Published:Updated:

திண்டுக்கல்: 3 மணி நேரம் மட்டும் நடத்தப்படும் கோயில் திருவிழா - 2,000 ஆடுகள் வெட்டி நேர்த்திகடன்!

ஸ்ரீ முனியப்பன் கோயில்

​கோயில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்ப சாமிக்குப் படைத்து வழிபட்டனர்.​ கோயில் முன்பு வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் ​டன் கணக்கில் ​பக்தர்களால் சூறை விடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது​.​

திண்டுக்கல்: 3 மணி நேரம் மட்டும் நடத்தப்படும் கோயில் திருவிழா - 2,000 ஆடுகள் வெட்டி நேர்த்திகடன்!

​கோயில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்ப சாமிக்குப் படைத்து வழிபட்டனர்.​ கோயில் முன்பு வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் ​டன் கணக்கில் ​பக்தர்களால் சூறை விடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது​.​

Published:Updated:
ஸ்ரீ முனியப்பன் கோயில்
​திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி கிராமத்தில் கோட்டைக்குள் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ முனியப்பன் கோயில் பாரம்பர்ய புரட்டாசித் திருவிழா நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா 3 மணி நேரத்திற்குள் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது.
ஸ்ரீ முனியப்பன் கோயில்
ஸ்ரீ முனியப்பன் கோயில்

​விழாவில் அரிவாளுடன் சாமியாடி வந்த பூசாரிகள் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்ப சாமிக்குப் படைத்து வழிபட்டனர். கோயில் முன்பு வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் டன் கணக்கில் பக்தர்களால் சூறை விடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

​பின்னர் வீட்டுக்கு ஒரு கிடா என்று 2,000 ஆடுகள் பலியிடப்பட்டன. பின்னர் முனியப்ப சுவாமி ஊர்காவல் வாங்கும் நிகழ்வு நள்ளிரவில் நடைபெற்றது. இரவு 9 மணிக்குத் தொடங்கிய திருவிழா அடுத்தடுத்த நிகழ்வு என விழா நடைமுறைகள் அனைத்தும் நடைபெற்று 12 மணிக்கு முடிவடைந்தது. 

ஸ்ரீ முனியப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள்
ஸ்ரீ முனியப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள்

இந்த 3 மணி நேரத்தில் செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூர், நல்லாம்பிள்ளை, சுந்தர்ராஜபுரம், வத்தலகுண்டு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஒரே நேரத்தில் 50,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற பக்தரிடன் பேசினோம். "முனியப்பன் மிகவும் துடியான சாமி என்பதால் 3 மணி நேரத்துக்குள் விழாவை முடித்துவிட வேண்டும் என்பதை எங்கள் முன்னோர்கள் பின்பற்றினர். அதன்படி நாங்களும் பின்பற்றி வருகிறோம். புரட்டாசி மாதம் தொடங்கும்போது செவ்வாய் சாட்டுதல் நிகழ்வு தொடங்கும். அப்போதிருந்து ஊர் மக்கள் விரதம் இருக்கத் தொடங்குவார்கள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு இரவு 9 மணிக்கு விழா தொடங்கும் சாமியாடி வந்ததும் மக்கள் பொங்கல் வைத்து வழிபாட்டைத் தொடங்குவார்கள். பிறகு மொட்டை அடிப்பது, ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது என அனைத்தும் 3 மணி நேரத்துக்குள் முடித்து அனைவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவோம். மறுநாள் காலை கறிசமைத்து விருந்து வைப்போம். வெளியூரில் இருந்து வரும் உறவினர்கள் அசைவ உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் யாரும் ஊரைத் தாண்டி சாமிக்கு வெட்டிய ஆட்டுக்கறியை எடுத்துச் செல்லக் கூடாது. 

ஸ்ரீ முனியப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள்
ஸ்ரீ முனியப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள்

குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், கல்வி, திருமண வரன் உள்ளிட்டவற்றுக்காக வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டியவை நடந்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் புரட்டாசிப் பொங்கலுக்கு எங்கள் ஊருக்கு வந்துவிடுகின்றனர்" என்றார்.