கேள்வி - பதில்

கல்விக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டா?

முன்பெல்லாம் நோட்டுப் புத்தகங்களின் மேல் அட்டையில் ஸ்வாமி படங்கள் காணப்படும். பார்க்கும்போதே தெய்விக உணர்ச்சி மேலோங்கும்! ஆனால், இப்போது அப்படி இல்லை. சினிமா நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்களது படங்கள் _ இப்படி பல படங்களைப் போடுகிறார்கள். இவற்றால் இளைஞர்களின் எண்ணம் பாழ்படுகிறதே..?

_ மீனாட்சி ஆவுடையப்பன், திருநெல்வேலி

கிரிக்கெட், அரசியல், சினிமா- இந்த ஈர்ப்புகள் பிள்ளைகளுக்கு இருக்கத்தான் செய்யும். அவர்களை நல்ல சமயச் சொற்பொழிவுகளுக்கு அழைத்துப் போங்கள். அவர்கள், கடவுளைப் பற்றி... மதம் பற்றி... சமயச் சடங்குகள் பற்றி சந்தேகப்படும்போது சரியான விளக்கம் சொல்லுங்கள். எரிச்சல் படாதீர்கள். உங்களுக்கே உண்மையில் தெரியாத போது, தெரிந்த மாதிரி ஏமாற்றாதீர்கள்!

இளைஞர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய சின்ன சின்னக் கேள்விகளை அடிக்கடி கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதில்கள் பற்றி, கலந்து பேசுங்கள். அவர்களது அறையில் ரமணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களை மாட்டி வையுங்கள். அதைவிட முக்கியம்... வீட்டில் பெரியவர்கள் ஆன்மிக உணர்வுடன், பண்புடன் வாழ்வது! முரட்டு ஆசாரம், ஆர்ப்பாட்ட அலட்டல் பூஜை கள், அர்த்தம் புரியாமலேயே சடங்குகளைப் பிள்ளைகளிடம் செய்யச் சொல்லும் அகங்கார மிரட்டல்கள் போன்றவை பிள்ளைகளை ஆன்மிகத்தில் இருந்து வெகுதூரம் விலக்கி விடும். எச்சரிக்கை!

படிக்கும் பசங்களுக்கு உணவுக் கட்டுப்பாடு என்பது அவசியமா? கல்விக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்?

_ எல். சுமதி, ஸ்ரீரங்கம்

ஓரளவாவது அவசியம்! தாறுமாறான கார, மசாலா உணவுகள் உணர்ச்சிகளைத் தூண்டி அறி வைக் குறைக்கும். பழச்சாறுகள், சூப் வகைகள் போன்றவை ரத்தத்தை லேசாக்கி மூளைக்கு ரத்த ஓட்டத்தைக் கூட்டி நினைவாற்றலை வளர்க்கும். இரவு, நேரம் கழித்து உண்டால், காலையில் கண் விழிப்பது கடினம். தூக்கமும் கெடும். எனவே, காலை நேரச் சுறுசுறுப்பும் குறையும். கடலைப் பருப்பைக் குறைத்து, துறவியர்கள் அதற்கு பதிலாகப் பாசிப் பருப்பு சேர்ப்பார்கள். கல்வி பயிலும் பிரம்மச்சரிய காலமும் துறவு மாதிரிதான்.

அதற்காக மற்ற மாணவர்கள் விதவிதமாகச் சாப்பிடும் போது பட்டினி போட்டு, சாமியார் மாதிரி சாப்பிடச் சொன்னால் கேட்பார்களா? கண்டதையும் வாங்கித் தின்பதைக் கண்டியுங்கள். காலத்தில் உணவு உண்ணப் பழக்குங்கள். அதிக உப்பு, காரம், புளிப்பு, மசாலா உடைய உணவை விடுத்து ருசிக்காகச் சிறிதளவு சாப்பிடப் பழக்குங்கள்.

இவை எல்லாம் ணீஸ்மீக்ஷீணீரீமீ பிள்ளைகளுக்குத்தான் பொருந்தும். ஆனால், அபாரசக்தி மிக்க- துடிப்பு மிக்க மாணவர்களுக்குப் பொருந்தாது.

தனது சகல சந்நியாசி சீடர்களுக்கும் உணவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்த பகவான் ராமகிருஷ்ணர், விவேகானந்தருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ‘‘அவன் நெருப்பு... எதையும் எரிக்கிற சக்தி உண்டு!’’ என்பார். எனவே, ணீதீஷீஸ்மீ ணீஸ்மீக்ஷீணீரீமீ பிள்ளைகளை நிபந்தனைகள் போட்டுச் சங்கடப்படுத்தாதீர்கள்.

வாரத்தில் ஒரு வேளை உபவாசம் இருக்க (முடிந்தால்) பிள்ளைகளைப் பழக்குங்கள். அது தவறுகளைச் சரி செய்யும். அவர்களுக்கு மலச்சிக்கல் இல்லையா என்பதை மட்டும் தயக்கம் இன்றி பேசித் தெரிந்து கொண்டு விடுங்கள். அதுவும் முக்கியம்! அவர்கள் ஆட்டம், ஓட்டம் அமைதிக்கேற்ப உணவை முடிவு செய்யுங்கள். இது ரொம்ப முக்கியம்!

என் வயது 27. நல்ல குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட எனக்கு இயல்பாகவே கோபம் வராது. படித்து முடித்து கடந்த ஆறு வருடங்களாக ஒரு நல்ல இடத்தில் பணி புரிந்து வருகிறேன். ஆனால், இப் போது ஒரு பிரச்னை. எனது அலுவலகத்தில் ஒருவர், என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு சீனியரான அவர், பக்திமான் என்றாலும் வேலை விஷயத்தில் மட்டும் என்னை அவருக்குப் பிடிக்கவில்லை.

பணியில் எனது வேகமும், சாமர்த்தியமும் பிடிக்காமல், ‘நேத்து வந்த பய நீ. என்னைய மீறிப் போயிடுவியா? அடங்கு!’ என்றெல்லாம் சொல்லி என்னை மட்டம் தட்டுகி றார். அலுவலகத்திலும் எனது வளர்ச்சியைத் தடுக்க என் னென்னவோ செய்கிறார். நான் என்ன செய்வது? அவரிடம் எனது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

_ ஜி. சரவணன், ஊர் பெயர் சொல்ல விரும்பவில்லை.

அவருக்கு நீங்கள் புத்தி சொல்ல முடியாது. அதற்காக வருத்தப்பட்டு மன இறுக்கம் அடைந்து உங்கள் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளவும் முடியாது. சொன்னால் சொல்லட்டும். உலகில் எங்கெங்கோ எத்தனை எத்தனையோ சொற்கள் சொல் லப்படுகின்றன. அவற்றால் நாம் பாதிக்கப்பட்டோமா என்ன? அது போல் அவர் உங்கள் எதிரிலேயே சொன்னாலும் சொல்லப்படாத தாகக் கருதுங்கள். அவற்றை எல்லாம் வாழ்த்தாகக் கருதுங்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் மன வளக்கலை மன்றத்தில் ஒரு நல்ல பயிற்சி தருகிறார்கள். தமது எதிரிகளைக் கூட, ‘வாழ்க வளமுடன்!’ என்று வாழ்த்திக் கொண்டே இருந்தால், அவர்கள் மனம் மாறி நெகிழ்ந்து விடுவார்கள். தியானம் அல்லது வழிபாடு முடிந்ததும் அவரை நன்கு மனதில் நினைத்து வாழ்த்துங்கள். பெரியவர்தானே... நாள் கிழமையில் அவரை நமஸ்காரம் செய்யுங்கள். விழுந்து கும்பிடக் கூச்சம் இருந்தாலோ, அலுவலகச் சூழல் இடம் தராது என்றாலோ கோயில் பிரசாதங்கள் கொடுத்து ஆசீர்வதிக்கும்படி பணிவுடன் நில்லுங்கள்.

அவரை எதிரியாக நினைக்கும் நினைப்பை முதலில் உங்களிடமிருந்து நீங்கள் தூக்கி எறியுங்கள். பிரபஞ்ச இயக்கம் வெறும் எதிரொலி மாதிரி... அவரும் வாழ்த்துவார் பாருங்கள்!

கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிடும்போது என் மனம் ஒருநிலைப்பட மறுக்கிறது. என்ன செய்யலாம்?

_ பி. கலைச்செல்வன், சேலம்-5

பாதி சொல்லி இருக்கிறீர்கள்... மீதி சொல்லவில்லையே! கோயில்கள் மீது கோபமா? மனம் குவியாமை உங்களது சாபமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த நிலை கோயில்களின் தவறா... உங்களின் தவறா?

சரி... கோயிலில் மனம் ஒரு நிலைப்படவில்லை என்றால், உங்கள் மனம் எங்கே குவிகிறதோ அங்கே ஒருநிலைப்படுங்கள். அதுவும் தியானத்தில் ஒரு வகையாகிறது. சங்கீதத்தில் மனம் நிலைப்பட்டால், அது நாதோபாசனை ஆகிறது. மனம் ஒருநிலைப்பட என்ன செய்யலாம் என்கிறீர்கள். எது செய்தாலும் மனம் ஒருநிலைப்படாது. ஏதும் செய்யாதிருந்தால், அதுவே மனம் ஒரு நிலைப்பட்ட நிலை என்பதை அறிவீர்களா? ‘சும்மா இரு... சொல் அற’ என்கிறது கந்தர் அனுபூதி.

ஒரு ரகசியம் சொல்கிறேன். காதை அருகில் கொண்டு வாருங்கள். கோயிலில் சாமி கும்பிடுகிற பலருக்கும் இதே கேள்வி மனதில் உண்டு. ஆனால், இதை பளிச்சென்று ஒப்புக் கொண்ட உங்களின் தைரியம் எத்தனை பேருக்கு வரும்?

ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். ஆனால், அவள் மதம் வேறு. அவசியம் ஏற்பட்டால், மதம் மாற வேண்டிய கட்டாயம் வருமோ என்ற கவலை எனக்கு வருகிறது! என்ன செய்ய?

_ கே. ராஜேஷ், நாகர்கோவில்

காதல் என்றால் தூய அன்பு என்று பொருள். எப்போதும் தூய அன்பு நிபந்தனையற்றது. நிபந்தனை உடைய எதுவும் காதலாகாது. எதிர்த் தரப்பிலிருந்து உங்கள் மதமாற்றம் நிபந்தனை என்று நிர்ப்பந்திக்கப்பட்டால், அங்கு காதல் காலாவதியாகி விடுகிறது. நிர்ப்பந்தத்தின் மூலம் மதமாற்றம் நிகழும்போது மதமும் மரணித்து விடுகிறது. ‘காதலா... மதமா?’ என்கிற கேள்விக்கே உங்கள் பிரச்னையில் இடம் இல்லை. அங்கு இரண்டுமே இல்லாமல் போகும் என்பதுதான் நிதரிசனமான உண்மை.

காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர், தங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்ற ஆரம்பிக்கிறார்கள். செதுக்குவார்கள். மாற்றி அமைப்பார்கள். அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதை நோக்கிப் பிறரை நகர்த்துகிறார்கள். அப்படியானால், இவர்கள் காதல் எதன் மீது? தான் விரும்பிய போக்குக்குக் காதலனை ஒரு காதலி மாற்றினால், அவள் காதல் இந்த நபர் மீது அல்ல. தன் விருப்பத்தின் மீதுதான் காதல். அந்த வடிவமைப்பில் தனது விருப்பத்தில் இந்த நபரை அவள் உள் திணிக்கிறாள். எனவே, அவள் உங்களைக் காதலித் திருந்தால் உங்களை மாற்றியமைக்க ஒரு போதும் அவள் விருப்பப்பட மாட்டாள்.

என் இந்து நண்பர் ஒருவர் கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தார். பணக்கார வீட்டுப் பெண். (அதுவும்கூட காதலுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.)

அந்தப் பெண் வீட்டில் காதலை முதலில் எதிர்த்தார்கள். முடிவில், ‘மதம் மாறினால் சம்மதம்!’ என்றனர். அந்தப் பெண் மெள்ள மெள்ள மாதா கோயிலுக்கு அழைத்துப் போய் பழக்கினாள். கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டங் களில் பங்கேற்க வைத்தாள். வெல்வெட் பைண்டிங் போட்ட பைபிள் வாங்கிக் கொடுத்தாள். சுவிசேஷ ஜெபக் கூட்டங்களுக்கு அழைத்துப் போகத் தொடங்கினாள். அவரும் ஆர்வமாக ஈடுபடுவது கண்டு அவளுக்கு ஒரே மகிழ்ச்சி! ஆனால், ஒரு நாள் வெகு சோகமாக அழுதபடி வந்தாள். ‘‘ஏன்? அவன் கிறிஸ்தவராக மாற சம்மதிக்க வில்லையா?’’ என்றார் அப்பா.

‘‘இல்லை அப்பா... ரொம்பவே மாறி விட்டார். அதீத ஈடுபாடு வந்து பாதிரியார் பயிற்சியிலேயே சேர்ந்து விட்டார்!’’ என்றார் மகள்.

ஒருவரை மாற்றுவது என்று முடிவெடுத்தால், தான் விரும்பும் அளவு மாற வேண்டும். அதற்கு மேல் மாறக் கூடாது. அதே நேரம், இப்படி தனது தேவைக்கேற்ற அளவு மட்டும் மாற்றுவது சுயநலமாகாதா? சுயநலம் எங்கிருக் கிறதோ, அங்கு காதலும் இல்லை; மதமும் இல்லை! புரிந்து கொள்ளுங்கள்.