Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

யிரினங்களிலேயே மிக மிக உன்னதமானது ஆடு- கோழியோ, புழு- பூச்சியோ அல்ல! அதற்காக, ஆடு- கோழி போன்றவற்றின் ஆயுசு மட்டம் என்றோ, அதன் வாழ்க்கை அபத்தமானது என்றோ நான் சொல்ல வரவில்லை. உலக உயிர்களில், மனிதனுக்கு மட்டுமேயான சில விஷயங்கள்தான், பிரமிக்கத்தக்கதாகவும் உள்ளன; பிரச்னைக்கு உரியதாகவும் உள்ளன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களில் பலவகை உண்டு. சிலர், தங்களைப் பிறர் கேலி பேசுவதைக்கூட ரசித்துச் சிரிப்பார்கள்; சிலர் சின்ன விஷயத்துக்குக்கூட பொசுக்கென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர், இடியே விழுந்தாலும் கலங்க மாட்டார்கள்; வேறு சிலரோ, சின்னதாகப் பூ ஒன்று தலையில் விழுந்தால்கூட, வாரிச்சுருட்டிக்கொண்டு, அலறியடித்து ஓடுவார்கள். இப்படியான வேறுபாடான குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களால்தான் சமுதாயம் இயங்கி வருகிறது.

##~##
இத்தனை வேறுபாடுகளுக்கு மத்தியிலும், ஒருவரையருவர் பார்த்ததும் புன்னகைக் கிறோம்; கைகுலுக்கிக் கொள்கிறோம். பிறருடனான உறவைச் சுமுகமாகப் பேணுதலே வாழ்க்கை.

மனித அங்கங்கள் ஒவ் வொன்றும் வித்தியாசமானவை. ஆனால், அவை ஒருங்கிணைந்து தத்தம் வேலையைச் சரியாகச் செய்வதால்தான், மனித குலம் தழைத்து வருகிறது.  சமுதாயம் சீராக இயங்குவதன் சூட்சுமமும் இதுதான்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில்,  கைகளுக்குத்தான் எத்தனையெத்தனை வேலைகள்?!

கிராமங்களில், கிணற்றில் இருந்து நீர் இறைக்கின்ற வேலையில் துவங்கி, கன்றுக் குட்டியின் கழுத்தைத் தடவி அன்பு காட்டுவது வரை, கைகள் நமக்குக் கைகொடுக்கின்றன.

நம் நண்பர்கள் எவரேனும் நல்ல கவிதை எழுதிவிட்டால், அல்லது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றால், அல்லது குறைவான சம்பளம் என்ற நிலையிலும்கூடச் சிறுகச் சிறுகச் சேமித்து ஒரு வீடோ, நிலமோ வாங்கியதைத் தெரிவித்தால், அல்லது உண்டியலில் சில்லறைகளாகச் சேர்த்து, வருட இறுதியில் அநாதை இல்லங்களுக்கோ, ஆதரவற்றோர் சேவை இல்லங் களுக்கோ சென்று, துணி அல்லது உணவு வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை அறிந்தால்... உடனே நாம் என்ன செய்வோம்?!  

கைகுலுக்கி, 'பிரமாதம்டா’ என்போம்; குலுக்கிய கையை இன்னும் இறுக்கிக்கொண்டு, 'அற்புதம்! கலக்கிட்டே போ!’ என்று பாராட்டுவோம். மெள்ள அணைத்துக்கொண்டு, 'எட்டாவது படிக்கும்போது தமிழ் உனக்குத் தகராறா இருந்துச்சே! இப்ப எப்படிடா அற்புதமான கவிஞரா மாறினே? கிரேட்! உன்னைப் பார்த்தா பெருமையா இருக்குடா!’ என்று உற்சாகமாகச் சொல்வோம். இன்னும் சிலரை, சில விஷயங்களுக்காகக் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, தலையில் கைகளை வைத்து ஆசிர்வதிப்போம். சிலரது செயல்களைக் கேட்டதும், முதுகில் செல்லமாக அறைவோம்; வயிற்றில் லேசாகக் குத்துவோம்; கன்னத்தைப் பிடித்து, நறுக்கென்று கிள்ளுவோம்.

அடேங்கப்பா... விஷயம் பாராட்டுவதுதான் என்றாலும், நம் கைகள் செய்யும் செயல்களில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்?! மூளையின் கட்டளையை செவ்வனே ஏற்று, எப்படியெல்லாம் சிறப்புறச் செய்கின்றன, கைகள்? சில தருணங்களில் அன்பை, பாராட்டுதலை, உற்சாகத்தை, உத்வேகத்தை, அங்கீகாரத்தை நமது கைகளின் ஸ்பரிசத்தால் உணர்த்தும்போது, அந்த மௌன பாஷை, ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானதான அடர்த்தியாகிவிடுகிறது. ஆக, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளையும் கைகளின் ஸ்பரிசம் தரவல்லது என்பதே உண்மை!

'என்னைக் கைவிடமாட்டாய்தானே?!’ என்று காதலி, காதலனிடம் கேட்கும்போதும், 'உன்னை ஒரு கை பார்க்கிறேன் பார்’ என்று ஒருவரைப் பார்த்துச் சவால்விடும்போதும், 'நீதாம்பா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்தணும்’ என்று கைகூப்பி இறைவனை வேண்டும்போதும் கைகளே பிரதானமாக இருக்கின்றன. இவை அனைத்துமே நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்!

வாழ்க வளமுடன்!

ஆக, மனித வாழ்வில், கைகளின் பங்கு மிக மிக அவசியம்! எனவே, கைகளைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ரொம்பவே முக்கியம். இதனால்தான், மனவளக்கலை பயிற்சி முகாம்களில், கைப்பயிற்சி செய்வதற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

என்ன... கைப்பயிற்சி குறித்து 'ஒரு கை’ பார்த்து விடுவோமா?!

முதலில் நேராக நில்லுங்கள். இரண்டு பாதங்களுக்கும் இடையே சுமார் அரையடி இடைவெளி இருக்கட்டும். இரண்டு கைகளையும் சாதாரணமாக கீழே தொங்கவிடுங்கள். பிறகு, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கொண்டு வந்து, இரண்டு உள்ளங்கைகளையும் பத்துவிரல்களையும் ஒன்றாக்கி, கைகள் குவித்த நிலையில், அதாவது தலைக்கு மேல் உள்ள இடைவெளியில், கும்பிடுவது போன்ற தோரணையில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் இருந்தபடி, நான்கு முறை மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். மூச்சில் சீரான தன்மை ஒன்று வருவதை உணர்வீர்கள்; கைகளில், விரல்களில் ஒருவித தளர்ச்சி குறைந்து, புத்துணர்ச்சி பெறுவதை உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.

பிறகு, கைகளைப் பழையபடி கீழே தொங்கவிடுங்கள். இப்போது, இரண்டு முறை நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இதையடுத்து, கைகளை கீழே தளர்த்தியும், பிறகு தலைக்கு மேலே உயர்த்தியும் என மூன்று முறை மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள்.

அடுத்தது, இரண்டாம் நிலை. இப்போது இரண்டு கைகளையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீட்டிக் கொண்டு, கைகளை நன்றாக விரித்து, மூச்சை இழுங்கள். பிறகு, மார்புக்கு நேராகக் கைகளை நீட்டி, வழக்கம்போல் உள்ளங் கைகளையும் விரல்களையும் (கும்பிடுவதுபோல) இணைத்துக் கொள்ளுங்கள். இப்போது, இழுத்த மூச்சை வெளியே விடுங்கள். அதாவது, கைகளை இரண்டு பக்கமும் விரிக்கும்போது மூச்சை இழுத்து, நேரே குவிக்கும்போது, விடவேண்டும். இப்படி, ஐந்து முறை செய்யுங்கள்.

இதையடுத்து, மூன்றாம் நிலை. வழக்கம்போல், நேராக நின்று, கைவிரல்களை குவித்துக் கொள்ளுங்கள்; அப்படியே வலது கையை வலச்சுழலாக- அதாவது, உடலுக்கு முன்புறம் கீழிருந்து மேலாகச் சுழற்றுங்கள். அப்படிச் சுழற்றும் போது, முழங்கைப் பகுதி மடங்காமல் நேராக இருக்கவேண்டும் என்பது முக்கியம்! இதேபோல், இடது கை விரல்களைக் குவித்துக்கொண்டு, செய்யவும்.

இப்படியே கைகளை... ஐந்து முறை இடது கை; அடுத்து வலது கை... என மாறி மாறிச் சுழற்றுங்கள். பிறகு, முன்பு சுற்றியதற்கு எதிர்த் திசையில் மாற்றிச் சுழற்றுங்கள்.

கைகளில் ரத்த ஓட்டம் பரவும்; காற்றோட்டம் சீராகும்; வெப்ப ஓட்டமும் உயிர்ச்சக்தியின் ஓட்டமும் சீராக இயங்கும்.

அதுமட்டுமா? இன்னும் இன்னும் என நன்மைகள் பல உண்டு. கூடவே, கைகளுக்கான சில விசேஷ பயிற்சிகளும் உள்ளன.

பின்னே... தன் கையே தனக்குதவி என்று சும்மாவா சொன்னார்கள்?!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism