Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை விவகாரம்: அசாம் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு!

ஜெயமால்யதா

அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலர் ஒருவர், அசாம் மாநில அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பெண்யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கே கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை விவகாரம்: அசாம் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு!

அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலர் ஒருவர், அசாம் மாநில அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பெண்யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கே கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

Published:Updated:
ஜெயமால்யதா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்ப்பு யானை சட்டவிதிகளின் படி, ஒப்பந்த லைசென்ஸ் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் முயற்சியால் அழைத்துவரப்பட்ட யானை என்பதால் அதற்கு `ஜெயமால்யதா' எனப் பெயரும் சூட்டப்பட்டது.
ஜெயமால்யதா யானை
ஜெயமால்யதா யானை

கோயில் யானை மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில் யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னரை தரிசித்துவிட்டு வீதிஉலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து யானை 'ஜெயமால்யதா' பாகன்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து யானை பாகன்கள் 2 பேர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பதிலாக, புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது, கோயில் மண்டபத்தில் அல்லாமல் 15 லட்ச ரூபாய் செலவில் கிருஷ்ணன்கோயிலில் தனியே நீச்சல்குளம், நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைத்து யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை தாக்கப்படுவதாகத் தொடர்ந்து வீடியோ வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக பீட்டா அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரம், வளர்ப்பு யானை சட்டவிதிகளின்படி யானையை பராமரிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த லைசென்ஸூம் காலாவதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது.

அசாம் அதிகாரிகள் ஆய்வுக்குழு
அசாம் அதிகாரிகள் ஆய்வுக்குழு

கடந்த சில வருடங்களாக இந்த லைசென்ஸ் புதுப்பிக்கப்படாததாலும், ஜெயமால்யதா யானை குறித்து தொடர்ந்து பரவும் வீடியோ வதந்திகளாலும், யானையை வழங்கிய அசாம் மாநில அரசே மீண்டும் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாகச் சொல்லப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் யானையை ஆய்வு செய்யப் பிறப்பித்த உத்தரவின்பேரில் கடந்த ஆகஸ்டு 3-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அசாம் மாநில அதிகாரிகள் யானையின்‌ உடல்நலம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதனால், யானை 'ஜெயமால்யதா' அசாம் கொண்டு செல்லப்படுகிறதா என்ற கேள்வி பரவத் தொடங்கியது.

இதற்குப் பதில் சொல்லும் வகையில், ஆகஸ்டு 5-ம் தேதி தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து, யானை தாக்கப்பட்டதா, தற்போது யானையின் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாகத் தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

அசாம் அதிகாரிகள் ஆய்வுக்குழு
அசாம் அதிகாரிகள் ஆய்வுக்குழு

இந்நிலையில், அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலர் ஒருவர், அசாம் மாநில அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பெண்யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கே கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி அசாம் வனப் பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வன உயிரின பேராசிரியர் கே.கே.ஷர்மா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணை வனப் பாதுகாவலர் நாகநாதன் உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் யானை ஜெயமால்யதாவை மீண்டும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.