Published:Updated:

சிறப்பு தரிசனக் கட்டணம் வசூல்! கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடப்பது என்ன?

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

'கோடி அர்ச்சனை' என்ற பெயரில் சிறப்பு தரிசனக் கட்டணத்துக்கு நீங்கள் பக்தர்களிடம் அடாவடியாகப் பணம் வசூலிக்க வேண்டாம். நாங்களே பிச்சை எடுத்து அந்தப் பணத்தைக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்' என்றார் நாஞ்சில் ராஜா.

சிறப்பு தரிசனக் கட்டணம் வசூல்! கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடப்பது என்ன?

'கோடி அர்ச்சனை' என்ற பெயரில் சிறப்பு தரிசனக் கட்டணத்துக்கு நீங்கள் பக்தர்களிடம் அடாவடியாகப் பணம் வசூலிக்க வேண்டாம். நாங்களே பிச்சை எடுத்து அந்தப் பணத்தைக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்' என்றார் நாஞ்சில் ராஜா.

Published:Updated:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில், விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள ராமாயண கண்காட்சி, சூரியன் உதிப்பது, சூரியன் மறைவது என சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பலவும் கன்னியாகுமரியில் உள்ளன. அதிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் 'கோடி அர்ச்சனை' என்ற பெயரில் 20 ரூபாய் வசூலித்து வருவதாகவும். அதுவும் ஒரு விதத்தில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான அடாவடி வசூல் எனவும் கூறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் கன்னியாகுமரி மாவட்ட ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பாளரான நாஞ்சில் ராஜா என்பவர் 'எதற்காக பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஐயப்ப சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா
ஐயப்ப சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உண்மையில் என்ன்ன நடக்கிறது என அறிய விசாராணையில் இறங்கினோம். ஐயப்பா சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜாவிடம் பேசினோம்,

"கடந்த பெளர்ணமி தினத்தில் நாங்கள் கன்னியாகுமரி கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோடி அர்ச்சனை என்ற பெயரில் பக்தர்களிடம் 20 ரூபாய் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே இதுபோன்று வசூலித்ததால் நாங்கள் இணை ஆணையரிடம் புகார் சொன்னோம். அதற்கு அவர் 'அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கிறேன்' எனக் கூறினார். ஆனாலும் 'இப்போதும் பணம் வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறீர்களே' எனக் கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

20 ரூபாய் டோக்கன் எடுத்துக்கொண்டு கொண்டுபோகிறவரிடம் இருந்து அதை வாங்கித் திரும்பவும் விற்கும் அநியாயமும் நடக்கிறது. எதற்காகப் பணம் வசூலிக்கிறீர்கள் எனக் கேட்டால் 'இது வழிபாட்டுக் கட்டணம் இல்லை. கோடி அர்ச்சனை ரசீது' என்கிறார்கள். இதுவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கோடி அர்ச்சனை நடத்தியது இல்லை. நடக்காத கோடி அர்ச்சனையை நடப்பதாகக் கூறிப் பணம் வசூகிக்கிறார்கள். 20 ரூபாய் கொடுக்காமல் சாமி கும்பிட வேண்டுமானால் வலது பக்கமாக வேறு வழியில் அனுப்புகிறார்கள். எனவே, கோடி அர்ச்சனை என்ற பெயரில் பக்தர்களிடம் சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்துக் கோயில் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். 'நீங்கள் பக்தர்களிடம் அடாவடியாக பணம் வசூலிக்க வேண்டாம் நாங்களே பிச்சை எடுத்து தருகிறோம்' என்று அந்தப் பணத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றார்.

இணை ஆணையரிடம் மனு
இணை ஆணையரிடம் மனு

இதுபற்றிக் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் இணை ஆணையர் ஞானசேகரிடம் பேசினோம்,

"கோடி அர்ச்சனை செய்ய விரும்புகிறவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். கோடி அர்ச்சனை செய்கிறவர்கள் இந்த ரூட்டில் போகிறார்கள். மற்றவர்கள் வேறு வழியில் செல்கிறார்கள். கோடி அர்ச்சனை நடக்கவில்லை என அவர்கள் சொல்வது தவறு. மூலஸ்தானத்தில் ஒருவர் உட்கார்ந்து கோடி அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டக் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன கியூ கிடையாது. அர்ச்சனை டிக்கெட் எல்லா கோயில்களிலும் உண்டு. விரும்புகிறவர்கள் வாங்குகிறார்கள் அவ்வளவுதான்" என்றார்.