Published:Updated:

திருப்பதி: ஆடிப்பண்டிகை, ஆனி ஆஸ்தானம்; ஆர்ஜித சேவை ரத்து - திருமலை செல்பவர்கள் கவனத்திற்கு!

ஶ்ரீரங்கத்திலிருந்து திருப்பதிக்கு சீர்

ஶ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியின் உற்சவர் விக்ரகம் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் திருப்பதியில் பாதுகாக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசைகளாக ஆண்டுதோறும் ஆடி 1-ம் தேதி திருப்பதிக்கு வஸ்திரம் அனுப்பும் சடங்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

திருப்பதி: ஆடிப்பண்டிகை, ஆனி ஆஸ்தானம்; ஆர்ஜித சேவை ரத்து - திருமலை செல்பவர்கள் கவனத்திற்கு!

ஶ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியின் உற்சவர் விக்ரகம் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் திருப்பதியில் பாதுகாக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசைகளாக ஆண்டுதோறும் ஆடி 1-ம் தேதி திருப்பதிக்கு வஸ்திரம் அனுப்பும் சடங்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

Published:Updated:
ஶ்ரீரங்கத்திலிருந்து திருப்பதிக்கு சீர்

திருமலை திருப்பதியில் ஆனி ஆஸ்தானம் மற்றும் ஆடிப் பண்டிகை நாளை (ஜூலை 17) கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக ஃபைனான்சியல் இயர் என்று சொல்லப்படும் பொருளாதார ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடியும். திருப்பதியில் 1956-ம் ஆண்டு தேவஸ்தானம் தொடங்கப்பட்டது. அன்று முதல் இந்த அடிப்படையிலேயே புதுக்கணக்குத் தொடங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் திருமலை திருப்பதி ஆலயத்தில் புதுக்கணக்கு என்பது ஆடி மாதம் முதல் தேதியிலேயே தொடங்கப்பட்டு ஆனி கடைசி தேதியில் முடிவடையும். இந்தச் சம்பிரதாயத்தைக் கைவிடாமல் இன்றும் திருமலை ஆலயத்தில் இதை ஆனி ஆஸ்தானம் என்று கொண்டாடுகிறார்கள்.

ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்
ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்
ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்
ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாளை ஆடி மாதம் முதல் தேதியை முன்னிட்டு இந்த ஆனி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நாளில் மலையப்ப சாமி சர்வபூபால வாகனத்தில் தங்க வாசலில் விஷ்வக்சேனருடன் எழுந்தருள்வார். அவருக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் திருமலை திருப்பதி கோயிலின் சாவிகளை வேங்கடவனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து மீண்டும் அதைக் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பார்கள். அதன்பின் சுவாமி புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஶ்ரீரங்கத்திலிருந்து வஸ்திரம்

ஶ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியின் உற்சவர் விக்ரகம் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் திருப்பதியில் பாதுகாக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஶ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசைகளை ஆண்டுதோறும் ஆடி 1்-ம் தேதி திருப்பதிக்கு வஸ்திரம் அனுப்பும் சடங்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

நேற்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிருந்து திருப்பதி பெருமாளுக்கு வஸ்திரம், மாலைகள் மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதை ஒட்டி நேற்று (15.7.2022) அன்று ஶ்ரீரங்கத்தில் இந்த சீர் பொருள்கள் எல்லாம் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பின் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பிறகு அவை திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த சீர் வரிசைகள் நாளை திருப்பதி பெருமாள் சந்நிதியில் சமர்ப்பிக்கப்படும்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

களைகட்டும் திருப்பதி

இந்த நாளில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆர்ஜித சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. சர்வ தரிசனத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் குறைந்தது 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரியவருகிறது. என்றாலும் இந்த நாளில் பெருமாளை தரிசிப்பதை பாக்கியமாகக் கருதும் பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகிறார்கள். எனவே நாளை திருப்பதி செல்லத் திட்டமிடும் பக்தர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.