Published:Updated:

நீலகிரி: 6 படுகர் கிராமங்கள் சேர்ந்து கொண்டாடிய ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழாவின் சிறப்புகள்!

ஹெத்தையம்மன் திருவிழா
News
ஹெத்தையம்மன் திருவிழா

"அம்மனை தரிசிக்க வருவோர் யாரும் உணவருந்தாமல் பசியுடன் திரும்பிச் செல்லக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். எல்லா கோயில்களிலும் அன்னதானத்துக்கு பஞ்சம் இருக்காது."

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள், 'ஹெத்தையம்மன்' என்ற பெண் தெய்வத்தை குல தெய்வமாக போற்றி வணங்கி வருகின்றனர். படுகர் இன மக்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த தெய்வமாகவே 'ஹெத்தையம்மனை கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலத்தில் ஹெத்தையம்மனுக்கு விழா நடத்தப்படுகிறது.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

பல கிராமங்களில் நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு அனைத்து கிராமங்களில் இருந்தும் படுகர் இன மக்கள் வெள்ளை உடை அணிந்து பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபடுவது வழக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் விழா பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஜெகதளா கிராமத்தைச் சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிக்கொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி ஆகிய ஆறு கிராமங்களைச் சேர்ந்த படுகர் மக்கள் ஒன்றிணைந்து ஜெகதளாவில் ஹெத்தையம்மன் விழாவைக் கொண்டாடுகின்றனர். ஹெத்தையம்மன் பக்தர்கள் விரதம் இருந்து கடந்த ஏழு நாள்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள 'மக்கமனை' என்ற கோயிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்தினர்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

நேற்று காலை ஆறு கிராம படுகர் இன மக்கள் வெள்ளை உடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, நடனமாடியபடி ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 1.30 மணிக்கு ஜெகதளா கிராமத்தில் 'மடிமனை' என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் ஹெத்தையம்மனை வணங்கி காணிக்கையை நேர்த்திக்கடனாகச் செலுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெத்தையம்மன் விழா குறித்து நம்மிடம் பேசிய பக்தர் ஒருவர், "ஒட்டுமொத்த படுகர் இன மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு திருவிழாவாகவே எங்களின் ஹெத்தையம்மன் விழா இருந்து வருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், கண் இமையைப் போல மக்களை காத்து வருகிறாள். மக்களை ஒற்றுமையுடன் ஒன்றிணைக்கும் மகா சக்தியாக ஹெத்தையம்மன் விளங்கி வருகிறாள்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

அம்மனை தரிசிக்க வருவோர் யாரும் உணவருந்தாமல் பசியுடன் திரும்பிச் செல்லக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். எல்லா கோயில்களிலும் அன்னதானத்துக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் புண்ணியம் தலைமுறைக்கும் தழைக்கும்" என்றார்.