Published:Updated:

25 நாள் நடைப்பயணம்: குஜராத்திலிருந்து 770 கி.மீ நடந்து வந்து மும்பை லால்பாக் ராஜாவை தரிசித்த பக்தர்!

சமீர்

குஜராத்தில் இருந்து பக்தர் ஒருவர் 770 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாள்களில் நடந்து கடந்து மும்பை லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்துள்ளார்.

25 நாள் நடைப்பயணம்: குஜராத்திலிருந்து 770 கி.மீ நடந்து வந்து மும்பை லால்பாக் ராஜாவை தரிசித்த பக்தர்!

குஜராத்தில் இருந்து பக்தர் ஒருவர் 770 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாள்களில் நடந்து கடந்து மும்பை லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்துள்ளார்.

Published:Updated:
சமீர்
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா நாளையோடு முடிவுக்கு வருகிறது. கடைசிநாளான நாளை பல ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலகமாக எடுத்துச்செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.

மும்பையில் உள்ள விநாயகர் சிலைகளில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலமாகும். இந்த விநாயகரை தரிசிக்க வேண்டுமானால் நாள் கணக்கில் வரிசையில் நிற்கவேண்டும். லால்பாக் ராஜாவை தரிசிக்கவேண்டும் என்பதற்காக குஜராத்தில் இருந்து ஒரு பக்தர் நடந்தே வந்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஜுனாகாட் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் ஜெக்தீஷ்பாய் (44) என்பவர் லால்பாக் ராஜாவை தரிசனம் செய்வதற்காக குஜராத்தில் இருந்து நடந்தே மும்பை வந்துள்ளார். இதுகுறித்து சமீர் ஜெக்தீஷ்பாய் கூறுகையில், ``கொரோனா காலம் முடிந்து சகஜ நிலைக்கு வந்தால் கால்நடையாகச் சென்று லால்பாக் ராஜாவை தரிசிப்பதாக வேண்டிக்கொண்டேன். கொரோனா இரண்டாவது அலையின்போது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

லால் பாக் ராஜ்
லால் பாக் ராஜ்

கொரோனாவிற்கு முன்பு 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து லால்பாக் ராஜாவை வந்து தரிசித்துச் சென்றேன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தரிசனத்திற்கு வரமுடியவில்லை. தற்போது கொரோனாவிலிருந்து முற்றிலும் விடுபட்டு சகஜ நிலைக்குத் திரும்பி இருப்பதால் கடந்த மாதம் 23 - ம் தேதி குஜராத்தில் இருந்து கால்நடையாக மும்பைக்குப் புனிதப் பயணத்தைத் தொடங்கினேன். தினமும் 30 முதல் 35 கி.மீ தூரம் நடப்பேன். இரவில் எங்காவது தங்கிக்கொள்வேன். நடைபயணத்தின்போது எனக்கு எந்த விதப் பிரச்னையும் ஏற்படவில்லை. வழியில் மக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தங்குமிடம் மற்றும் சாப்பாடும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்" என்று சமீர் ஜெகதீஸ்பாய் தெரிவித்தார்.