Published:Updated:

`திருப்பதி ஏழுமலையான், மகாலட்சுமி, கருடாழ்வார்' - தத்ரூபமாக வேடமணிந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

சுவாமிகள் வேடமணிந்து ஊர்வலம்

நடப்பாண்டில் கருட பஞ்சமி விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஸ்ரீ கருடாத்ரி பக்தர்கள் குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

`திருப்பதி ஏழுமலையான், மகாலட்சுமி, கருடாழ்வார்' - தத்ரூபமாக வேடமணிந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

நடப்பாண்டில் கருட பஞ்சமி விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஸ்ரீ கருடாத்ரி பக்தர்கள் குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Published:Updated:
சுவாமிகள் வேடமணிந்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் அமைந்திருக்கிறது லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாக இது உள்ளது. இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் கருடபஞ்சமி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இந்த விழா நடைபெறவில்லை.

சுவாமிகள் வேடமணிந்து ஊர்வலம்
சுவாமிகள் வேடமணிந்து ஊர்வலம்

நடப்பாண்டில் கருட பஞ்சமி விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஸ்ரீ கருடாத்ரி பக்தர்கள் குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்திற்கு முன்பாக, திருப்பதி ஏழுமலையான், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், சீதாராமர் ஆகிய வேடங்கள் அணிந்த பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாகச் சென்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம், இந்தியன் வங்கி சாலை, அரசமரம் வீதி வழியாக மீண்டும் கோயிலை ஊர்வலம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீமகாவிஷ்ணு, மகாலட்சுமி, பெரிய திருவடி கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

ஊர்வலத்தில் பக்தர்கள்
ஊர்வலத்தில் பக்தர்கள்

அதன்பின், ஸ்ரீவில்லிபுத்துரில் இருந்து சேந்தமங்கலம் கொண்டு வரப்பட்ட ஆண்டாள் நாச்சியார் மாலை சுவாமிக்கு அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தத்துரூபமாக சுவாமி வேடம் அணிந்து பக்தர்கள் ஆடிப் பாடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.