Published:Updated:

`தெய்வத்துள் தெய்வம்...' - மகா பெரியவா வரலாறு, நாடகமாய்... சரியான விடையளித்து டிக்கெட்களை வெல்லுங்கள்!

பெரியவா

மகாபெரியவாவின் வாழ்க்கை வரலாறு, நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள க்விஸில் பங்கேற்று, சரியான விடையளித்து அந்த நாடகத்தைக் காண டிக்கெட்டுகளை வெல்லுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்து இந்த அகிலத்துக்கே ஒளியாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகாபெரியவர். லோக குருவான தட்சிணாமூர்த்தியே மனித வடிவம் எடுத்துவந்ததுபோன்ற தோற்றம். காணும் கணத்திலேயே கவலைகள் தீர்க்கும் தயாள ரூபம்.``ஆசி வழங்க அவரின் கரங்கள் உயர்ந்தபோதெல்லாம், நம் வாழ்க்கை ஒரு படி உயர்ந்தது'' என்று பக்தர்கள் போற்றிய பரமன்.

மஹா பெரியவா!
மஹா பெரியவா!

1894-ல் விழுப்புரத்தில் அவதரித்த அந்த ஞான சூரியனுக்கு `சுவாமிநாதன்' என்ற பெயரிட்டுப் பெற்றோர் வளர்த்தனர். இளமையிலேயே ஆன்மிக நாட்டமும் ஞானத் தேட்டமுமாய் வளர்ந்த அந்தப் பாலகனை `மடாதிபதி' பொறுப்பு தேடிவந்தது.' ஈஸ்வர சித்தம் அது' என்பதை உணர்ந்த அவரும் அதை ஏற்றுத் தன் வாழ்வை மத சேவைக்காய் அர்ப்பணித்தார்.

மக்களில் பேதம் பாராது உழைத்த அந்த மாமுனி, லட்சக்கணக்கானவர்களை நல்வழிப்படுத்தினார். எளிமையை அணிகலனாய்ப் பூண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அருள் செய்த அந்த மகானின் வாழ்க்கைச் சரிதம் கேட்கக் கேட்கத் திகட்டாதது. அவரோடு பேசியவர்களும், பழகியவர்களும், பக்தி செய்தவர்களும் அவர்குறித்துப் பகிர்ந்துகொள்ளும்போதே கேட்பவர்களின் கண்களில் நீர் கசியும். நூறாண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மகான், தற்போதும் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அமைந்துள்ள அதிஷ்டானத்தில் சூட்சுமமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.

பெரியவா
பெரியவா

தெய்வத்தின் குரலாக ஒலித்த அவரின் வாழ்க்கை வரலாற்றை `தெய்வத்துள் தெய்வம்' என்னும் நாடகமாகச் செய்திருக்கிறார் இளங்கோ குமணன். சிலிர்ப்பூட்டும் இந்த நாடகம் வரும் திங்கள் & செவ்வாய் (ஜூலை 15,16) ஆகிய தேதிகளில், மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

கீழே கொடுக்கப்பட்டுள்ள க்விஸில் பங்கேற்று சரியான விடை அளியுங்கள். டிக்கெட்களை வெல்லுங்கள். சரியான விடையளிக்கும் 50 வாசகர்களுக்கு தலா 2 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படும். (ஜூலை 15-ம் தேதிக்கான டிக்கெட் 25 பேருக்கும், ஜூலை 16-ம் தேதிக்கான டிக்கெட் 25 பேருக்கும்). 15.7.19 & 16.7.19 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு சென்னையில் நாடகத்தைப் பார்க்க வாய்ப்புள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். பெரியவாவின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

விதிமுறைகள்

  • இது விகடன்.காம் இணையதள வாசர்களுக்கான பிரத்யேக போட்டி.

  • இது அதிர்ஷ்டப் போட்டி அல்ல. சரியான பதில் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • போட்டியில் வெல்லும் ஒருவருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்

  • போட்டியில் விகடன் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.

  • விகடன் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்களோ அவர்களது உறவினர்களோ இப்போட்டியில் பங்கேற்க இயலாது.

  • போட்டியில் வென்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவித்து டிக்கெட் வழங்கப்படும்.

  • வெற்றியாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை திங்கள்கிழமை, காலை 10 மணிக்குமேல் விகடன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

  • முகவரி: விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 7338870593 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

  • டிக்கெட்டுகள் மறுவிற்பனைக்கு அல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு