Published:Updated:

அனுமன் பிறந்த இடம் எது? திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பும் அறிஞர்களின் கருத்தும்!

திருமலை திருப்பதி

ராமாயணத்தில் வரும் கிட்கிந்தையானது ஹம்பியும் அதைச் சுற்றிய வனப்பகுதிகளுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஹம்பியில் உள்ள மலைக்குகைகளில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மனிதர்களுக்கு வால் இருப்பதுபோன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

அனுமன் பிறந்த இடம் எது? திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பும் அறிஞர்களின் கருத்தும்!

ராமாயணத்தில் வரும் கிட்கிந்தையானது ஹம்பியும் அதைச் சுற்றிய வனப்பகுதிகளுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஹம்பியில் உள்ள மலைக்குகைகளில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மனிதர்களுக்கு வால் இருப்பதுபோன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

Published:Updated:
திருமலை திருப்பதி
திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்று அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி மலை. இந்த மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அனுமன் இந்த மலையில்தான் அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து புராணங்களை ஆய்வு செய்தது.

அந்த ஆய்வு தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும் அதன் முடிவாக அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்த முடிவதாகவும் தெரிவித்தது. இதற்கான ஆதாரங்களை வழங்க உள்ளதாகத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஹம்பி
ஹம்பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமாயணத்தில் வரும் கிட்கிந்தையானது ஹம்பியும் அதைச் சுற்றிய வனப்பகுதிகளுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஹம்பியில் உள்ள மலைக்குகைகளில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மனிதர்களுக்கு வால் இருப்பதுபோன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. எனவே இதுவே ராமாயணத்தில் வரும் 'கிட்கிந்தை' என்று சொல்கிறார்கள். இங்கிருக்கும் அஞ்சனாத்ரி மலையே அனுமன் பிறந்த இடம். அஞ்சனாத்ரி அருகே இருக்கும் ஆனக்குந்தி எனப்படும் ஆனைக்குன்றே அங்கதன் ஆட்சி செய்த இடம் என்றும் இங்குள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அனுமன் வழிபாடு அதனால்தான் இங்கு மேலோங்கி இருக்கிறது என்றும் ஹம்பியைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமன் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன என்பதும் அவர்களின் வாதம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இதுகுறித்து ஆன்மிகச் சொற்பொழிவாளரான துஷ்யந்த் ஶ்ரீதரிடம் கேட்டோம்.

"திருமலைத் திருப்பதிக்கு அருகில் இருக்கும் மலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரி என்பது அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்த இடம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அங்குதான் அனுமன் அவதரித்தார் என்று சொல்வதற்கு இல்லை. ராமாயணத்தில் வரும் கிட்கிந்தா என்பது பெல்லாரி மாவட்டத்தில் இருக்கும் ஹம்பியே என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களை நம் முன்னோர் வழங்கியுள்ளனர். அதனால்தான் அங்கு அனுமன் வழிபாடும் அதிகமாக இருக்கிறது. எந்திர மயமான அனுமன் கோயில்கூட அங்கு காணப்படுகிறது.

இந்தப் பகுதியை சிறப்பை அறிந்துதான் விஜயநகரப் பேரரசர்கள் இங்கு தங்களின் அரசை நிறுவினர். மத்வ ஆசார்யர்களான வியாச தீர்த்தர் முதலானோர் ஆஞ்சநேய வழிபாட்டில் ஈடுபட்ட இடம் இது. ராமாயணத்தின் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதும் இங்குதான் என்பது கருத்து. அப்படி இருக்கையில் தற்போது திருப்பதி அருகே இருக்கும் அஞ்சனாத்ரியில்தான் அனுமன் அவதரித்தார் என்று சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு வேங்கடேச மகாத்மியத்திலேயே சான்று உள்ளதா என்று தெரியவில்லை" என்று தெரிவித்தார் துஷ்யந்த் ஶ்ரீதர்.

துஷ்யந்த் ஶ்ரீதர்
துஷ்யந்த் ஶ்ரீதர்
சக்திவிகடன் இதழில் 2017 ம் ஆண்டு 'கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்' என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதியிருந்தார் கவிஞர் மகுடேசுவரன். அதில் ஹம்பி குறித்த பல விஷயங்களை ஆய்வுப்பூர்வமாக அணுகியிருந்தார். அவரிடம் அனுமனின் அவதாரத் தலம் பற்றிய சர்ச்சை குறித்துக் கேட்டோம்.

