Published:Updated:

ஶ்ரீரங்கம் : ‘மாட்டு வண்டியில் வந்து பெருமாளை தரிசித்த மக்கள்’ - 200 ஆண்டுகளாகத் தொடரும் வழிமுறை!

மாட்டு வண்டியில் ஊர்மக்கள்

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஊரிலிருந்து மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்தோடு ஸ்ரீரங்கத்திற்கு வந்து, ஶ்ரீரங்கநாதரைத் தரிசித்துச் செல்வதைப் பாரம்பர்யமாகச் செய்து வருகின்றனர்.

ஶ்ரீரங்கம் : ‘மாட்டு வண்டியில் வந்து பெருமாளை தரிசித்த மக்கள்’ - 200 ஆண்டுகளாகத் தொடரும் வழிமுறை!

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஊரிலிருந்து மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்தோடு ஸ்ரீரங்கத்திற்கு வந்து, ஶ்ரீரங்கநாதரைத் தரிசித்துச் செல்வதைப் பாரம்பர்யமாகச் செய்து வருகின்றனர்.

Published:Updated:
மாட்டு வண்டியில் ஊர்மக்கள்
கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியத்தில் உள்ள காவல்காரன்பட்டி, ஆர்.டி.மலை, அழகாபூர், கிராமனம்பட்டி, காரணாப்பட்டி, குன்னக்கவுண்டன்பட்டி, ராக்கிப்பட்டி, பொறைகிலாம்பட்டி, செம்பாரக்கல்லுபட்டி, நாட்டாள் கோவில்பட்டி, சுக்காம்பட்டி, கீழவெளியூர், வடசேரி, பாலசமுத்திரப்பட்டி என சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தங்களுடைய குலதெய்வமாகக் கருதுகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய ஊரில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்தோடு ஸ்ரீரங்கத்திற்கு வந்து, ரங்கநாதரை தரிசித்துச் செல்வதை பாரம்பர்யமாகச் செய்து வருகின்றனர் இந்த பக்தர்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமையன்று சுமார் 100-க்கும் மேற்பட்ட இரட்டை மாடு கட்டப்பட்ட மாட்டு வண்டிகளில், மேலே சொல்லப்பட்ட ஊர்மக்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்தனர். முதல்நாள் இரவு மாடுகளுக்கு பூஜை செய்து ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் விடிய விடிய பயணித்து மறுநாள் காலை ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீரங்கம் அருகிலுள்ள தோப்பு ஒன்றில் தங்கியவர்கள், மறுநாள் காலை கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று முடி காணிக்கை செய்தும், காது குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மாட்டு வண்டியில் ஊர்மக்கள்
மாட்டு வண்டியில் ஊர்மக்கள்

மேலும், 11 ஊர் கோயில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, அந்த மாடுகள் முன்னே போக அதன்பின்னே ஊர்மக்கள் திரளாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று பெருமாளை வணங்கினர். அரிசி, நவதானியங்கள் மற்றும் உண்டியலில் கிடைத்த பணத்தில் ஒருபங்கை ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, மீதமிருக்கும் அரிசி, தானியங்கள் மற்றும் உண்டியல் பணத்தை வைத்து ஊர்மக்கள் அனைவருக்கும் ஒன்று சேர்ந்து சமைத்து அன்னதானம் போட்டனர்.

மாட்டு வண்டியில் ஊர்மக்கள்
மாட்டு வண்டியில் ஊர்மக்கள்

இதுகுறித்து அந்த ஊர்மக்கள் கூறுகையில்,

“கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு மேல இந்த நிகழ்வை பாரம்பர்யமாக செஞ்சுக்கிட்டு வாரோம். விஞ்ஞானம் வளர்ந்த இந்தக் காலத்துலயும் பழைமை மாறாமல், எங்களுடைய முன்னோர்களைப் போல மாட்டு வண்டி கட்டி வந்தே எங்களுடைய குலதெய்வமான பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு போறோம். குடும்பத்தினர், உறவினர் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாக வந்து ஒரு திருவிழாவினைப் போல இந்நிகழ்வினைக் கொண்டாட்டமாகச் செய்கிறோம். எங்களுடைய சமுதாயத்தில் மாமன் வகையறா, பங்காளி வகையறா என தனித்தனியாக மாட்டு வண்டி கட்டி வந்து பெருமாளை தரிசிக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாமியிடம் உத்தரவு கேட்ட பின்னரே, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வருவதற்கு நாள் குறிப்போம். அப்படி நாங்கள் ஸ்ரீரங்கம் வந்துசென்ற அடுத்த 5 ஆண்டுகள்வரை பெருமாள் எங்களுக்குக் காவலாய் உடனிருக்கிறார். எங்களுக்கு எந்தவித நோய்களும், குறைகளும் ஏற்படுவதில்லை” என உருகுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism