ஏன்? ஏன்?

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்

மா  லை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத் துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’ ‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட் டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல் றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை- இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னை- கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள். அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார். பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க. என்னதான் கழுவி னாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது? அதுக்காகவே வீட்டு வாசப் படியில் - மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க.

இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன். ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!