Published:Updated:

திருப்பதியில் முதியோர்கள், கைக்குழந்தையுடன் வருபவர்களுக்கு தரிசன தேதி அறிவிப்பு! #Tirupati

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்காக மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு தரிசனத்துக்கு வருகிற 29-ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வருபவர்கள் 30 -ம் தேதியும் (புதன்கிழமை) அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருப்பதி
திருப்பதி

திருமலை திருப்பதியில் வேங்கடேசப் பெருமாளை தரிசிக்க எந்நாளும் கூட்டம் நிரம்பி வழியும். அதுவும் புரட்டாசி மாதம் என்பதாலும் பிரம்மோற்சவம் என்பதாலும் கூட்டம் பெருமளவில் இருந்துவந்தது.

திருப்பதி
திருப்பதி

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தை உள்ளவர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

`திருப்பதி தரிசன’ புண்ணியம்  அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!

இந்தக் குறையைப் போக்கும் வண்ணம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்காக மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு தரிசனத்துக்கு வருகிற 29 -ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வருபவர்கள் 30-ம் தேதியும் (புதன்கிழமை) அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருப்பதி
திருப்பதி

இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில கண்டிப்பான விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, `65 வயது நிறைவுபெற்ற முதியவர் மற்றும் அவருக்கு உதவியாக அவருடைய துணைவரை மட்டுமே தரிசனத்துக்கு அழைத்துவர வேண்டும்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டையைக் கையில் வைத்திருக்கவேண்டியது அவசியம். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி
திருப்பதி

இவர்கள் காலை 10 மணி அளவிலும் பிற்பகல் 3 மணி அளவிலும் இரண்டு முறை அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவைக் காலை 8 மணி அளவிலேயே செய்துகொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டிருக்கிறது.