’’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

சகோதரர்கள் இருவரும் முன்னைவிட முனைப்போடு தோண்டும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்குப் பிறகு, குபுகுபுவென்று தண்ணீர் பீரிட்டுக் கிளம்புவதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினர். ஓடிச் சென்று தந்தையிடம் விவரத்தைத் தெரிவித்தனர். ‘‘தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. ஏன் தெரியுமா? அப்படிக் கூறி இருந்தால், நீங்கள் இவ் வளவு கஷ்டப்பட்டுத் தோண்டி இருக்க மாட்டீர்கள். புதையல் இருப்பதாகச் சொன்னதால்தான் உடனே போனீர்கள். தங்கத்துக்காக நீங்கள் தோண்டி னாலும், தண்ணீர் கிடைத்திருக்கிறது. பஞ்சம் தலை விரித்தாடும் இந்தப் பகுதி மக்களுக்கு தங்கத்தைவிட அதிக மகிழ்ச்சி தருவது இது!’’ என்றார் தந்தை.

_ மு. ஜெகந்நாதன், சென்னை-73

உண்மையான நண்பர்கள்!

பிட்ஸ்

கி ரேக்க தத்துவ மேதை சாக்ரடீஸ், தாம் குடியிருப்பதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அது மிகவும் சிறியதாக இருந்தது. அவரைப் பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீஸிடம், ‘‘உலகம் புகழும் தத்துவ ஞானியான தாங்கள் இவ்வளவு சிறிய வீடு கட்டுகிறீர்களே, இது எப்படி போதும்?’’ என்று கேட்டார். ‘‘இந்தச் சிறிய வீட்டை நிரப்பும் அளவுக்காவது உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனது சந்தேகம்’’ என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவர் அதன் பிறகு பேசவே இல்லை!

- ஆர். ராஜலட்சுமி, கரூர்-4

.