துள்ளி எழு

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஐ  ம்பது வயது மதிக்கத் தக்க மனிதர் அவர். எனது பெங்களூர் ஆசிரம வாசலில் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார். ஆசிரமத்தைப் பார்ப்பதும் கைக்கடிகாரத்தைப்

பார்ப்பதும், பெருமூச்சு விடுவதுமாக இருந்த அவரை தூரத்திலிருந்து பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவரை அழைத்து வரச்செய்து, ‘‘பிரச்னை என்ன?’’ என்று கேட்டேன்.

“சுவாமி, ஒரு பெரிய கவலை என்னை நீண்ட நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறது. நமது பாரத நாடு பாரம்பரியம்மிக்கது. எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குவது. ஆன்மிகத் துறையிலும் நமது நாடுதான் உலகுக்கே முன்னோடி. இந்து மதம் தழைத்தோங்கும் நமது நாட்டில் ஏராளமான ஞானிகள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள்.

என்னைப் போல் நடுத்தர வயதுள்ளவர்களும், முதியோர்களும் நல்லது- கெட்டது ஆராய்ந்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஓர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோயில், குளங்கள் என்று கிளம்பிப் போய் கடவுளைக் கும்பிட்டு, போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்கிறோம். விரதம் இருக்கிறோம். கடவுளுக்கு நேர்ந்து கொண்டு, அதை நிறைவேற்றாது போனால் ‘தெய்வ குற்றம்’ என்று எப்பாடு பட்டாவது நிறைவேற்றுகிறோம்.

கண்டதையும் சாப்பிடுவதில்லை. சனிக்கிழமை தவறினாலும் எண்ணெய்க் குளியல் தவறுவதில்லை. பெரியோர்கள் சொன்ன அறிவுரைகளை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் அதன்படியே நடந்து கொண்டிருக்கிறோம்...”

அவர் பிரச்னைதான் என்னவென்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. “நீங்கள் இதுவரை சொன்ன எதையும் எவரும் மறுக்கவில்லை. உங்கள் பிரச்னை என்ன... அதை நீங்கள் இன் னும் சொல்லவில்லையே?”

‘‘அவசரப்படுகிறீர்களே சுவாமிஜி! அதைத் தானே சொல்ல வருகிறேன். நமது நாட்டு இளைஞர்களை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. ஒழுக்கம் கிடையாது. புத்தி சொன்னால், எதிர்த்து ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.

பீட்ஸா, ஸாண்ட்விச் என்று கண்டதைச் சாப்பிடுகிறார்கள். ஒரு கோப்பை கறுப்பு காபியை ஐம்பது, அறுபது ரூபாய் கொடுத்துக் குடிக்கிறார்கள்.

தங்கம், வெள்ளியை எறிந்துவிட்டு இரும்பாலான பிக்காரித்தனமான நகைகளை ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். பணத்தின் அருமையே இவர்களுக்குத் தெரியமாட்டேன் என்கிறது.

தியேட்டருக்குப் போய்ப் பாருங்கள். ஏதோ இந்திர விழாவுக்கு வந்திருப்பது போல் ஜோடி ஜோடியாக இவர்கள் கொட்டம்தான். திரையில் காட்டுகிற படங்கள் பார்க்கச் சகிக்கிறதா என்றால், அதுவும் இல்லை. வெட்டு- குத்துதான். அரை குறைத் துணியோடு, ‘தையா...தக்கா’ என்று ஆடும் ஆட்டம்தான்.

கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் என்று டி.வி-யில் எதைக் காட்டினாலும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

டிஸ்கோ, பிஸ்கோ என்று அரையிருட்டுக் கூடங்களுக்குச் சென்று கண்டதைக் குடித்துவிட்டு ஜோடி, ஜோடியாக பெட்ஷீட்டை உதறுகிற மாதிரி ஆடி விட்டு பொழுது விடிகிற நேரத்தில் பேய் வேகத்தில் பைக்கில் திரும்புகிறார்கள்.

இப்படியெல்லாம் இருந்தால் இவர்கள் என்றைக்கு உருப்படப் போகிறார்கள்? இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்துகிற மாதிரி இவர்களுக்கு நாலு நல்ல வார்த்தையை உங்களை மாதிரி சாமியார்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். சொல்வீர்களா?” என்று நீளமாகப் பேசிவிட்டு என் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தார்.

அவரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. தனது இளமையில் காணாத பல விஷயங்கள் சமீப வருடங்களில் நடப்பதைக் கண்டு ஏற்பட்ட மிரட்சி அது. இளைஞர்கள் மீது பெரியவர்களுக்கு இப்படி ஆதங்கம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் தலைமுறை இடைவெளி.

ஒட்டுமொத்தமாக, ‘இளைஞர்கள் கெட்டுப் போய்விட்டார்கள்!’ என்றோ, ‘நமது கலாசாரத்தை அவர்கள் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்!’ என்றோ ஒரு போதும் நான் நினைத்ததே இல்லை. அவர்கள் அணுகுண்டுகளைப் போல. ஏகப்பட்ட சக்தியை உள்ளடக்கியிருப்பவர்கள். புத்திசாலிகள். கடந்த சில வருடங்களில் தம்முடைய புத்திசாலித்தனத்தினால் அமெரிக்கா போன்ற நாடுகளின் கவனத்தைக் கவர்ந்து நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர்கள். கடந்த கால கசப்பான நினைவுகளை உள்ளத்தில் தேக்கி வைத்துக் குழம்பாமல், எதிர் காலத்தைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல் நிகழ் காலத்தில் சாதனையும் சந்தோஷமுமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

பெரியவர் சொன்னது போல் சில வரம்பு மீறிய கொண்டாட்டங்களில் கொஞ்சப் பேர் ஈடுபட்டாலும் அதுவும் ஒரு கால அளவு வரை தான். உல்லாசங்களை உதறிவிட்டு மணிக் கணக்கில், நாள்கணக்கில், வாரக்கணக்கில் உழைத்துக் கொண்டே இருக்கிற உற்சாகத்தையும் அவர்களிடம் பார்க்க முடிகிறது. அதுதான் நாட்டின் நம்பிக்கை ஒளி!

நம் இளைஞர்களுக்கு ஒன்றுமே சொல்ல வேண்டியது இல்லை என்பதுதான் என் கருத்து. இருந்தாலும் எனது ஆசிரமத்துக்கு வந்த பெரியவர் போன்றவர்களின் கவலையும் உண்மையான அக்கறையின் அடிப்படையில் விளைந்ததுதானே! இந்தப் பெரியவர்களின் திருப்திக்காகவும், ஒளி வீசும் இளைஞர்களின் உள்ளத்தில் உற்சாகத்தையும், உறுதியையும் மேலும் வளர்க்கவும் விரும்புகிறேன்.

எனவே,

என் அன்புள்ள இளைஞர்களே,

என்னைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். அறிவுரை என்ற பெயரில் போரடிக்கிற ரகமில்லை நான். உங்களுக்குச் சமமாக தோளோடு தோளாக அமர்ந்து கொஞ்சம் உரையாடலாம் என்றிருக்கிறேன். நிறையக் குட்டிக் கதைகள் சொல்கிறேன். நான் சந்தித்த அற்புதமான அனுபவங்களைச் சொல்கிறேன். அழைக்கிறேன். வாருங்கள். ஒரு ஜாலியான அனுபவத்தை அடைவோம்... அடுத்த இதழில் இருந்து!