Published:Updated:

பெரியகாண்டியம்மனுக்கு 1,00,108 வெற்றிலை அலங்காரம்... கொரோனா 3வது அலையை தடுக்க நடந்த வேண்டுதல்!

வெற்றிலை அலங்காரம்
வெற்றிலை அலங்காரம்

கோயில் வளாகம், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மன் என எல்லாவற்றையும் 1,00,108 வெற்றிலைகளால் அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகம் செய்தனர். வெற்றிலைகளால் அலங்கரிப்பட்ட அம்மன், அற்புத காட்சியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தோகைமலை அருகே உள்ள பெரியகாண்டியம்மனுக்கு 1,00,108 வெற்றிலையில் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க நடந்த இந்த வேண்டுதலில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பொருந்தலூரை அடுத்த சின்னரெட்டிபட்டியில், பெரியக்காண்டியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலில், ஆவனி மாதம் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்த வருடம் உலக நன்மைக்காகவும், கொரோனா மூன்றாவது அலையை முற்றிலும் தடுக்கவும், மழை நன்றாக பெய்து, இந்தப் பகுதியே செழிக்கவும் 1,108 குத்துவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் பலரும் ஐந்து முக பித்தளை குத்துவிளக்குகளை எடுத்து வந்திருந்தனர். பூஜைக்கு வந்த பெண்களுக்கு மகாலெட்சுமி யந்திரம், வெண்கல அன்னபூரணி திருஉருவ சிலை, பூஜை பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பாக அந்தப் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

வெற்றிலை அலங்காரம்
வெற்றிலை அலங்காரம்
நாமக்கல்: 100 அடியில் பிரமாண்ட மண் சிலை; பக்தர்களைப் பரவசப்படுத்திய `துரியோதனன் வதம்' நிகழ்ச்சி!

இந்தக் குத்துவிளக்கு பூஜையைக் காண சுற்றியுள்ள பக்தர்களும் வந்திருந்தனர். அந்தக் குத்துவிளக்கு பூஜையில் 1,008 பெண் பக்தர்கள் விளக்கேற்றி, மாங்கல்யம் நீடித்திருக்க, வறுமையை ஒழிக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க, தொழில், கல்வியில் சிறந்து விளங்க, சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை என பல்வேறு வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் உள்பட பல்வேறு பொருள்களைக் கொண்டு தூவி வழிபட்டனர்.

கோயில் வளாகம், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மன் என எல்லாவற்றையும் 1,00,108 வெற்றிலைகளால் அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகம் செய்தனர். வெற்றிலைகளால் அலங்கரிப்பட்ட அம்மன், அற்புத காட்சியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க இந்த வெற்றிலை அலங்கார வேண்டுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இப்பூஜையில் மாவட்டம் முழுவதும் இருந்து பெண்களும், பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு