Published:Updated:

வேளாங்கண்ணி மாதா கோயிலில் ஈஸ்டர் திருவிழா - நாடெங்கிலுமிருந்து குவியும் பக்தர்கள்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு ,வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

வேளாங்கண்ணி மாதா கோயிலில் ஈஸ்டர் திருவிழா - நாடெங்கிலுமிருந்து குவியும் பக்தர்கள்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு ,வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

Published:Updated:
வேளாங்கண்ணி மாதா கோயிலில்

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவப் பெருமக்களின் தவக்காலம் ஈஸ்டர் தினத்தோடு முடிவுக்கு வரும். இதை ஒட்டி அனைத்துப் பேராலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழனையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இன்று ( 15.04.2022 ) இயேசு சிலுவையில் மரித்த நாளாகக் கருதப்படும் புனித வெள்ளியும், உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடப்படுவர். வேளாங்கண்ணியில் களைகட்டும் ஈஸ்டர் பண்டிகைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்த வண்ணமுள்ளனர்.

வேளாங்கண்ணி மாதா கோயிலில்
வேளாங்கண்ணி மாதா கோயிலில்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு ,வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து தரிசித்துச் செல்கின்றனர். இது சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்றழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலயக் கட்டட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குவது இந்த ஆலயம். இது வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஜபம், மன்றாட்டு, திருப்பலி, போன்றவை நடைபெற்றது. 10-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

நேற்று பாதிரியார்கள் பவனியைத் தொடர்ந்து பேராலயக் கலையரங்கில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டதைப் போல் பங்குத் தந்தை அற்புதராஜ் பாதங்களை கழுவினார். "நான் உங்களிடம் அன்பாக இருப்பதுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் "என்று வேத வசனத்தை நினைவு கூர்ந்தார்.

வேளாங்கண்ணி மாதா கோயிலில்
வேளாங்கண்ணி மாதா கோயிலில்

அதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திரு சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை.உள்ளிட்டவைகள் கலையரங்கல் நடைபெுறுகிறது.

17- ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism