கட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பது குறித்து ஒரு புதிர் ஒரு கைதிக்கு அரசர் தண்டனை வழங்க விரும்புகிறார். ஆனால், அவன் புத்திசாலியாக இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என ஒரு வாய்ப்பு தருகிறார்.

இரண்டு அறைகள்; ஒன்றில் அழகான பெண்; மற்றொன்றில் பசித்த புலி.

முதல் அறையின் கதவில், 'இந்த அறையில் ஒரு பெண் இருக்கிறாள்; அடுத்த அறையில் ஒரு புலி இருக்கிறது’ என்று ஓர் அறிவிப்பு காணப்படுகிறது. அடுத்த அறையின் கதவில், 'இந்த இரண்டு அறைகளில் ஒன்றில் பெண் இருக்க, மற்றொன்றில் ஒரு புலி இருக்கிறது’ என்று அறிவிப்புப் பலகை தொங்குகிறது.

'இந்த அறிவிப்புகளில் ஒன்று மட்டுமே உண்மை; மற்றொன்று பொய்! இரண்டில் ஏதேனும் ஓர் அறையை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீ தேர்ந்தெடுக்கும் அறையில் பெண் இருந்தால், அவளை நீ மணந்துகொள்ளலாம். புலி இருந்தால், அதற்கு நீ இரையாவாய்!’ என்கிறார் அரசர்.

நீங்களாக இருந்தால் எந்த அறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? இந்த அறிவிப்புகளில் முதல் அறிவிப்பு சரியாக இருக்குமேயானால், இரண்டாவது அறிவிப்பும் சரியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு அறிவிப்பு மட்டுமே உண்மை எனும்போது, இந்த இரண்டில் இரண்டாவது அறிவிப்பு மட்டுமே உண்மை; முதல் அறிவிப்பு பொய்! அதனால், முதல் அறையில் புலியும், இரண்டாவது அறையில் பெண்ணும் இருக்கவேண்டும்.

மருத்துவம் என்பது விஞ்ஞானம் சார்ந்த அணுகுமுறை என்றாலும், அதிலும் நோய்க்கு ஏற்ப சிந்திப்பது அவசியம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை பெரிய (அரசு) ஆஸ்பத்திரியில் டாக்டர் குருசாமி முதலியார் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஆஸ்பத்திரி வாயிலில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

மாலையில், புறநோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பார். பணக்காரராயினும் எளிய உடையே உடுத்தும் பண்புள்ளவர். ஏழை எளியோருக்கு வைத்தியம் செய்ய அவர் காசு கேட்பதில்லை. அவரின் அருகில் இருக்கும் மேசை மேல் நோயாளிகள் தாங்கள் விரும்பும் தொகையை வைத்துச் செல்வார்கள். அதுவும் கட்டாயமில்லை.

ஒரு நாள் மாலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி இவரிடம் வந்து, தனக்கு ஆறு மாத காலமாக தலைவலி தீராமல் இருப்பதாகக் கூறினார். தான் வேறு டாக்டர்களிடம் பார்த்த வைத்தியத்துக்கு ஆதாரமாக சிகிச்சைக் குறிப்புகள் அடங்கிய ஃபைல்களைக் காட்டினார். டாக்டர் அவற்றைப் புரட்டிப் பார்த்தார்.

அந்தப் பெண்மணியின் முகத்தை உற்று நோக்கினார். கண்களை மூடிக்கொண்டார். இரண்டு நிமிட நேரம் கழித்து, அந்த அம்மாளிடம், 'உங்கள் மூக்குத்தியைக் கழற்றுங்கள்' என்றார். அந்த அம்மாளும் கழற்றிக் கொடுத்தார். பக்கத்தில் நின்ற நர்ஸிடம் மூக்குத்தியைக் கொடுத்து, பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொன்னார்.

'மருந்து எதுவும் வேண்டாம். பத்து நாள் கழித்து வந்து பாருங்கள்' என்று அந்த அம்மாளை அனுப்பி வைத்தார் டாக்டர்.

பத்து நாள் கழிந்து, டாக்டரைப் பார்க்க வந்த அந்த அம்மாள், 'தலைவலியே இல்லை' என்று மகிழ்வோடு சொன்னார்.

'இனிமேல் மூக்குத்தி போடாமல் இருந்தால் உங்களுக்குத் தலைவலியே வராது. இந்த வைர மூக்குத்தியின் ஒளியைத் தாங்கக்கூடிய சக்தி உங்கள் கண்களுக்கு இல்லை' என்று கூறி, அந்த அம்மாளின் வைர மூக்குத்தியைத் திருப்பிக் கொடுத்தார் டாக்டர் குருசாமி முதலியார்.