"ஹம்பியே அந்த நாளின் கிட்கிந்தா. புட்பக விமானத்தில் ராவணன் சீதையைத் தூக்கிச் செல்கையில் சீதை தன் ஆபரணங்களைப் பிய்த்து வீசும்போது அது விழுந்த இடம் கிட்கிந்தை. அவற்றைக் கண்டெடுக்கும் சுக்ரீவன் ஒரு குகையில் ஒளித்து வைக்கிறான். ராமனைச் சந்திக்கையில் தான் ஒளித்து வைத்ததைக் காட்டுகிறான். சுக்ரீவன் அவற்றை ஒளித்து வைத்த குகை ஹம்பியில் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிட்கிந்தைக்கு வரும் ராமனும் இலக்குவனும் பெரும்படை திரட்டிக்கொண்டு போருக்குக் கிளம்பிச் செல்லும் வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் நிகழும் இடம் கிட்கிந்தை. அதில் வாலி வதமும் ஒன்று.

கொல்லப்பட்ட வாலியின் பேருடல் எரியூட்டப்படுவதற்கு மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டதாம். இதுவரை யாருக்குமே அமைக்கப்படாத மிகப்பெரிய தகன மேடை அது. அதில் வாலியின் உடல் மலைபோல் குவிக்கப்பட்ட விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது. அவ்வெரி நெடுநாள்களுக்கு எரிந்துகொண்டிருந்ததாம்.

துங்கபத்திரை நதிக்கரையை ஒட்டி, விட்டலர் ஆலயத்தருகே நல்ல சதுர மூலைகளோடு பெருங்கற்குவியலால் ஆன மலைவடிவிலான மேடை ஒன்று தென்பட்டது. கற்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே வாலி தகனம் செய்ய வானரங்கள் தயார்படுத்திய மேடையாய் இருக்கலாம். இப்படி ராமாயணத்தோடு தொடர்புடைய பல்வேறு இடங்கள் ஹம்பியைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் அனுமன் பிறந்த அஞ்சனாத்திரி மலை. ஆனைகுந்தி என்னும் மலையை அடுத்து இருக்கிறது. இந்தப் பகுதியின் இதிகாசத் தன்மையைக் கருதித்தான் விஜய நகரப் பேரரசர்கள் இங்கே தலைநகரை உருவாக்கினர். என்னைப் பொறுத்தவரை அஞ்சனாத்திரி என்பது ஹம்பிக்கு அருகில் இருக்கும் மலையையே குறிக்கும்" என்று தெரிவித்தார்.

கவிஞர் மகுடேசுவரன்
கவிஞர் மகுடேசுவரன்

இந்த இடங்கள் மட்டுமல்ல நாசிக்கிற்கு அருகே இருக்கும் ஆஞ்சநேரியும் அனுமன் அவதாரம் செய்த மலை என்றே சொல்லப்படுகிறது.

புராண இதிகாசங்களில் சுட்டப்படும் இடங்கள் எவை என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரிவான ஆய்வுகள் தேவை. பல தலங்களில் ஒரே தலபுராணத்தைச் சொல்வதும் உண்டு. அவற்றை நம்பிக்கை அடிப்படையில் யாரும் கேள்விக்குட்படுத்துவதில்லை. ஆனால், ஹம்பியைத் தம் பாரம்பர்யப் பொக்கிஷமாகக் கருதும் கர்நாடக ஆய்வாளர்கள் அதன் காரணங்களில் ஒன்றான அனுமனின் அவதாரம் குறித்த தகவலை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்று திருப்பதி அருகே இருக்கும் அஞ்சனாத்திரிதான் அனுமன் பிறந்த இடம் என்பதற்கான சான்றுகளை வெளியிடுவதாகச் சொல்லியிருந்த திருப்பதி தேவஸ்தானம் தற்போது ராம நவமி அன்று அவற்றை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது. அப்போது மீண்டும் இந்த விவாதம் சூடுபிடிக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism