Published:Updated:

விழுப்புரம்: 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மர் பட்டாபிஷேக வீதியுலா; மேள தாளங்களுடன் கோலாகலம்!

தர்மராஜா வீதியுலா

விழுப்புரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் `ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேக திருவீதியுலா திருவிழா' வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம்: 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மர் பட்டாபிஷேக வீதியுலா; மேள தாளங்களுடன் கோலாகலம்!

விழுப்புரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் `ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேக திருவீதியுலா திருவிழா' வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Published:Updated:
தர்மராஜா வீதியுலா
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில், பழைமை வாய்ந்த ஸ்ரீ தர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் `தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா' தனிச்சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. அபூர்வமான இந்த வைபவம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய தினம் (02.08.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகாபாரத குருக்ஷேத்திரப் போர் நிறைவுற்றதும், பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும். அந்த ஐதீகத்தின் அடிப்படையில், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை தர்மருக்குப் பட்டாபிஷேகம் செய்து அவரை வரவேற்று வீதியுலா திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர் மேல்பாதி கிராம மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இந்தத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிய கிராமத்தினர், வீடுதோறும் நன்கொடை பெற்று, நேற்றைய தினம் திருவிழாவை கோலாகலமாக நடத்தியுள்ளனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் முழுவதும் சுமார் 20 அடி உயரத்திற்கு தென்னங்கீற்றால் பந்தல் போடப்பட்டிருந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் தர்மராஜாவும் கிருஷ்ணர், திரௌபதி, தர்மரின் சகோதரர்கள், காத்தவராயன் ஆகியோர் பவனி வர, இந்த வீதியுலாவில் யானைப்படை, குதிரைப்படையின் அணிவகுப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், கேரளா மோளம், மங்கல வாத்தியம், பஜனைக் குழு, இருளர் கலைக்குழு என பல்வேறு நிகழ்ச்சிகளும் தர்மராஜாவின் வருகையை பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றன. தங்களுக்கு தரிசனம் தந்த தர்மராஜாவை மலர்களைத் தூவி வரவேற்று வழிபட்டு மகிழ்ந்தனர் பக்தர்கள்.

யானை அணிவகுப்பு, கோலாட்டம்
யானை அணிவகுப்பு, கோலாட்டம்

குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தில் பிரச்னை உள்ள அன்பர்கள், தர்மர் வீதியுலா வரும்போது 'தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும்' என்று வேண்டி வணங்கினால், நிச்சயமாக அவர்களின் அந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

எனவே, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் பங்குபெற்று இறையருள் பெறும் பொருட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அந்த மக்களுக்கு ஊர்மக்கள் சார்பாக அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.