Published:Updated:

முக்தி அடைந்தார் தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகாசந்நிதானம்!

1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார்.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுர ஆதீன மடத்தின் மடாதிபதியான 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இன்று இறைவனடிச் சேர்ந்தார்.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

தருமபுரம் ஆதீன 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் 1971-ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மடாதிபதியாகப் பொறுப்பேற்று 49 ஆண்டுக்காலமாக அருளாட்சி செய்துவந்தார். தமிழகத்தில் உள்ள திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்கள் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட பல திருக்கோயில்கள் தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன்கோயில் ஆலயக் குடமுழுக்குப் பணிகள் தொடக்கம்!- பக்தர்கள் மகிழ்ச்சி

1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவாரப்பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கௌரவப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாள்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரசார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26-வது மடாதிபதியாக பதவியேற்றார்.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

அனைத்து துறைகளிலும் நன்கு அறிந்தவர் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உட்பட அனைத்து மடாதிபதிகளுடனும் நெருக்கமாகப் பழகியவர். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இவரிடம் அருளாசிப் பெற்றுச் செல்வர்.

இந்திய அளவில் மடாதிபதிகளில் பிரச்னை என்றால் ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளைத்தான் தொடர்பு கொள்வார்கள். அதற்குப் பலனும் கிடைத்து என பலரும் கூறி பெருமை அடைவர்.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் உரியவரான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் தனது 93-வது அகவையில் சிகிச்சை பலனின்றி முக்தியடைந்தார்.