Published:Updated:

`இளைஞர்களுக்கான இந்து மதம்' - ராமகிருஷ்ண மடத்தில் கருத்தரங்கம்!

எஸ்.கதிரேசன்

சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில், `இளைஞர்களுக்கான இந்து மதம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

விவேகானந்தர்
விவேகானந்தர்

விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவு உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்தச் சொற்பொழிவுக்குப் பிறகு உலகம் முழுவதும் இந்தியர்களின் பெருமையும் இந்துமதத்தின் மகத்துவமும் பரவத் தொடங்கியது.

விவேகானந்தர்
விவேகானந்தர்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் 125-ம் ஆண்டு விழா, ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில், `இளைஞர்களுக்கான இந்து மதம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கி, மாலை 5.30 மணிவரை கருத்தரங்கம் நடைபெறும்.

விவேகானந்தர்
விவேகானந்தர்

இதற்காக 18 வயது முதல் 35 வயது வரையுள்ள எவரும் இந்தக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் அனுப்பலாம். இவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் 18 கட்டுரைகள் அன்று நடைபெறும் கருத்தரங்கில் வாசிக்கப்படும். சிறந்த கட்டுரைகளுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20.8.19

கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 30.8.19

கட்டுரை
கட்டுரை
pixabay.com

இது பற்றிய மேலதிக தகவல்களை rkmath.in/nshy19 என்ற இணையதளத்தில் அறியலாம்.