Published:Updated:

சாத்தூர்: ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்; நோய்நீங்க, வறுமை, பசிப்பிணியின்றி உலகமக்கள் வாழ சிறப்பு பூஜை!

அன்னாபிஷேகம்

மக்களுக்கு நோயற்ற வாழ்வு வேண்டும், மும்மாரி பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், வறுமை அற்று, பசிப்பிணி நீங்கி உலக மக்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என வேண்டி அன்ன லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சாத்தூர்: ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்; நோய்நீங்க, வறுமை, பசிப்பிணியின்றி உலகமக்கள் வாழ சிறப்பு பூஜை!

மக்களுக்கு நோயற்ற வாழ்வு வேண்டும், மும்மாரி பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், வறுமை அற்று, பசிப்பிணி நீங்கி உலக மக்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என வேண்டி அன்ன லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Published:Updated:
அன்னாபிஷேகம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தில் ஐப்பசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு பால், பச்சரிசி, தயிர், மஞ்சள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினால் விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, உலகம் முழுவதும் மக்கள் நோயற்ற வாழ்வு வேண்டும், மும்மாரி பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், வறுமை அற்று, பசிப்பிணி நீங்கி நீர், காற்று, அன்னம், ஆகாரம் உணவுப்பொருள்கள் அனைத்தும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டி அன்னாபிஷேக லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிவபெருமானின் இந்த அலங்காரத்தைக் காண சாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

அன்ன லிங்கம்
அன்ன லிங்கம்
மூலவர்
மூலவர்

தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இகையடுத்து 6 மணிக்கு மேல் அன்னாபிஷேகத்தை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சிவாச்சார்யர்கள் பாசுரங்கள் பாட, கோயில் பட்டர்கள் வேத மந்திரங்கள் ஓதி, பூஜை செய்தனர். தொடர்ந்து குழியில் நீர்நிறைத்து அதில் அன்னத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள அகஸ்தியருக்கு பால், பன்னீர் சந்தனம், விபூதி, குங்குமம், தயிர், ஜவ்வாது, தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து ஶ்ரீவிஸ்வநாதருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சாத்தூர் விஸ்வநாதர் ஆலயத்தில் நடந்த ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.