Published:Updated:

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்: அரசு ஏற்பாடுகள் என்னென்ன? எதற்கெல்லாம் தடை?

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்

சித்ரா பௌர்ணமியான இன்று, திருக்கோயிலில் பக்தர்கள் சூடம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்: அரசு ஏற்பாடுகள் என்னென்ன? எதற்கெல்லாம் தடை?

சித்ரா பௌர்ணமியான இன்று, திருக்கோயிலில் பக்தர்கள் சூடம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம். சிவபெருமான், அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையாரப்பனாய்க் காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கி.மீ சுற்றுப்பாதையைக் கொண்ட இத்திருக்கோயிலில், அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து, மனமுருக வேண்டி, இந்த மலையில் கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செய்வார்கள். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியின் போது தமிழகம், அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, அயல்நாடுகளை சேர்ந்தவர்கள் என பல லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்து செல்வர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தமிழகத்தில் விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் சித்ரா பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விதிக்கப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக் கோயில் கிரிவலம் செல்வது மற்றும் சுவாமி தரிசனம் செய்வதற்கு15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமான 16.04.2022 அதிகாலை 02.33 முதல்... 17.04.2022 அதிகாலை 01.17 வரை அரசுத் துறைகளின் சார்பில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் வசதி, 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம், முதியோர்களுக்காக 3 பேட்டரி கார்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள், 42 இடங்களில் இலவச குளியகம் வசதிகள், பக்தர்கள் தங்களுடைய பொருட்களை வைப்பதற்காக 2 இலவச வைப்பகங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அண்ணாமலையார் உண்ணாமுலை
அண்ணாமலையார் உண்ணாமுலை

இந்தத் திருவிழாவில், பாதுகாப்புப் பணிக்காக 3,242 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு பேருந்தில் வரும் பக்தர்களுக்காக 9 தற்காலிகப் பேருந்து நிலையங்களும், பொதுமக்களின் வசதிக்காக 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி., கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதோடு, 39 இருசக்கர பேட்ரோல் வாகனங்கள் மூலம் காவலர்கள் கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர மருத்துவ உதவிக்கு ஆங்காங்கே ஆம்புலன்ஸ்கள் மருத்துவர்களுடன் தயார் நிலையில் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சித்ரா பௌர்ணமியான இன்று, பக்தர்கள் சூடம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை செய்யப்படுகிறது. கிரிவலப்பாதையில் ஆட்டோக்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 14 ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

அன்னதானம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்காகவும் திருக்கோயில் நிர்வாகம், நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறையினரிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism