Published:Updated:

விநாயகர்தான் எங்க முதலாளி!

சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
சீனிவாசன்

வாழ்க்கை

விநாயகர்தான் எங்க முதலாளி!

வாழ்க்கை

Published:Updated:
சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
சீனிவாசன்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘ஸ்ரீவிநாயகா பில்டர்ஸ்’ சீனிவாசனின் வீடு... வாசற்படியைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்ததும் ஏதோ இடம் மாறி விநாயகர் சிலை செய்யும் இடத்துக்குச் சென்றுவிட்ட உணர்வு தொற்றிக் கொள்கிறது. அந்த அளவுக்கு வீடு முழுக்க விதவிதமான விநாயகர் சிலைகள் நிறைந்திருக்கின்றன. வீட்டில் மட்டுமல்ல, தனக்குச் சொந்தமான நான்கு திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்களிலும் விநாயகருக்கென பிரத்யேக அறையை ஒதுக்கி அங்கு விநாயகர் சிலைகளை நிறைத்திருக்கிறார் சீனிவாசன். அவரது சேமிப்பில் 25,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இருக்கின்றன வாம்.

விநாயகர்தான் எங்க முதலாளி!

இவ்வளவு விநாயகர் சிலைகளைச் சேகரிக்க என்ன காரணம்?

ஓர் மாலை வேளையில் சீனிவாசனைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம். நாலு பொண்ணுங்க ரெண்டு பசங்கன்னு எங்க வீட்ல மொத்தம் ஆறு பேரு. நான்தான் கடைசி. அப்பா ஹோட்டல் நடத்திக்கிட்டிருந்தார். நல்லா போய்க்கிட்டிருந்த பிசினஸ் திடீர்னு படுத்துருச்சு. பயங்கர லாஸ். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற நிலைமை. அந்தச் சூழல்லயும் கஷ்டப்பட்டு என்னை இன்ஜினீயரிங் படிக்க வெச்சார் எங்க அப்பா. படிப்பை முடிச்சுட்டு குடும்பத்தைக் கரைசேர்க்கிற லட்சியத்தோடு 1996-ல் சென்னைக்கு வந்தேன். பிளாட் புரொமோட்டர்ஸ் கம்பெனியில வேலை. வாழ்க்கையின் அடுத்த படிக்கட்டில் அடியெடுத்து வைக்கப்போன நேரம் பேரிடியாக வந்தது அந்த விபத்து” - அவர் குரலில் மெல்லிய சோகம் படர்கிறது... ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...

விநாயகர்தான் எங்க முதலாளி!

“ஒரு பில்டிங் இடிக்கிறப்போ... இடிபட்ட சுவரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமா என் வலது கையில விழுந்து கை நசுங்கிக் கூழாகிருச்சு. பக்கத்துல அப்போலோ ஹாஸ்பிட்டல் இருந்த தால அங்க சேர்த்துட்டாங்க. கடன் வாங்கி நிறைய செலவு பண்ணியும் கட்டைவிரலைத் தவிர மத்த நாலு விரல்களையும் காப்பாத்த முடியலை. ‘விரல்களை கட் பண்ணி எடுக்கலைன்னா பிரச்னை ஆகிரும்’னு சொல்லி நான்கு விரல்களையும் வெட்டி எடுத்துட்டாங்க. அதன் பிறகும் பிரச்னை சரியாகலை. கையில் ரத்த ஓட்டம் ஸ்டாப் ஆகிருச்சு. அதைச் சரி பண்ணுறதுக்கு வயித்துல ஓட்டை போட்டு, கையை (மணிக்கட்டு வரைக்கும்) 48 நாள்கள் வயித்துக்குள்ள வெச்சுத் தைச்சிருந்தாங்க. அதைத் தொடர்ந்து, வயித்துப் பகுதியில் ஏற்பட்ட சதை இழப்பை சரி பண்ணுறதுக்கு தொடையிலிருந்து சதையை வெட்டி எடுத்து வெச்சாங்க. இப்படி அந்த விபத்து என்னைப் பல வகையில பாதிச்சிருச்சு. ‘நீ இனிமே இன்னொருத்தர் உதவியோடுதான் இருக்க வேண்டியிருக்கும்’னு டாக்டர்கள் சொன்னாங்க. எனக்கு உலகமே இருண்டது மாதிரி ஆகிருச்சு. அந்த நேரத்துல எனக்கு வெளிச்சத்தைக் காட்டினது விநாயகர்தான்” என்றவரின் குரலில் பரவசம் குடியேறுகிறது.

விநாயகர்தான் எங்க முதலாளி!

