Published:Updated:

குருவாயூர்: ரூ.18 லட்சம் தார் ஜீப் ரூ.43 லட்சத்துக்கு ஏலம்... பிரசாதம் என வாங்கியவர் நெகிழ்ச்சி!

குருவாயூர் கோயிலில் ஏலம் விடப்பட்ட தார் ஜீப்

"மஹிந்திரா தார் ஜீப்பை முதலில் ஏலம்விட்ட சமயத்தில் எங்களுக்குத் தகவல் தெரியாது. இப்போது ஏலம் விடும்போது தகவல் தெரிந்துகொண்டு வந்து ஏலத்தில் கலந்துகொண்டோம். இது குருவாயூரப்பனின் பிரசாதம்" என்கிறார் தார் ஜீப்பை ஏலம் எடுத்த விக்னேஷின் தந்தை விஜயகுமார்.

குருவாயூர்: ரூ.18 லட்சம் தார் ஜீப் ரூ.43 லட்சத்துக்கு ஏலம்... பிரசாதம் என வாங்கியவர் நெகிழ்ச்சி!

"மஹிந்திரா தார் ஜீப்பை முதலில் ஏலம்விட்ட சமயத்தில் எங்களுக்குத் தகவல் தெரியாது. இப்போது ஏலம் விடும்போது தகவல் தெரிந்துகொண்டு வந்து ஏலத்தில் கலந்துகொண்டோம். இது குருவாயூரப்பனின் பிரசாதம்" என்கிறார் தார் ஜீப்பை ஏலம் எடுத்த விக்னேஷின் தந்தை விஜயகுமார்.

Published:Updated:
குருவாயூர் கோயிலில் ஏலம் விடப்பட்ட தார் ஜீப்

கேரள மாநிலத்தின் பிரசித்திபெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு மஹிந்திரா நிறுவனம் சார்பில் 4 வீல் டிரைவ் கொண்ட தார் ஜீப் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நன்கொடையாக வழங்கப்பட்டது. கோயிலுக்கு அந்த தார் ஜீப்பைப் பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. 'குருவாயூர் தேவசம்' என போர்டு மாட்டப்பட்டதுடன் KL 46 Y 9454 என்ற பதிவு எண்ணும் பெறப்பட்டது. ஆனால் அந்த மஹிந்திரா தார் ஜீப் ஆஃப் ரோடு மாடல் என்பதால் அதை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் துபாயில் வசிக்கும் இந்தியரான அமல் முகமது அலி என்பவர் சார்பில் சுபாஷ் பணிக்கர் என்பவர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொண்டார். சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்புகொண்ட தார் ஜீப்பின் ஆரம்ப விலை 15 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ரூ.15.10 லட்சத்துக்கு முகமது அலி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். இது சம்பந்தமாகச் சிலர் வழக்குத் தொடுத்தனர். இதையடுத்து மறு ஏலம் அறிவிக்கப்பட்டது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஏலம்விடப்பட்ட மஹிந்திரா தார்
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஏலம்விடப்பட்ட மஹிந்திரா தார்

அதன்படி இன்று குருவாயூர் கோயிலில் வைத்து மஹிந்திரா தார் ஜீப் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 15 பேர் கலந்துகொண்டனர். ஏலத்தொகை கடைசியாக 43 லட்சத்திற்குச் சென்று நின்றது. துபாயில் 'வெல்த் ஐ குரூப் ஆஃப் கம்பெனி' எம்.டி-யாக இருக்கும் அங்காடிப்புறத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 43 லட்சம் ரூபாய்க்கு கார் ஜீப்பை ஏலத்தில் எடுத்தார். விக்னேஷ் சார்பில் அனூப் என்பவர் ஏலத்தில் கலந்துகொண்டார். விக்னேஷின் தந்தை விஜயகுமாரும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டார். 43 லட்சம் ரூபாயுடன் அதற்கான 12% ஜி.எஸ்.டி தொகையையும் ஏலம் எடுத்த விக்னேஷ் செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி விக்னேஷின் தந்தை விஜயகுமார் கூறும்போது, "மஹிந்திரா தார் ஜீப்பை முதலில் ஏலம்விட்ட சமயத்தில் எங்களுக்குத் தகவல் தெரியாது. இப்போது ஏலம் விடும்போது தகவல் தெரிந்துகொண்டு வந்து ஏலத்தில் கலந்துகொண்டோம். இது குருவாயூரப்பனின் பிரசாதம் என்பதால் எவ்வளவு தொகையாக இருந்தாலும் ஏலம் எடுக்க வேண்டும் என என் மகன் கூறியிருந்தான். 43 லட்சம் ரூபாய்க்குத் தார் வாகனம் ஏலத்தில் கிடைத்ததைச் சொன்னபோது என் மகன் மகிழ்ச்சி அடைந்தான். நாங்கள் குருவாயூரப்பனின் பக்தர்கள். ஒவ்வொரு மாதமும் குருவாயூர் கோயிலுக்கு வருவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism