Published:Updated:

ஆஹா... ஆன்மிகம்!

இளைஞர் சக்தி

''ஆஹா ஆன்மிகம் பகுதி அசத்தல்! படிப்புல மட்டுமில்ல... ஆன்மிகம், ஓவியக்கலை, சமூக பங்களிப்புன்னு பல விஷயங்கள்லயும் நாங்க கெட்டின்னு நிரூபிச்சிருக்காங்க, சென்னை கவர்ன்மென்ட் ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ் நண்பர்கள். அப்படியே எங்க காலேஜுக்கும் ஒரு நடை வாங்களேன்!'' என்று, ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஃபோன் மூலமாக ஏராளமான அழைப்புகள்!

அப்படியான அன்புக் கோரிக்கைகளில் இருந்து இந்த இதழுக்காக நாம் தேர்வு செய்தது, சென்னை- விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி!

''மனத்தளவில் குழந்தைகளாகவே வரும் மாணவர்களை நெறிப்படுத்துவதில் எங்களுக்கும் அதிக பொறுப்புகள் உண்டு. அவர்களைப் பக்குவப்படுத்த ஒரே வழி ஆன்மிகம்தான். சரியானபடி அவர்களை அதில் இணைத்து விட்டால் போதும்! நாங்களும் இந்த அடிப்படையிலேயே எங்கள் மாணவர்களை வழிநடத்துகிறோம்'' என்கிறார், கல்லூரியின் மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் விதுர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆஹா... ஆன்மிகம்!

அவர் சொல்வதை ஆமோதிப்பதாகவும், நம்மை ஆச்சரியப்படுத்துவதாகவும் உள்ளன, இந்தக் கல்லூரி மாணவர்களின் செயல்பாடுகள்.

''எங்கள் ஊருக்கு சொர்க்கமும் ஈடாகாது, தெரியுமா?'' என்று ஆரம்பித்து, சிதம்பரத்தை யும், தில்லை காளியையும் பற்றி விவரித்தார் மெக்கானிக்கல் மாணவர் தினேஷ்:

ஆஹா... ஆன்மிகம்!

''எங்க ஊர் பெயரைக் கேட்டதுமே நடராஜர்தான் நினைவுக்கு வருவார். சிவனுக்கும் காளிதேவிக்கும் ஆடல் போட்டி நடந்ததும், காளி தோற்றுப்போன கதையும் தெரியும்தானே? அப்ப, அம்பாளைக் குளிர்விக்க குங்கும அபிஷேகம் நடந்ததாம். அதை உணர்த்துற விதமா, இன்னிக்கும் எங்க ஊரு தில்லைக்காளிக்கு குங்கும அபிஷேகம் செய்வது வழக்கம். வரப்ரசாதியான தெய்வம். அம்மனின் காலில் சங்கிலி கட்டப் பட்டிருக்கும். அம்மன் தன் காலால் தலையைத் தொட்டுவிடக் கூடாது என்பதற்காக இப்படி சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்களாம்! சிதம்பரம் போனால், ஒருமுறை தில்லை காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வாங்க!''

ஆஹா... ஆன்மிகம்!

''கல்லூரிக்குள் நுழைந்ததும் முதல் வணக்கம் இந்தப் பிள்ளையாருக்குத்தான்'' என்கிறார், மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் தினேஷ். இவருக்கென்று தனியே பெயர் எதுவும் கிடையாதாம்! அவரவருக்குப் பிடித்த பெயரைச் சொல்லி வழிபடுகிறார்கள். புஜ்ஜி விநாயகர், பட்டு விநாயகர், மூஞ்சூர் செல்லம்... இப்படி நீள்கிறது, மாணவர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர்களின் பட்டியல்.

''பாபாதான் எனக்கு எல்லாமே!'' என்கிறார் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஆதித்யா. தனது பர்ஸில் இருந்து ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவின் படம் ஒன்றை எடுத்துக்காட்டியவர், அந்தப் படம் குறித்த தகவலை பயபக்தியோடு பகிர்ந்துகொண்டார்.

''நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. வலிப்பு அதிகமாகி, ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருந்தோம். பிழைப்பாரா மாட்டாரான்னு

ஆஹா... ஆன்மிகம்!

எல்லோரும் கவலையா இருந்தாங்க. அப்ப, நீளமான அங்கி அணிஞ்சிருந்த ஒரு தாத்தா என் அருகில் வந்து, 'கவலைப்படாதே! உன் அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அங்கிருந்த வேறு யாரும் அவரைப் பார்த்ததா தெரியலை.விஷயத்தை அப்பாகிட்ட சொன்னேன். 'பாபாதான் வந்துட்டு போயிருக்கார்’ன்னு சொன்னார். நான் சிலிர்த்துப்போனேன். அந்தப் பெரியவர் சொன்ன மாதிரியே அம்மாவும் சீக்கிரமே குணமாகிட்டாங்க. அப்போ மட்டுமில்ல... இன்னும் பல சந்தர்ப்பங்கள்லயும் பாபா வோட அருளை அனுபவ பூர்வமா உணர்ந்திருக்கேன். இங்கே முதல் நாள் காலேஜுக்கு வரும்போது பதற்றத்தோடவும் பயத்தோடவும் வந்தேன். அப்பவும் அதே போல ஒரு தாத்தா வந்து, ஒரு படத்தை என்னிடம் கொடுத்து 'பயப்படாதே’ன்னு சொல்லிட்டுப் போனார். அந்தப் படம்தான் இது!''

கல்லூரி ரோட்டரி சங்கம் மூலமாக நிர்வாகத்தினருடன் இணைந்து இந்தக் கல்லூரி மாணவர்கள் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கது, 'ஈகை’ என்ற தலைப்பில் இவர்கள் செய்த வஸ்திர தானம். வீட்டில் உபயோகத்தில் இல்லாத துணிமணிகளை, உடைகளைச் சேகரித்து வந்து, ஆதரவற்ற வர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்கியிருக்கிறார்கள். மேலும், இலவச மருத்துவ முகாம், இலவச பல் சிகிச்சை முகாம் எனப் பல சத்காரியங்களை இவர்கள் செய்துவருவது ஹைலைட்!

ஆஹா... ஆன்மிகம்!

''பாட்டும் வயலினும் எனக்கு ரொம்ப இஷ்டம்!'' என்கிறார், ஆர்க்கிடெக்சர் மாணவி சுகன்யா. இருக்காதா பின்னே? பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்தி ஆயிற்றே!

ஆஹா... ஆன்மிகம்!

''எங்க தாத்தாவுக்கு பிடித்த தெய்வம் சிவன். எங்கள் குல தெய்வம் வைத்தீஸ்வரன்கோயில் ஈஸ்வரன்தான். நெற்றி நிறைய திருநீறும், பெரிய குங்குமமும்தான் தாத்தாவின் டிரேட் மார்க்! தன்னோட நல்ல நிலைமைக்கு அதுதான் காரணம்னு சொல்வார். திருவையாறு தியாகபிரம்ம சபையின் செயலாளராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கார். சின்ன வயசுல, தாத்தாகூட நானும் திருவையாறு போவேன். தாத்தா சொல்லிக்கொடுத்த பஞ்ச ரத்ன கீர்த்தனை களை எல்லோருடனும் சேர்ந்து பாடுவேன். அற்புதமான அனுபவம் அது! 'ராக ஆராய்ச்சி மையம்’னு ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இசையால் நோய்களைக் குணமாக்க முடியுமான்னு ஆய்வு செய்திட்டிருந்தார் தாத்தா.  'உனக்குப் பிடித்ததைச் செய்’னு தாத்தா சொல்லியதையே ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்'' என விவரிக்கும் சுகன்யாவுக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. அவர் வரைந்த சங்குப்பிள்ளையார் ஓவியம் இது.

''மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. எங்க டீச்சர்ஸ்தான் எங்களுக்கு தெய்வம். உதாரணமா... விதுர் சார் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும் விளக்கங் களும் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டுதல்'' என்று கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஐஸ்வர்யாவும், ''விவேகாநந்தர்தான் என்னோட குரு. அவரைப் பற்றியும் அவரோட தத்துவங் கள் குறித்தும் என்னோட தாத்தா நிறையச் சொல்லி யிருக்காரு. விவேகாநந்தர் தொடர்பான புத்தகங்களைச் சேகரிச்சு பொக்கிஷமா வெச்சிருக்கேன்'' என்று மாணவி வந்தனாவும் பகிர்ந்துகொண்டார்கள்.

- இ.லோகேஸ்வரி

படங்கள்: பா.ஓவியா