Published:Updated:

பெருந்தொற்று அச்சம் தவிர்க்கும் அபூர்வ மூச்சுப் பயிற்சி வகுப்பு... நீங்களும் பங்கேற்கலாம்!

மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி

உடல், உணவை விட்டமின்கள், உலோக சத்துக்கள், புரதம், கொழுப்பு அமிலங்கள் எனப் பிரிப்பதுபோல், சுவாசிக்கும் காற்றையும் பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன், தனஞ்சயன் என தசவாயுக்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு வாயுவும் ஒரு வேலையைச் செய்கிறது.

மனித உடல், பல ரகசியங்களையும், விசித்திர சக்திகளையும் உள்ளடக்கியது, இதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் மனிதன் பல சிறப்பான நிலைகளை அடையவே பல யோக, ஞான, ஆன்ம சாதனைகளை நம் முன்னோர்கள் வகுத்து நமக்குக் கலைகளாக, சூத்திரங்களாகக் கொடுத்துள்ளனர். மனிதன் உயிர் வாழ மிக ஆவசியனானது காற்று. உணவின்றி உயிர் வாழப் பல சூத்திரங்கள் உள்ளன, அனால் காற்றின்றி வாழ எவ்வழியுமில்லை. காற்றில் கலந்திருக்கும் பிராண ஆற்றல் அதாவது உயிர் ஆற்றல் உடலின் இயக்கத்திற்கு மிக அவசியமாகும், ஒருவரின் உயிர் பிரிந்தால் கூட பிராணன் போய்விட்டது என்றுதான் கூறுவர். எனவே காற்று அதை சுவாசிப்பதால் பெறக்கூடிய பிராண சக்தி நம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமாகும்.

சராசரி மக்களாகிய நாம், உணவை ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொள்கிறோம், காற்றை எவ்வளவு முறை உட்கொள்கிறோம்... அது ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல் மாறுபடும். அதையே நம் முன்னோர்கள் கணக்கின் படி ஒருவனின் ஆயுள் காலமாக கணிக்கப்படுகிறது. எவ்வளவு ஆழமாக சுவாசிக்கிறோமோ அவ்வளவு ஆயுள் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் நாம் ஆழமாக சுவாசிப்பது இல்லை. இதற்குக் காரணம் என்ன? சோம்பேறி தனம் என்பர். இல்லை. இதற்கும் காரணம் காற்றுதான். ஆச்சர்யமாக உள்ளது அல்லவா?

யோகா
யோகா

நம் உணவை கிரகித்து நமது உடல் விட்டமின்கள், உலோக சத்துக்கள், புரதம், கொழுப்பு அமிலங்கள் எனப் பிரிப்பதுபோல், நாம் சுவாசிக்கும் காற்றையும் பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன், தனஞ்சயன் என தசவாயுக்களாகப் பிரிக்கிறது. இந்த ஒவ்வொரு வாயுவும் ஒவ்வொரு வேலையை உடலில் செய்கிறது.

கை, கால்களை அசைக்க வேண்டும், உணவை கிரகிக்க வேண்டும், மலத்தை தள்ளவேண்டும், பசி, காமம், கோபத்தை உண்டாக்க வேண்டும் ஏன் நீங்கள் இந்த பகுதியைப் படிப்பதற்கு உங்களின் கண்களை அசைப்பதும் இந்த தசை வாயுக்களின் ஒன்றின் பணியே. எனவே இந்த வாயுக்களை பற்றி அறிவதும் அவற்றின் இயக்கத்தைப் புரிந்து சில யோகங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் எந்த ஒரு நோயையும் வெல்லலாம். இது சாத்தியம்.

தற்போது நிலவும் நோயானது காற்றில் பரவக்கூடிய கொடிய நோயாகும், அதிலும் நமது நுரையீரலைத் தொற்றி உடலுக்கு பிராணன் பற்றாகுறையை ஏற்படுத்தி உடலை செயலிழக்க செய்வதே இந்தத் தொற்றுக் கிருமியின் செயல்பாடாகும். இதிலிருந்து எவ்வாறு நம்மைக் காப்பது என்ற அறிவு நமக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

நம் மூக்கின் வழியாக சுவாசிக்கப்படும் காற்று நுரையீரலுக்குப் போவதற்கு முன்பு நமது மூக்கு மேல் புறமுள்ள சர நாடியை அடைகிறது. இதுவே நம் உடலியக்கத்தைத் தீர்மானிக்க கூடிய இடகலை பிங்கலை நாடியாகும், இங்கு நம் பிராணன் பிரிகிறது, பிறகு நுரையீரலுக்குச் செல்கிறது. இந்த தொற்றானது நுரையீரலை பாதிப்பதற்கு முன் நம் சர நாடியை பாதிக்கிறது, எனவே தான் நமக்கு மணம் புலப்படுவதில்லை. இவற்றை சுத்தி செய்வது வைரத்தை வைரத்தால் அறுபது போன்று. அதே சுவாச ஓட்டத்தை சரிவர ஆழ்ந்து முறையாகச் செய்து வந்தால் தொற்று எனப்பட்ட இடத்திற்கு விரைவில் பிராணன் சேர்ந்து தொற்றைக் களையும் ஆற்றலைப் பெறுகிறது. எந்த ஆக்ஸிஜன் வசதியும் இல்லாமலே விரைவில் நம்மை நோய் தொற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும்.

மூச்சுப் பயிற்சிகள்
மூச்சுப் பயிற்சிகள்

இதில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சில எளிய பயிற்சிகளான முதல் நிலை மூச்சி பயிற்சி, நாடி சுத்தி பிராணாயாமம், கும்பக பிராணாயாமம் போன்றவற்ற முறையாகக் காலை மாலை பயிற்சி செய்து வந்தாலே, நோய்த் தொற்று நிச்சயம் வராது வந்தவர்களும் விரைவில் அதிலிருந்து விரைவில் குணம் கொள்ளலாம்.

சில பிராண ஒப்பம் நிறைந்த மூலிகைகளான நொச்சி, வேப்பிலை, வேப்பம் பூ, சீந்தில் போன்றவற்றால் பயன்படுத்துவதாலும் (ஆவிபிடிக்கலாம், சீந்திலை கசாயமிட்டு அருந்தலாம்), நம்மை நோயின்றி காத்து கொள்ளலாம்.

மூச்சுப் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை நம் வாசகர்களுக்குக் கற்பிக்கும் வகையில் சக்திவிகடன் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்துடன் இணைந்து அபூர்வ மூச்சுப் பயிற்சி வகுப்பு ஒன்றினை இணையம் மூலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதை சித்தக் கலைகள் ஆய்வு மையத் தலைவர் மு. அரி அவர்கள் வழங்க இருக்கிறார். இந்த நிகழ்வு வரும் 1.5.2021 அன்று காலை 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இதில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு