Published:Updated:

குளித்தலை அய்யர்மலை; ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் 3 வது சோமாவார வழிபாடு!

அய்யர்மலை 3 வது சோமாவாரா திருவிழா

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் 3 வது சோமாவாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அய்யர்மலை கோயில்
அய்யர்மலை கோயில்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது, 1,300 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கோயிலாகும். இந்தத் திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில், 1,017 படிக்கட்டுகளைக் கொண்ட புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.

மலை உச்சியின் மேல் அமையப் பெற்ற இந்த சிவஸ்தலத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதிலும், 3 வது சோமா வார விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில், இன்று மூன்றாவது சோமவார விழாவினை முன்னிட்டு அய்யர் மலை கோயில் குடிபாட்டைச் சேர்ந்தவர்களும், குளித்தலை, தோகைமலை, நங்கவரம், நச்சலூர், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று, ரெத்தினகிரீஸ்வரரை தரிசித்து, தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

அய்யர்மலை 3 வது சோமாவாரா திருவிழா
அய்யர்மலை 3 வது சோமாவாரா திருவிழா

அதேபோல், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோயிலுக்குக் காணிக்கையாக ஆடு, மாடு, கன்றுக்குட்டிகளை வழங்கியும், விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைவித்த பயிர்களை மலையைச் சுற்றி தூவியும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்தியும் பல்வேறு முறைகளில் வழிபாட்டைச் செய்தனர். இந்தத் திருவிழாவில், சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைதந்து, சாமி தரிசனம் செய்து சிவனை வழிபட்டனர்.