“ஆமாம்! சாண் ஏறினா முழம் சறுக்குதே... இந்தக் கையை வெச்சுக்கிட்டு இனிமே என்ன பண்ணப் போறோம்னு தீவிர மன உளைச்சலிலிருந்த நேரம்... யார்கிட்டயும் பேசறதுக்குக்கூடப் பிடிக்கலை. தினமும் ஹாஸ்பிட்டலுக்குக் கீழே இருந்த விநாயகர் கோயிலுக்குப் போய் மனமுருகி வேண்ட ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னால தீவிர பக்தியெல்லாம் கிடையாதுன்னாலும் விநாயகர்கூட சின்ன கனெக்ட் இருந்துச்சு. என் வீட்டிலிருந்து குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில கேட்பாரற்று ஒரு விநாயகர் கோயில் இருக்கும். வேலைக்குப் போகும்போது அந்தக் கோயிலைச் சுத்தம் செஞ்சு விநாயகருக்கு விளக்கு போட்டுட்டுப் போவேன். அதில் ஒரு சின்ன மன நிம்மதி அவ்வளவுதான். அந்தக் காரணத்தாலோ என்னவோ நான் தளர்ந்திருந்த நேரத்தில் விநாயகர் என்னைத் தாங்கிப்பிடிச்சார். ஆம்! ‘நீ என்னைத் தவிர யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. உன்னைத்தான் நிறைய பேர் சார்ந்திருப்பாங்க’ன்னு விநாயகர் சொன்னார்.

விநாயகர்தான் எங்க முதலாளி!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னாது விநாயகர் உங்ககிட்ட பேசினாரான்னு இந்த இடத்துல கேட்பீங்க அப்படித்தானே?”

விநாயகர்தான் எங்க முதலாளி!

நம் கேள்வியை அவரே யூகித்து பதில் சொல்ல ஆரம்பித்தார்... “பேசுறதுன்னா எனக்குக் காட்சியளித்துப் பேசுறது இல்லை. அது ஓர் உணர்வு நிலை. சூட்சும ரூபம்னு சொல்லுவாங்க. சரணடைதலின் வழியா அந்த ரூபத்தை தரிசிக்க முடியும். அப்படித்தான் நான் விநாயகரை தரிசிச்சேன். சில நாள்களிலேயே விநாயகரின் வாக்கு பலிக்க ஆரம்பிச்சது. என்னோட உறவினர் ராஜசேகரன்னு ஒருவர் சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருந்தார். பில்டர் பிரச்னையால அது பாதியிலேயே நின்னுருச்சு. மறுபடியும் அந்த புராஜெக்டை வெளி ஆட்கள்கிட்ட கொடுக்க அவர் விரும்பலை. என்னைப் பத்திக் கேள்விப் பட்டு ஹாஸ்பிட்டல்ல வந்து பார்த்த அவர், ‘டிஸ்சார்ஜ் ஆனதும் என் புராஜெக்டை நீங்க பண்ணித் தர முடியுமா?’ன்னு கேட்டார். விநாயகர் கொடுக்குற வாய்ப்புன்னு நினைச்சு, யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டேன். டிஸ்சார்ஜ் ஆனதும் அந்த புராஜெக்டை அவர் விருப்பப் பட்டபடி முடிச்சுக்கொடுத்தேன். அவருக்கு பயங்கர ஹேப்பி.

விநாயகர்தான் எங்க முதலாளி!

‘இதுக்கு மேல நீ இன்னொரு கம்பெனியிலபோய் வேலை செய்யப் போறியா? நான் கொஞ்சம் பணம் தர்றேன். அதை வெச்சு சொந்தமா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணு’ன்னு சொல்லி ஒரு தொகையைக் கையில் கொடுத்தார். ஒரு சுப முகூர்த்த நாளில் `சொ.பாலசுப்பிரமணியன் ஸ்ரீ விநாயகா பில்டர்ஸ்’ங்கிற பேர்லயே கம்பெனியை ஸ்டார்ட் பண்ணினேன். அதுக்குப் பிறகு, நடந்ததெல்லாம் மேஜிக்தான். பெரிய பெரிய கம்பெனிகளெல்லாம் வாங்குறதுக்குப் போட்டி போட்ட இடங்கள் எனக்கு ஈஸியா கிடைச்சது. சில லேண்ட் ஓனர்ஸ் ‘நீங்க பில்டிங் கட்டி வித்த பிறகு, பணம் கொடுத்தா போதும்’னு சொல்லி பணம் வாங்காமலேயே எனக்கு இடம் கொடுத்தாங்க. இப்படி நானே நம்ப முடியாத அதிசயங்களெல்லாம் நடந்துச்சு. கம்பெனி சரசரன்னு வளர்ந்துச்சு. விநாயகருடைய அருள்தான் எல்லாத்துக்கும் காரணம்னு புரிஞ்சிருச்சு. அதனாலதான் இதுவரைக்கும் இந்த கம்பெனிக்கு நான்தான் முதலாளின்னு யார்கிட்டயும் சொன்னது கிடையாது. நான் சாதாரண இன்ஜினீயர்தான். என்னைப் பொறுத்தவரை இந்த கம்பெனிக்கு விநாயகர்தான் முதலாளி” - சிலிர்க்க வைத்தவர் சிலை சேகரிப்பு பற்றி விவரிக்க ஆரம்பித்தார்...

விநாயகர்தான் எங்க முதலாளி!

நான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுனதுக்குப் பிறகு, எங்க போனாலும் ஒரு விநாயகர் சிலை வாங்கிட்டு வர ஆரம்பிச்சேன். ஒருசில வருஷத்துல என்கிட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் சேர்ந்திருந்துச்சு. விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு இந்தச் சிலைகளை வெச்சு சின்னதா எக்ஸிபிஷன் மாதிரி பண்ணுனா என்னன்னு எனக்கு யோசனை வந்துச்சு.

விநாயகர்தான் எங்க முதலாளி!

என் மனைவி பத்மாகிட்ட சொன்னேன். ‘விநாயகர்தான் உங்களுக்கு இப்படியான யோசனையை உண்டு பண்ணியிருப்பார். உடனே பண்ணிடலாம்’னு அவர் சொல்ல... முதல் வருஷம் ரோட்ல போய் நின்னு வர்றவங்க போறவங்களையெல்லாம் கூப்பிட்டோம். கொஞ்ச பேர்தான் வந்தாங்க. பல பேர் எங்களைப் பொருட்படுத்தலை. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை. விநாயகர் சொல்றார்; நாம செய்யுறோம், அவ்வளவுதான்னு போய்க்கிட்டே இருந்தேன்.

விநாயகர்தான் எங்க முதலாளி!

அதற்கடுத்த வருஷத்திலிருந்து இதுக்காகவே நிறைய விநாயகர் சிலைகளை வாங்க ஆரம்பிச்சேன். சிலைகள் அதிகரிச்சதுபோல எக்ஸிபிஷனுக்கு வர்றவங்க எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சது. ஒருகட்டத்துக்குமேல வெறுமனே பிள்ளையார் சிலைகளை வைக்கிறதுக்குப் பதிலா ஏதாவது வித்தியாசமா பண்ணலாமேன்னு தோணுச்சு. விநாயகர் படகு ஓட்டுறது மாதிரி ஒரு வருஷம்... டிரைன் ஓட்டுறது மாதிரி ஒரு வருஷம்னு வருஷா வருஷம் ஏதாவதொரு கான்செப்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நிறைய ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் அரசியல் வி.ஐ.பி-க்கள் எங்க எக்‌ஸிபிஷனுக்கு வந்திருக்காங்க.

விநாயகர்தான் எங்க முதலாளி!
விநாயகர்தான் எங்க முதலாளி!

என்கிட்ட 25,000-க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கு. இந்தக் கொரோனா நேரத்துலகூட நான் விநாயகர் சிலை வாங்குறதை நிறுத்தலை. இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விநாயகர் சிலைகள் வாங்கினேன். அது நான் வைத்துக் கொள்வதற்காக வாங்கியது. அதைத் தவிர, என் கஸ்டமர்களுக்குக்கும் என் கெஸ்ட்டுகளுக்கும் பரிசா கொடுக்குறதுக்கு வருஷத்துக்கு ஆயிரம் விநாயகர் சிலைகள் ஆர்டர் கொடுப்பேன். வீட்டுக்கு வாங்கறதைப் பரிசா கொடுக்க மாட்டேன். பரிசு கொடுக்கிறதுக்காக வாங்குறதை நான் வெச்சுக்க மாட்டேன்.” என்றவரிடம், ‘விநாயகர் சதுர்த்தியின்போது எல்லோரும் விநாயகர் சிலைகளைத் தண்ணீரில் கரைப்பதுதானே வழக்கம். நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்களா?’ எனக் கேட்டோம்...

விநாயகர்தான் எங்க முதலாளி!
விநாயகர்தான் எங்க முதலாளி!

“சிலைகளைத் தண்ணீரில் கரைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால நான் அப்படிச் செய்ய மாட்டேன். சிலைகள் சேதமடைஞ்சாக்கூட அதைத் தூக்கிப் போட மாட்டேன். முடிஞ்சா சரி பண்ணி வெச்சுப்பேன். இல்லேன்னே அப்படியே வெச்சுப்பேன். நமக்குக் கையோ காலோ உடைஞ்சுருச்சுன்னா... இனிமே இவங்க தேவை இல்லைன்னு சொல்லி நம்ம வீட்ல உள்ளவங்க நம்மளைத் தூக்கிப் போட்டுறது கிடையாதுல்ல. அப்படித்தான் சிலைகளும். இவ்வளவு சிலைகளை வெச்சு இடத்தை அடைக்கறியேன்னு பல பேர் கேட்ருக்காங்க. அவங்களுக்கெல்லாம் சொல்ற ஒரே பதில், `எனக்கு இந்த இடத்தைக் கொடுத்ததே விநாயகர்தான்' என்பதுதான்” - விநாயகரைப் பார்த்துக் கைகூப்புகிறார்.