Published:Updated:

அயோத்தியா மண்டப வழக்கு: ஆளுநர் விசிட், அறநிலையத்துறை நடவடிக்கை முதல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரை!

அயோத்தியா மண்டபம்

2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத்தான் சமாஜத்தின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மீதான தீர்ப்பைத்தான் தனி நீதிபதி வேலுமணி தெரிவித்தார். ரிட் மனு தள்ளுபடி என்றால் சம்பந்தப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வரும்.

அயோத்தியா மண்டப வழக்கு: ஆளுநர் விசிட், அறநிலையத்துறை நடவடிக்கை முதல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரை!

2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத்தான் சமாஜத்தின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மீதான தீர்ப்பைத்தான் தனி நீதிபதி வேலுமணி தெரிவித்தார். ரிட் மனு தள்ளுபடி என்றால் சம்பந்தப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வரும்.

Published:Updated:
அயோத்தியா மண்டபம்
சமீபத்தில் அரசியல் அரங்கில் அதிர்வையும் ஆன்மிக அன்பர்களிடம் அதிருப்தியும் ஏற்படுத்திய ஒன்று, சென்னை அயோத்தியா மண்டப வழக்கு. சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்தியா மண்டபத்தை இந்துசமய அறநிலையத்துறை ஏப்ரல் 11-ம் தேதி கையகப்படுத்தியது. இது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்னை சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் சென்றது. அதில் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, "2013-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படியும் நீதிமன்ற உத்தரவின் படியுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இந்த வழக்கில் மேலும் சில திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது அயோத்தியா மண்டபம் முன்பு போலவே ஶ்ரீராம் சமாஜத்துக்குச் சொந்தமானது என்று தீர்ப்பாகியுள்ளது. இப்படித் தமிழகமே திரும்பிப் பார்த்த இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

அயோத்தியா மண்டபம்
அயோத்தியா மண்டபம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அயோத்தியா மண்டபம் 'ஶ்ரீராம் சமாஜம்' என்கிற அமைப்புக்குச் சொந்தமானது. 1958-ல் இந்த அமைப்பு சொசைட்டி ஆக்ட் எனப்படும் சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உறுப்பினர்களை இணைத்து இயங்கிவரும் ஓர் அமைப்பு. அயோத்தியா மண்டபம் மட்டுமில்லாது இந்த அமைப்புக்கு மேற்கு மாம்பலத்தில் 'ஶ்ரீராம் வித்யாலயா' என்னும் பள்ளியும் கல்யாண மண்டபம் ஒன்றும் 'ஞானவாபி' எனப்படும் நீத்தார் காரியங்கள் செய்யும் மண்டபம் ஒன்றும் சொந்தமாக உள்ளன.

இன்று சுமார் 600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு ஒரு சீதா ராமர் சிலையும் ஒரு லிங்கமும் ஆஞ்சநேயருக்கு ஒரு சிலையும் வைத்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தினமும் வேத பாராயணமும் அவ்வப்போது உபன்யாசங்களும் பஜனைகளும் நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இந்த மண்டபத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சில ஆன்மிக ஆர்வலர்களிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"இது 60 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் ஒரு சங்கம். இதில் 2013 வரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. 2013-ம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர் கொடுத்த புகார்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம்" என்றவர் தயக்கத்தோடு மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த அமைப்பில் முறையாகத் தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். புகார் கொடுத்த அந்த நபரே அந்த அமைப்பில் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவரின் பதவிக்காலம் முடிந்ததும் அதிலிருந்து விலக மறுத்ததாகவும் அதைப் பிற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால் அந்த நபரே இந்த அமைப்பை மிரட்டும் விதமாகச் சில புகார்களை எழுப்பினார்.

அயோத்தியா மண்டபம் போராட்டம்
அயோத்தியா மண்டபம் போராட்டம்

ஶ்ரீராம் வித்யாலயா கட்டடம் மிகப் பழைமையானது என்றும் அதை இடிக்கவேண்டும் என்று சி.எம்.டி.ஏ விடம் புகார் செய்தார். ஆனால் அதை ஆய்வு செய்தவர்கள் அந்தப் புகாரை நிராகரித்தனர். அடுத்ததாக அந்தப் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யச் சொல்லி வழக்கும் தொடுத்தார்.

மேலும் அயோத்தியா மண்டபத்தில் உண்டியல் வைத்து வசூல் செய்வதாகவும் அங்கு வசூலிக்கப்படும் பணத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பல புகார்கள் அனுப்பப்பட்டன. அப்புகார்களின் அடிப்படையில்தான் 2013-ம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தைக் கையகப்படுத்துவதாக உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து 2014-ம் ஆண்டு சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் அந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அயோத்தியா மண்டபத்துக்கு வந்துபோனதும் இந்த விவகாரத்துக்கு மீண்டும் உயிர் வந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஶ்ரீராமநவமி உற்சவத்தைத் தொடங்கிவைப்பதற்காக அயோத்தியா மண்டபத்துக்கு வந்திருந்த ஆளுநர், 'நம்நாடு அனைவரையும் ஒருங்கிணைத்த முன்னேற்றத்தைக் கொண்ட ராம ராஜ்ஜியத்தை நோக்கி முன்னேறுகிறது' என்று பேசினார். அன்று ஶ்ரீராம் சமாஜ நிர்வாகிகள் தனிப்பட்டமுறையில் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னாராம் ஆளுநர். ஆனால் அடுத்த சில நாள்களில்தான் இந்தக் கையகப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள்.

இந்த நிலையில் ஆளுநரின் விசிட் மற்றும் அரசியல் காரணங்களாலேயே இந்துசமய அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தை ஏப்ரல் 11-ம் தேதி கையகப்படுத்தியது என்று சொல்லப்பட்டாலும் ஆளுநர் வருகையும் துறை சார் நடவடிக்கையும் தற்செயல் நிகழ்வுதான் என்றும் இரண்டுக்கும் பெரிய காரணத் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்ற மாற்றுக்கருத்தையும் சிலர் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

காரணம் 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த மாதம் (17.3.22) விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி வேலுமணி, சங்கத்தின் சார்பில் போடப்பட்ட ரிட் மனுவை டிஸ்மிஸ் செய்தார். அதைத் தொடர்ந்து சமாஜத்தின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த நேரத்தில்தான், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தில் ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது அங்கு ஶ்ரீராம் சமாஜத்தினரும் பா.ஜ.க-வினரும் திரண்டு மண்டபத்தைப் பூட்டுப் போட்டு அதிகாரிகளை உள்ளே நுழையவிடாது தடுத்து நிறுத்தினர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தி மண்டபம் திறக்கப்பட்டு முறையான வழிபாடுகளும் நடைபெறத் தொடங்கின.

இதற்கிடையே சமாஜத்தின் மேல்முறையீடு மனு மீதான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. 'அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத் துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவும், கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகின்றன' என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கில் ஶ்ரீராம் சமாஜம் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான சதீஷ் பராசரன் மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் ஆஜராகினர். வழக்கறிஞர் சதீஷ்குமார் இந்த வழக்கு குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

"2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத்தான் சமாஜத்தின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மீதான தீர்ப்பைத்தான் தனி நீதிபதி வேலுமணி தெரிவித்தார். ரிட் மனு தள்ளுபடி என்றால் சம்பந்தப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வரும் என்பது பொதுவான விஷயம். அப்படித்தான் அறநிலையத்துறையைச் சார்ந்தவர்கள் இந்த வழக்கில் அவசரப்பட்டுக் கையகப்படுத்தி விட்டனர். ஆனால் தனி நீதிபதியின் உத்தரவில் அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தைக் கையகப் படுத்தலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அயோத்தியா மண்டபம் என்பது கோயிலா அல்லது பஜனை மடமா என்பது இந்த நீதிப்பேராணையின் கீழ் உத்தரவிடமுடியாது. அது முறையான வழக்கு விசாரணையின் மூலம் செய்யப்படவேண்டியது. மேலும் இதற்கு மாற்று வழிகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் கையகப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்கள் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் மற்றும் சதீஷ் குமார்
வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் மற்றும் சதீஷ் குமார்

மேலும் அவர்கள் உத்தரவில், 'இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மண்டபம் கையகப்படுத்துவது தொடர்பாக உரிய காரணங்கள் சொல்லப்படவில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் புகாரின் மீது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற விளக்கத்தை அதிகாரிகள் அளிக்கவில்லை. சரியான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. முறைகேடு நடந்திருந்தால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதைக் கையகப்படுத்த உத்தரவிட முடியாது என்று கூறி மண்டபத்தைக் கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்வதோடு, தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தார்.

ஶ்ரீராம் சமாஜத்தைப் பொறுத்த அளவில் அனைத்தும் சட்டப்படி முறையாகப் பராமரிக்கப்படுகிறது. இங்கு உண்டியல் வைத்து வசூல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பொய்யானது. ஆன்மிகம் தொடர்பான பணிகளையும் சமூகப் பணிகளையும் முன்னெடுக்கும் இந்த அமைப்பில் ஆண்டுதோறும் நிதிக் கணக்குகள் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில் முறைகேடு என்றால் உரிய நிர்வாகிகளை விசாரித்து ஆவணங்களைப் பரிசோதித்தால் போதுமானது.

ஆனால் அதைவிடுத்து அதிகாரிகள் அவசர அவசரமாகக் கையகப்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்டு மூன்று நாள்கள் ஆகியும் இன்றுவரை (30.4.2022) அவர்கள் மண்டபத்தை சமாஜத்திடம் ஒப்படைக்கவில்லை. கேட்டால் தீர்ப்பின் நகல் கைக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். எப்படியும் ஓரிரு நாள்களில் தீர்ப்பின் நகல் வந்ததும் அயோத்தியா மண்டபம் மீண்டும் ஶ்ரீராம் சமாஜத்திடம் வந்துவிடும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism