Published:Updated:

சோலைமலை முருகனுக்கு 70 லட்ச ரூபாயில் வைரம் பதித்த சேவற்கொடி - காணிக்கையாகக் கொடுத்து அசத்திய பக்தர்!

சேவல் கொடி
News
சேவல் கொடி

தன் 70-வது பிறந்த நாளில் விழா எடுத்து 70 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம் பதித்த சேவற்கொடியைக் காணிக்கைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் பக்தர் ஒருவர்.

மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை என்று சொல்லப்படும் சோலைமலை முருகன் கோயிலில் 70 லட்ச ரூபாய் மதிப்பில் வைரம் பதித்த சேவற்கொடியை சாத்தி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் முருகபக்தர் சுப்பையா.

சோலைமலை முருகன்
சோலைமலை முருகன்

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தை சேர்ந்த முருக பக்தரான தொழிலதிபர் சுப்பையா, பல வருடங்களாக மதுரை சோலைமலை முருகன் கோயிலுக்கு பல்வேறு காணிக்கைகளை செலுத்தி வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே இங்குள்ள முருகனுக்கு தங்கவேல் சாத்தியவர் தற்போது தங்கத்தில் வைரம் பதித்த சேவல் கொடியை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

வைர சேவல் கொடி சாத்தப்படுகிறது
வைர சேவல் கொடி சாத்தப்படுகிறது

நேற்று சோலைமலை முருகன் கோயிலில் சுப்பையா குடும்பத்தினர் இதற்கான விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ரகுபதியும் அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சஷ்டி மண்டபத்தில் அமைந்துள்ள யாக சாலையில் சேவல் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்பு மேள தாளம் முழங்க வைர சேவல் கொடி ஆகம விதிப்படி மூலவர் சன்னதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

சேவல் கொடி
சேவல் கொடி

இதற்கான ஏற்பாடுகளை சோழபுரம் சுப்பையா - சரோஜா தம்பதியினரும், அவர்கள் குடும்பத்தினரும் செய்திருந்தார்கள். தென்மண்டல அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.