Published:Updated:

விருதுநகர்: சாத்தூரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் ஊர்வலம்

"விருதுநகர் மற்றும் சாத்தூரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலையில் விஜர்சனம் செய்யப்பட்டன".

விருதுநகர்: சாத்தூரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

"விருதுநகர் மற்றும் சாத்தூரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலையில் விஜர்சனம் செய்யப்பட்டன".

Published:Updated:
விநாயகர் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி விருதுநகரின் பல்வேறு பகுதிகளிலும், சாத்தூர் முக்குராந்தல், படந்தால், அண்ணா நகர், வெங்கடாசலபுரம், சொக்கலிங்கபுரம், ஒத்தையால், ஒ.மேட்டுப்பட்டி, நத்தத்துபட்டி அமீர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. சாத்தூரில் முக்குராந்தல் பகுதியிலிருந்து வடக்கு ரத வீதி, தேரடித் தெரு, பள்ளிவாசல் தெரு, பழைய ட்ரங்ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் நடைபெற்றது. சாத்தூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள கல்குவாரி நீர்நிலையில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

ஊர்வலம்
ஊர்வலம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விநாயகர் சிலை
விநாயகர் சிலை

இதேப்போல் விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 52 விநாயகர் சிலைகள் தேசபந்து மைதானத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பி, மாரியம்மன் கோயில், மார்க்கெட் சாலை, நான்கு ரதவீதிகள், பழைய பேருந்து நிலைய சாலை வழியே ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள கல்கிடங்கு நீர்நிலையில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.