Published:Updated:

தேகம் தெய்விகம்... உயிர் சக்தியைப் பெருக்கும் மெய்யடக்கப் பயிற்சி வகுப்பு!

காற்றாலும் புவியாலும், நெருப்பாலும் நீராலும் வளரக்கூடிய நம் தேகம் உண்மையில் ஆகாயத்தால்தான் ஆன்மரீதியாக வளர்ச்சி கொள்கிறது. ஆகாய மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்ளும் நாம் ஒளியின் சரீரமாக உயிராத்மாவாக மிளிர்கிறோம்.

பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அளப்பெரும் சக்தியே உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் காரணமாகிறது. நான் என்ற ஆன்ம ஞானத்தின் தத்துவம், `நான் பிரம்மத்தின் சிறு வடிவமே' என்பதாகவே நிற்கிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என்ற சூட்சும வாக்கியத்தின் முழுவதுமாக உணர்ந்தவர்கள் நம் ஞானியர்கள். நம் தேகத்தை தெய்விகமாக்கி ஆதாரச் சக்கரங்களின் உதவியால் ஆன்மாவை அண்டத்தில் இருக்கும் பரமாத்மாவுடன் இணைத்து தெய்வத் தன்மையை உணர்ந்தவர்கள் அவர்கள். மெய்யடக்கம் என்ற பயிற்சியால் உடலையும் மனதையும் ஆன்மாவையும் பக்குவப்படுத்தி பெறற்கரிய பல சக்திகளைப் பெற்றவர்கள் நம் முன்னோர்கள். உலகமே அறிவியலை மட்டுமே நம்பி முன்செல்கையில் மெய்ஞ்ஞானத்தையும் நம் வாழ்க்கைக்கான அவசிய கொள்கை என்று வாழ்பவர்கள் நாம்.

யோகா
யோகா

இறையருளால் பெற்ற இந்த உடலை, ஆன்மாவைப் பக்குவப்படுத்தி மேன்மையான நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் பிறவிக்கான குறிக்கோள். கல்வி, செல்வம், பதவி என அத்தனை பேறுகளையும் பயன்படுத்தி இறைவனை அறிந்துகொண்டு பிறப்பிலா பேறு எட்டவேண்டும் என்பதே சித்தர் பெருமக்களின் பெருவிருப்பம். அதை நிறைவேற்றவே நாம் சில பயிற்சிகளையும் யோகமுறைகளையும் இங்கே காணவிருக்கிறோம்.

கருவிலிருந்து முழு மனிதனாக உருவாகும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைகளைப்பட்டுத்தான் இன்று உயர்ந்திருக்கிறோம். நாம் எங்கே போக வேண்டும்... எப்படி இருக்க வேண்டும்... நம் குறிக்கோள்கள் என்னென்ன... என்பதையெல்லாம் அறிய விரும்பும் ஆத்மாக்களுக்கே மெய்ஞ்ஞானமும் யோகநிலைகளும் கூடி வருகின்றன. காற்றாலும் புவியாலும், நெருப்பாலும் நீராலும் வளரக்கூடிய நம் தேகம் உண்மையில் ஆகாயத்தால்தான் ஆன்மரீதியாக வளர்ச்சி கொள்கிறது. ஆகாய மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்ளும் நாம் ஒளியின் சரீரமாக உயிராத்மாவாக மிளிர்கிறோம். ஆனால் இது மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி சிலர் மறுக்கலாம். இது அறிந்துகொள்ளக் கூடியது அல்ல, உணரக்கூடியது. சித்தர்கள் ஞானிகளால் உணர்த்தப்பட்டவை.

யோகா
யோகா

பிரம்ம சக்தியும், பஞ்சபூத சக்தியும் நம் உடலும் உயிருமாய் அமைந்திருக்கின்றது என்ற ரகசியம் சிலரால் ஒப்புக்குக்கொள்ள முடியாத ஒன்று. உயிர் மற்றும் உடல் தத்துவத்தைப் புரிந்து அதற்குரிய பயிற்சியில் மட்டுமே அந்த மெய்யை உணர முடியும். உணர்தல் என்பதே கற்றல். அறிந்துகொள்ளுதல் அல்ல. புலன்களால் அறிவது அறிவு. ஆன்மாவால் உணர்ந்து கொள்வதே ஞானம். ஞானமடைந்தால் எதையும் தேட மாட்டோம்.

நம் உடல் ஏராளமான சக்தியை உள்ளடக்கியது. அவ்வாறு உள்ளடக்கிய சக்திகளை நம் உணர்வதே இல்லை, இது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். கருவில் நம் உடலை யார் உருவாக்கியது? இறை சக்தி என்பீர்கள் அல்லது சிலர் உயிர் சக்தி என்பீர்கள் அல்லவா! எனின் அந்த இறைசக்தி எங்கிருந்து நம் உடலை வளர்த்தது, உன்னிலிருந்துதானே, அன்பர்களே சற்றுப் புரிந்து கொள்ளுங்கள் நம்மை உருவாக்கிய இறை சக்தியும் உள்ளுக்குள்ளும் சாந்தமாய் அமர்ந்து நமது இச்சை, எண்ணத்திற்கு ஏற்றவாறு ஆற்றலை வெளிப்படுத்தி நம்மை இங்கே வழி நடத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும் நாம் இதை உணர்வதே இல்லை, இதன் சக்தியை முழுமையாகப் பெறுவதே இல்லை. இதன் சக்தி நமக்கு கிடைத்தால் என்னவாகும்... உருவாக்கும் ஒரு சக்திக்கு தன் கோளாறுகளை சரிசெய்ய தெரியாதா... நம்மை உருவாக்கி, வளர்த்து, காத்து நிற்கின்ற அந்த சக்தி நம் நோய்களைக் களைந்து நம்மை ஆரோக்கியமாக மாற்ற முடியும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை.

யோகா
யோகா

இந்த சூட்சுமக் கல்வியை பலகாலம் நம் மறந்திருந்தோம், இதோ சக்தி விகடன் வழியாக இப்பேராற்றல் மீண்டும் தங்களை வந்து சேர நேரலை பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். நம் முன்னோர்களின் ஞானத்தை, இறை ஆற்றலிலிருந்து பெறப்பட்ட சூட்சும விதைகளை அறிவோம். நம் மெய்க்குள் அடங்கியிருக்கும் பஞ்ச பூத சக்தியைத் திரட்டி உடலை சக்தி பெறச்செய்து வல்லமையுடன் இப்பூவுலகில் நிலைத்திருக்க மெய்யடக்கப் பயிற்சிகள் அவசியமாகின்றன. தலை முதல் கால்வரை அனைத்து நாடி நரம்புகளையும் இயக்கி உடலின் சக்தியைப் பெருக்க கூடிய பயிற்சி முறைகள் குறித்து இங்கு காணவுள்ளோம். உடல் தசைகளை அசைத்தல், சுழற்றல், நீட்டல், மடக்கல், உந்தல் போன்ற எளிய பயிற்சிகளின் மூலம் உடலை முறைப்படுத்தி உயிர் சக்தியைப் பெருகச் செய்து நம்மை நெடுநாள் வாழவைக்கும் உடற்பயிற்சி முறைகளை இங்கு நாம் காணப்போகிறோம்.

உடலின் தத்துவம் அறியாது உலகையே அறிந்து என்ன பயன்...

அந்த ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், பிச்சைக்காரனைப் போல இருந்த பெரியவரிடம், ``இந்த ஊரில் மகாலிங்கத்தைத் தெரியுமா, அவர் வீடு எங்குள்ளது!" என்று கேட்டாராம். அந்தப் பெரியவர் ``உனக்கு சம்பந்தனைத் தெரியுமா" என்று பதில் கேள்வி கேட்டாராம்.

அந்தப் புதியவர் ``ஐயா அந்த சம்பந்தன் நான்தான்" என்றாராம். அந்தப் பெரியவர் ``நீதான் சம்பந்தன் என்று உனக்கு எப்படி தெரியும்; எப்போதிலிருந்து நீ சம்பந்தன் ஆனாய்; சம்பந்தன் என்பவன் யார்; சம்பந்தனை உனக்கு எவ்வளவு தெரியும்; சம்பந்தவன் என்பவன் ஒருமையா, பன்மையா..." என்றெல்லாம் பல கேள்வி கேட்டதும் அந்தப் புதியவர் குழம்பினார்.

மெய்யடக்கப் பயிற்சி
மெய்யடக்கப் பயிற்சி

அந்தப் பெரியவரோ, ``சம்பந்தமாகிய உனக்கே உன்னை தெரியவில்லை, பிறகெப்படி மகாலிங்கத்தைத் தெரிந்து கொள்வாய்; நான் சொன்னாலும் உன்னால் கண்டுகொள்ள முடியாது, போ... போய் சம்பந்தனைத் தெரிந்துகொண்டு வா... மகாலிங்கத்தை காட்டுகிறேன்!" என்று பெரியவர் சொல்ல, அப்போதே தன்னைத்தான் அறிந்துகொள்ள அவரிடமே சீடனாக சேர்ந்துவிட்டாராம் அந்தப் புதியவர்.

இப்படித்தான் நாம் எல்லோருமே இருக்கிறோம். நம்மை நாம் அறிந்துகொள்ளாமலே பல நூறு வெற்று விஷயங்களை அறிந்திருக்கிறோம். முதலில் நம்மை அறிந்துகொள்ள விரும்புவோம்.

ஜீவராசிகள் அனைத்தும் இன்புற்று வாழ்க! இறையாற்றல் உலகெங்கும் நிறைக! எங்கும் அன்பே எல்லாமாய் நிற்க...

ஆகஸ்ட் 2, 2020 ஞாயிறுக்கிழமை காலை 7 முதல் - 8.30 மணி வரை.

முன்பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு