Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

பெருமாள்
News
பெருமாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்றழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. இதில், பல்லாயிரகணக்கான கலந்துகொண்டு மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்றழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. இதில், பல்லாயிரகணக்கான கலந்துகொண்டு மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:
பெருமாள்
News
பெருமாள்

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கியது.

கோயில்
கோயில்

தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெருமாள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று, அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு காலசாந்தி மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள்
பக்தர்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லமுடியாத பக்தர்கள், தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குத்தான் காணிக்கைகளை வழங்குவார்கள். அதைப்போல, திருப்பதி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோரும் தவிர்க்கமுடியாத காரணங்களால் பயணம் தடைப்பட்டால் தங்களின் நேர்த்திக்கடனை தென் திருப்பதி கோயிலுக்கே செலுத்துவர். இந்தக் கோயிலில் பெருமாளுக்கு, ஆடு, மாடு, விவசாய தானியங்களை தானமாகக் கொடுப்பதன் மூலம் விவசாயம் செழித்து வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதிகம்.

திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு வெளிமாவட்டங்கள் உள்பட வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக மருத்துவ முகாம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி 600 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டநெரிசலைப் பயன்படுத்தி, திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.