Published:Updated:

1,184 ஏக்கர் நிலம், ரூ.2,566 கோடி மதிப்பு - முதல்வர் வெளியிட்ட அறநிலையத்துறை நூல் சொல்வது என்ன?

அறநிலையத்துறை நூல் வெளியீடு

இந்த நூல் அறநிலையத்துறையின் ஓராண்டு செயல்பாடுகளுக்கான ரிப்போர்ட் கார்டு. இது சாதாரண நூலாக இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக வெளியாகியிருக்கிறது.

1,184 ஏக்கர் நிலம், ரூ.2,566 கோடி மதிப்பு - முதல்வர் வெளியிட்ட அறநிலையத்துறை நூல் சொல்வது என்ன?

இந்த நூல் அறநிலையத்துறையின் ஓராண்டு செயல்பாடுகளுக்கான ரிப்போர்ட் கார்டு. இது சாதாரண நூலாக இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
அறநிலையத்துறை நூல் வெளியீடு
நேற்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில், `ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகள் 2021- 2022' எனும் நூல் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஓர் ஆண்டில் அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் மீட்கபட்ட சொத்துகளின் விவரம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய தகவல்கள், மேற்கொள்ளப்பட்டிருக்கும் நில அளவைப் பணிகள் குறித்த தகவல்களின் தொகுப்பாக விளங்குகிறது இந்த நூல்.

இந்த நூல் வெளியீடு தொடர்பான புகைப்படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறையின் நூல் அட்டை
அறநிலையத்துறையின் நூல் அட்டை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற ஆண்டு, தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த ஓராண்டில் பெரும்பாலான நாள்களில் செய்திகளில் இடம்பிடித்தவரும் இவராகத்தான் இருப்பார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர், அன்னைத்தமிழில் அர்ச்சனை, மகா சிவராத்திரிப் பெருவிழா, அன்னதானத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அறநிலையத் துறையைத் தொடர்ந்து பேசு பொருளாக்கியவர் சேகர்பாபு தான் என்றால் மிகையல்ல. அதேவேளை அயோத்தியா மண்டப விவகாரம், பட்டணப்பிரவேச நிகழ்வு, தேர்த்திருவிழாக்களில் நடந்த விபத்துகள் என விமர்சனங்களும் வரிசை கட்டி நிற்கும் நிலையில்தான் 'ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகள் 2021- 2022' என்னும் இந்த நூல் வெளியாகி கவனம் பெற்றிருக்கிறது. இந்த நூலில் அப்படி என்னென்ன தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறித்து ஆராய்ந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயில்களுக்குச் சொந்தமான விலைமதிக்க முடியாத சொத்துக்களைப் பராமரிப்பது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் இருந்து வந்தன. சேகர் பாபு பொறுப்பேற்றது முதல் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின. இந்து சமய அற நிறுவனங்களுக்குச் சொந்தமான 4,78,251.18 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் உள்ளன.

இவற்றில் அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.3.2022 வரையிலான காலத்தில் 167 திருக்கோயில்களில் மொத்தம் 1184.13 ஏக்கர் நிலங்களும், 467 கிரவுண்டு மற்றும் 884 சதுரஅடி பரப்பளவுள்ள மனைப்பகுதிகளும், 47 கிரவுண்டு மற்றும் 813 சதுரஅடி பரப்பளவுள்ள கட்டடங்களும், 36 கிரவுண்டு மற்றும் 1867 சதுரஅடி பரப்பளவுள்ள திருக்குளங்களும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் திருக்கோயில் சுவாதீனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் ரூ. 2566.94 கோடி.

திருக்கோயில் நிலங்கள்
திருக்கோயில் நிலங்கள்
எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்தக் கோயில்களில் இருந்து இந்த நிலங்கள், சொத்துகள் மீட்கப்பட்டன என்பது குறித்து விரிவான அட்டவணையும் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் இரண்டு கோயில் நிலங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 82 கிரவுண்ட் பரப்பளவுள்ள இடம் 1928-ம் ஆண்டு 30 வருடங்களுக்கு விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்த பி.எஸ்.மேல்நிலைப்பள்ளிக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. அதன் பின்னர் 1.8.1958 முதல் மேலும் 21 வருடங்களுக்குக் குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்த குத்தகைக் காலம் 31.7.1979 அன்று முடிவடைந்துவிட்டது. இதுதொடர்பான இரண்டாம் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடமிருந்து சுமார் 46 கிரவுண்ட் இடத்தினை சுவாதீனம் பெறுவதற்குச் சட்டப்பிரிவு 78 ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை முடிவுற்ற நிலையில், கடந்த 3.9.2021 அன்று பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மூலம் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து குறிப்பிட்ட நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி 9.9.2021 அன்று அறநிலையத்துறை மூலம் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.276 கோடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், டாக்டர் ரமாதேவி என்பருக்கு வாடகைக்கு விடப்பட்ட 3,300 சதுர அடிக் கட்டடம், கச்சேரி சந்தில் வாடகைக்கு விடப்பட்ட இருந்த 1,344 சதுர அடிக் கட்டடம், பிச்சுப்பிள்ளைத் தெருவில் இருக்கும் 2,166 சதுர அடி காலி மனை ஆகியனவும் மீட்கப்பட்டன. இப்படி இந்த ஆண்டில் மட்டும் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 295 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான 2,40,451 சதுர அடி நிலமும் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 250 கோடி.

இப்படி மாவட்ட வாரியாக மீட்கப்பட்ட ஒவ்வொரு கோயிலுக்கும் உண்டான சொத்துகள் பற்றிய விவரங்கள் பட்டியல் வாரியாக நூலில் தரப்பட்டுள்ளன. பட்டியல் விவரப்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1367.37 கோடி சொத்துகளும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.13 கோடி மதிப்பிலான சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இவ்வாறு மீட்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு 2,566.94 கோடி!
சேகர்பாபு
சேகர்பாபு

"இந்த நூல் ஓராண்டில் அறநிலையத்துறையின் செயல்பாட்டுக்கான ரிப்போர்ட் கார்டு. இது வெற்று நூலாக இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக வெளியாகியிருக்கிறது. மீட்கப்பட்ட சொத்துகளின் விவரங்கள் சர்வே எண்களுடனும் சொத்து மதிப்புடனும் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.

"அனைத்தையும் தாண்டி, இந்த நூல் ஓர் ஆவணமாக்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று அரசின் இந்த நடவடிக்கைகளைப் பாராட்டும் ஆன்மிக ஆர்வலர்கள், "மீட்கப்பட வேண்டிய சொத்துகளின் பட்டியல் இன்னும் பலமடங்கு அதிகம். கோர்ட் உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சொத்துகளும் அவற்றில் உண்டு என்று அறிகிறோம். தமிழக அரசு துரித கதியில் எவ்வித சமரசமும் இல்லாமல் அவற்றையும் மீட்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடரும்பட்சத்தில் அது தி.மு.க அரசின் பெரும் சாதனையாக இருக்கும்" என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள்!

ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அடுத்த நான்கு ஆண்டுகளும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில்கள் சார்ந்த அனைத்து சொத்துகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டால் அது வெளிப்படையான மிகப்பெரிய ஆவணமாகத் திகழும். அரசுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தரும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism