Published:Updated:

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றம்: திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி!

கொடியேற்ற தீபாராதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு ஆவணித் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றம்: திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு ஆவணித் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.

Published:Updated:
கொடியேற்ற தீபாராதனை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தலமும் இரண்டாம் படை வீடும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித்திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார்.

கொடிப்பட்ட ஊர்வலம்
கொடிப்பட்ட ஊர்வலம்

தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தாண்டு ஆவணித் திருவிழா, இன்று (17-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று வருகிறது . காலை 5 .40 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

கொடியேற்றம்
கொடியேற்றம்

முன்னதாக நேற்று (16-ம் தேதி) தூண்டுகை விநாயகர் கோயிலில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டம், திருக்கோயில் யானை தெய்வானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வெளிப்பிராகாரம் சுற்றிக் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று தொடங்கிய திருவிழா, வரும் 28-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. 5-ம் திருநாளான வரும் 22-ம் தேதி குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

7-ம் திருநாளான வரும் 23-ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுக நயினார் உருகுசட்ட சேவையும், 9 மணிக்கு சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்தில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8-ம் திருநாளான வரும் 24-ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 10-ம் நாள் விழாவான, வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.

பக்தர்கள்
பக்தர்கள்

பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. கொரனோ பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக அனைத்து முக்கிய திருவிழாக்களும் கோயில் உட்பிராகாரத்திலும் கோயில் வளாகத்திலும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய ஆவணித் திருவிழா, பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.