துணி தைக்கும்போது ஒரு பெண் ஊசியை விசையுடன் இழுக்கும்போது, அது தவறுதலாக அவர் கண்ணில் சொருகிவிட்டது. ஊசியில் தொங்கும் நூலைப் பிடித்து இழுத்தால், ஊசி தாறுமாறாக அந்தப் பெண்ணின் கண்ணுக்குள் பாதிப்பு ஏற்படுத்திவிடுமோ என்று அனைவரும் அஞ்சினர். உள்ளூர் மருத்துவரை அணுகியபோது, அந்தப் பெண்ணை அங்கே இங்கே நகராமல் அந்த இடத்திலேயே இருக்கும்படி கூறிவிட்டு, நான்கைந்து தென்னந்துடைப்பக் கட்டைகளைக் கொண்டு வரச் சொன்னார். வந்ததும், அவற்றை ஒன்றாகக் கட்டி, அதன் மேல் அந்தப் பெண்ணைத் தலைவைத்துப் படுக்கச் சொன்னார்.

நூலைக் கையால் பிடித்துக்கொண்டு, அந்தப் பெண்ணின் தலையின்கீழ் இருந்த துடைப்பக்கட்டையிலிருந்து ஒவ்வொரு குச்சியாக உருவும்படி சொன்னார். அப்படியே உருவ, பெண்ணின் தலை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்க, கொஞ்சமும் வலியே இல்லாமல் ஊசி கண்ணில் இருந்து வெளியே வந்துவிட்டது. அறுவை சிசிக்சையோ, அபாய எச்சரிக்கையோ தராமல் ஒரு பெரிய பிரச்னையை அவர் இப்படி சாமர்த்தியமாகத் தீர்த்துவைத்தார்.

ஒரு மன்னருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்குக் கூன் முதுகு. அதனால் அவனுக்கும் மன்னருக்கும் பெரிய கவலை. பல வைத்தியர்களை வரவழைத்து மகனுக்குச் சிகிச்சை அளித்தார். ஆனால், பலனில்லை.

அப்போது அந்த ஊருக்கு வெளியூரிலிருந்து ஒரு மருத்துவர் வந்தார். அவர் இளவரசனைப் பார்த்ததும், 'இதைச் சரிசெய்ய வைத்தியமே தேவையில்லை. சில உடற்பயிற்சிகள் செய்தாலே போதும்' என்று சொல்லி, அவற்றைச் செய்து காண்பித்தார்.

இளவரசனோ விரக்தியின் உச்சத்தில் இருந்ததால், அந்த உடற்பயிற்சிகளைச் செய்யாமல் தவிர்த்தான். மன்னர் இதைக் கவனித்துவிட்டு, மருத்துவரிடம் தெரிவித்தார். பின்பு, மருத்துவரின் ஆலோசனையின்பேரில், அவன் அறையில் ஒரு பளிங்குச் சிலையை அவன் கண்ணில் படுமாறு வைத்தார்.

அது ஓர் இளைஞனின் சிலை. அந்தச் சிலை மிக அழகாக இருந்தது. அதன் அருகில் சென்று உற்றுப் பார்த்தான் இளவரசன். அதன் முகம் தன் முகம் போலவே இருக்கக் கண்டு, அது தனது உருவச்சிலைதான் என்பதைப் புரிந்துகொண்டான். 'நான் கூன் இல்லாமல் இருந்தால், இவ்வளவு அழகாக இருப்பேனா!’ என்று வியந்தான். அன்றிலிருந்து சிரத்தையாக, மருத்துவர் சொன்ன உடற்பயிற்சிகளை ஒன்றுவிடாமல் செய்தான். அவன் முதுகு நிமிர்ந்தது. மன்னர் மகிழ்ந்தார்.

மருத்துவம் என்பது உடலுக்கு அளிக்கிற சத்தை மட்டும் வைத்துத் தீர்மானிக்கப் படுவதில்லை; அது உள்ளத்துக்கு அளிக்கப் படும் உந்துதலையும் உள்ளடக்கியது. சிலரோ மனதைத் தளரவிட்டுவிடுவார்கள். அப்போது தங்களையும் அறியாமல், அவர்கள் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, நோயாளிக்கான மருந்தும், அவர்களைக் கவனித்துக்கொள்பவர் களும்கூட மிக முக்கியம் என்கிறார் திருவள்ளுவர். தேவையான நேரத்தில் ஓய்வு, சரியான நேரத்தில் தகுந்த உணவு, அக்கறையான கவனிப்பு என உதவியாளர்கள் அமைவதில்தான் இருக்கிறது, ஒரு நோயாளி எவ்வளவு விரைவில் பூரண நலம் பெறுகிறார் என்பது! நோயாளிகளுக்கு மருந்தைக் காட்டிலும் இதமான, ஆறுதலான, நம்பிக்கையூட்டும் சொற்கள் அவசியம். நமது முன்னோர்கள், வைத்தியர்களுக்குத் துறவியின் ஸ்தானத்தை கொடுத்துப் போற்றி வந்தது அதனால்தான்!

(இன்னும் மேலே...)