Published:Updated:

பணம், தங்கம், வெள்ளி நகைகள்; இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல்!

பணத்தை எண்ணும் பணி

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. பணம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கிடைத்ததாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம், தங்கம், வெள்ளி நகைகள்; இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. பணம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கிடைத்ததாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பணத்தை எண்ணும் பணி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலம். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஓர் ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, பங்குனி மாதங்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவர். இதில் ஆடிப்பூரம், பங்குனிப் பொங்கல், சித்திரை விழா ஆகியவற்றிற்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்வது வழக்கம். இங்கு பக்தர்கள், விரதம் இருந்து நேர்த்திக்கடன்களாகப் பணம், தங்கம், வெள்ளிப்பொருள்களை உண்டியலில் செலுத்துவதுண்டு. சிலர், வேண்டுதலுக்காக ஆடு, மாடுகளை நேர்ந்துவிடுவதும் வழக்கம்.

அதன்படி இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியலில் சேரும் காணிக்கைகளை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறும். கடந்த மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் வளர்மதி, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்ட பணி மாலைவரை நடைபெற்றது.

பணத்தை எண்ணும் பணி
பணத்தை எண்ணும் பணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உண்டியல் பணம்
உண்டியல் பணம்

எண்ணிக்கையின் முடிவில், கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக 26 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 99.500 கிராம் தங்கம், 168 கிராம் வெள்ளி பொருள்கள் கிடைத்ததாக நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காணிக்கைப்பணம் மற்றும்‌ நகைகள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இந்தத்திருப்பணியில் ஐயப்பா சேவா சங்க ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாட்கள், வங்கி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி செய்திருந்தார்.