Published:Updated:

கோடை வெப்பம் தணிய 60 ஆண்டுகளுக்குப்பின் நடந்த வசந்த உற்சவம்; திருநகரி கோயிலில் கோலாகலம்!

வசந்த உற்சவம்

108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இத்தலத்தில் இரணியநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் தனித்தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

கோடை வெப்பம் தணிய 60 ஆண்டுகளுக்குப்பின் நடந்த வசந்த உற்சவம்; திருநகரி கோயிலில் கோலாகலம்!

108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இத்தலத்தில் இரணியநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் தனித்தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

Published:Updated:
வசந்த உற்சவம்

திருவெண்காடு  திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது.

வசந்த உற்சவம்
வசந்த உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்திபெற்ற கல்யாண ரங்கநாதபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இத்தலத்தில் இரணியநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர்  தனித்தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது இயற்கை எழில்சூழ்ந்த குளுமையான நந்தவனத்தில் பெருமாள் எழுந்தருள்வதால் அக்னி நட்சத்திரத்தின் கடுமையான வெப்பம் தணியும் என்பது ஐதிகம். இந்த உற்சவம் நேற்றிரவு  நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய இரண்டு சுவாமிகளும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில் வளாகத்திலுள்ள  நந்தவனத்தில் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து நந்தவனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

வசந்த உற்சவம்
வசந்த உற்சவம்

செயல் அதிகாரி குணசேகரன், உபயதாரர் சீனிவாசன். பக்த ஜனசபை தலைவர் ரகுநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட வசந்த உற்சவம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism