Published:Updated:

பூம்புகார்: திருவோடு எனும் `மெக்சிகன் காலாபேட்' மரத்தில் காய்கள் - பக்தர்கள் பிரமிப்புடன் வழிபாடு!

திருவோடு
திருவோடு

தெய்விக மரமாகக் கருதப்படும் திருவோடு மரங்கள் தமிழ்நாட்டில் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகின்றன. அந்த வகையில் இக்கோயிலிலுள்ள மரத்தில் தற்போது சில காய்கள் காய்த்துள்ளன.

பூம்புகார் அருகே புனிதமாகக் கருதும் திருவோடு மரத்தில் சில காய்கள் காய்த்திருப்பதால், அதனைக் கேள்விப்பட்ட பக்தர்கள், காய்களை தரிசித்து வழிபட்டுச் செல்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரிநாதர் கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்ற தலமாகவும் பட்டினத்தார் வழிபட்ட தலமாகவும் விளங்கிவருகிறது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் திருவோடு மரம் உள்ளது. தற்போது அந்த மரத்தில் சில காய்கள் காய்த்துள்ளன.

இது குறித்து கோயில் நிர்வாகிகளுடன் பேசியபோது, "'மெக்சிகன் காலாபேட்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட திருவோடு மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்சிகோ ஆகும். குளிர்ச்சி நிறைந்த பிரதேசத்தில்தான் இந்த மரங்கள் வளரும். இந்தியாவில் இமாசலப்பிரதேசத்தில் நிறைய திருவோடு மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் பழங்களிலிருந்து கிடைக்கும் திருவோட்டில் உணவை வைத்திருந்தால் அது விரைவில் கெடாது. உடலுக்கும், உள்ளத்துக்கும் வலு கொடுக்கும் என்கிறார்கள். எனவேதான் இதனை மகான்கள் சிவனடியார்கள் போன்றோர் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

மெக்சிகன் காலாபேட்
மெக்சிகன் காலாபேட்

தெய்விக மரமாகக் கருதப்படும் திருவோடு மரங்கள் தமிழ்நாட்டில் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகின்றன. அந்த வகையில் இக்கோயிலிலுள்ள மரத்தில் தற்போது சில காய்கள் காய்த்துள்ளன.

இதனைக் கோயில்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் விபூதி வைத்து பூஜை அறையில் பலரும் வழிபட்டு வருகின்றனர். இந்த மரத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாகப் புராண வரலாறு கூறுகிறது. இந்த மரம் காய்க்கும் போதெல்லாம் அதனைக் கேள்விப்படும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து மரத்தை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு